ஆடு வளர்ப்பு என்பது விலங்கு வளர்ப்பில் அதிக லாபம் தரும் தொழில்களில் ஒன்று. ஆட்டின் இறைச்சி, பால், கம்பளி மற்றும் எரு அதிக விற்பனை வாய்ப்புகளைக் கொண்டது. பெரும்பாலும் ஆடு என்பது பிற விலங்குகளான கோழி மற்றும் மாடு போன்றவற்றுடன் இணைந்து வளர்க்கப்படுகிறது. எனினும் ஆடு வளர்ப்பை (அதாவது செம்மறி மற்றும் வெள்ளாடு) திறம்பட செய்தால் அதிக லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஆட்டு இறைச்சியில் கொழுப்பு சிறிது அதிகம் என்றாலும் அதன் ஊட்டச்சத்து மதிப்பு மிகவும் அதிகம். குறிப்பாக நமது உடல் செல்கள், ரத்த செல்கள், மூளை செல்கள் புதிதாகவும் நன்றாக செயல்படவும் காரணமான வைட்டமின் பி வகைகளான B1 (தியாமின்), B2 (ரிபோஃப்ளேவின்), B3 (நியாசின்), B5 (பேண்டோதெனிக் அமிலம்), B6 (பைரிடாக்சின்), B7 ( பயோட்டின்), B12 (சயனோகோபாலமின்) மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது.
எலும்புகளை வலுப்படுத்தும் கொலாஜென் நிறைந்த ஆடு
பெரும்பாலும் ஆடு இறைச்சிக்காக வளர்க்கப்பட்டாலும் ஆட்டின் எலும்பில் உள்ள கொலாஜென் மனிதனின் எலும்பு சார்ந்த பிரச்சனைகளான எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு போன்றவற்றைத் தீர்க்கவும் ஒட்டுமொத்த எலும்பின் உறுதியை வலுப்படுத்தவும் உதவுகிறது.
இந்த நிகழ்வுகளில் ஆட்டின் எலும்பு சூப் மிக சிறந்த பலன் அளிக்கிறது. அதேபோல, நமது குழந்தை பருவம் முதல் தற்போது வரை விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆட்டு கால் சூப் வழங்குவதைப் பார்த்திருப்போம். ஏனென்றால் அந்த அளவிற்கு நமது எலும்பை உறுதிப்படுத்தும் திறன் கொண்டது.
மேலும், ஆட்டின் ஈரல் நமது உடல் அதிகம் உறிஞ்சிக்கொள்ளும் ஹீம் இரும்பு சத்து, பி வைட்டமின்கள், வைட்டமின் A மற்றும் செலினியம் உள்ளது. வைட்டமின் A பார்வை திறனை மேம்படுத்துகிறது இரும்பு சத்து உங்கள் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு நில்லாமல் ஒட்டுமொத்த உடல் நலத்தை மேம்படுத்தி நம்மை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
ஊட்டச்சத்துக்களின் ஊற்று – ஆட்டு இறைச்சி
குறைவான கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு, அதிக இரும்புச்சத்து, ரத்த செல்களை உருவாக்க தேவையான சயனோகோபாலமின், இரத்த அழுத்தம் மற்றும் செல் செயல்பாடுகளைச் சீராக்க உதவும் பொட்டாசியம், உடலின் கட்டமைப்பை மேம்படுத்தும் புரதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜிங்க், வைட்டமின் B2 போன்ற ஊட்டச்சத்துகள். மேலும், DNA வை உருவாக்கவும், செல் சிதைவு மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்க தேவையான செலினோபுரதங்கள் அதிக அளவில் உள்ளன.
9 அமினோஅமிலங்கள் நிறைந்த எளிதாக செரிக்கும் ஆட்டு இறைச்சி
ஆட்டு இறைச்சியில் லைசின், டிரோனைன், வேலின், மெத்தியோனைன், ஐசோலூசின், லூசின், பினைலலனின், டிரிப்டோபன், ஹிஸ்டைடின், அர்ஜினைன் மற்றும் அஸ்பார்டிக் அமிலம். மேலும், புரதச் சத்து நிறைந்த எளிதில் செரிக்கக்கூடிய இறைச்சிகளில் ஆட்டு இறைச்சிக்கு முக்கிய இடம் உள்ளது.
கோமாதாவை விஞ்சும் GOAT
தாய்ப்பாலுக்கு அடுத்து மனிதர்களின் கால்சியத் தேவையைப் பூர்த்தி செய்வதில் மாட்டு பால் முக்கிய இடம் வகிக்கிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஊட்டச்சத்தில் மாட்டு பாலை விஞ்சும் பால் உள்ளது. ஆம். அதுதான் ஆட்டு பால். ஒரு நூறு மிலி ஆட்டுப்பாலில் உள்ள கலோரி, புரதம் (10 கிராம் மாட்டு பால் 8 கிராம்), கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை, சோடியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் மிகவும் அதிகமாக உள்ளது.
எனவே, ஆட்டு பாலை பாலாக விற்று லாபம் பெறலாம். ஆட்டு பாலை மதிப்புக்கூட்டி அதாவது தயிர், மோர், வெண்ணை, நெய், பன்னீர், சீஸ் என மதிப்புக்கூட்டி விற்பனை வாய்ப்பு மற்றும் லாபத்தை அதிகப்படுத்தலாம்.
எச்சத்தில் உச்சம் தொடுங்கள் – ஆட்டு எரு
ஆட்டின் பால், இறைச்சி மட்டும் இல்லாமல் அதன் எருவும் வணிக முக்கியத்துவம் கொண்டது. ஏனென்றால் மாட்டு எருவைப் போல ஆட்டு எருவில் 2 மடங்கு தழைச் சத்து, சாம்பல் சத்து மற்றும் மணிச் சத்து உள்ளது. மேலும், போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் நுண்ணூட்ட சத்துக்களும் அதிகமாக உள்ளது. ஒரு ஆடு ஒரு ஆண்டில் 500 முதல் 750 கிலோ எருவை உற்பத்தி செய்கிறது. எருவை உங்கள் நிலத்திற்குப் பயன்படுத்தலாம் அல்லது பாக்கெட்டுகளில் அடைத்து இயற்கை விவசாயம் செய்வோர்க்கு விற்கலாம். எனவே, ஆடு வளர்ப்பில் அனைத்தும் லாபமே.
முடிவுரைஆடு வளர்ப்பு வழியாக ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது தொடர்பான அனைத்து தகவல்களையும் ffreedom App இல் அறிந்துகொண்டோம்