இறைச்சி, முட்டை மற்றும் தோல் போன்ற தேவைகளுக்காக விலங்குகளை வணிக ரீதியாக வளர்ப்பது மிகவும் லாபம் தரும் தொழிலாக உள்ளது. கோழி, ஆடு வளர்ப்பைப் போல மீன் வளர்ப்பும் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. வணிக ரீதியாக மீன்களை குளங்கள், ஏரிகள் அல்லது கடலில் வளர்த்து விற்பனை செய்வது நல்ல லாபம் தரும் தொழில்.
மனிதன் தனது புரதத் தேவைக்காக பெரும்பாலும் விலங்குகளைச் சார்ந்துள்ளான். உதாரணமாக விலங்குகளின் இறைச்சி, பால் மற்றும் முட்டை போன்றவை. புரதம் என்றவுடன் பெரும்பாலானவர்களுக்கு கோழி தான் முதலில் நினைவிற்கு வரும். அடுத்து ஆடு.
ஆனால், ஊட்டச்சத்தில் இந்த இரண்டையும் விஞ்சி நிற்கும் ஒரு உணவு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். அதுதான் மீன். மீன்கள் குளங்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் பாசிகள் மற்றும் குளத்தின் அழுக்குகளைத் தின்று வளர்கின்றன. வணிக ரீதியாக மீன்களை வளர்க்க தேவையான இருப்பிடம், நீர் நிலை, தீவனம் பற்றி அறிவோம். மீன் வளர்ப்பு என்பது மிகவும் லாபம் தரும் ஒரு தொழில். நாம் மீன்களைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வணிக ரீதியாக வளர்ப்பு மிகவும் சிறந்த தொழில் மற்றும் அதிக லாபம் தரும் தொழில்.
பங்காசியஸ் மீன் என்பது நமது ஊர்களில் கெளுத்தி மீன் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நன்னீர் மீன். அனைத்து சூழல்களுக்கும் ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்ளும் திறன் கொண்டது. 30℃ வரை வெப்பத்தைத் தாங்கி வளரும் கெளுத்தி மீன் தற்போது வணிக நோக்கம் மற்றும் ஏற்றுமதிக்காக அதிகம் வளர்க்கப்படுகின்றன.
விரைவான வளரும் திறன் கொணட அதிக நாட்கள் உயிர் வாழும் மீன்
கெளுத்தி மீன்கள் குறைவான ஆக்சிஜன் கரைத்திறன் உள்ள நீரில் வளரும் திறன் கொண்டது. கெளுத்தி மீன்குஞ்சுகள் 2 மாதங்களில் 10-12 செமீ நீளமும் 14-15 கி எடையும் அடைந்துவிடுகின்றன. 20 வருடங்கள் வாழுகின்றன. 8 மாதங்களில் 800 முதல் 1100 கிராம் எடையை அடைந்துவிடுகின்றன. குளத்தில் வளர்க்கப்பட்டால் அதிகபட்சம் 25 கிலோ எடையை அடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, குறைந்த காலத்தில் அதிக லாபம் பெற விரும்புவோரின் சிறந்த தேர்வாக கெளுத்தி மீன் வகைகள் உள்ளன.
மீசை உள்ள நீர் வாழ் விலங்கு – கெளுத்தி
மீசையுள்ள மிருகம் எது? என்றால் பூனை என்று அனைவரும் கூறிவிடுவர். அதேபோல மீசையுள்ள மீன் எது? என்றால் கெளுத்தி என்று அனைவரும் கூறிவிடும் அளவிற்கு இந்த மீன் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. மேலும் இந்த மீன்கள் அனைத்து விதமான நீர்நிலைகளிலும் வளர்வதால் பெரும்பாலான மக்களால் விரும்பி வளர்க்கப்படுகிறது. இவை அதிகம் வளர்க்கப்படுவதால் விலை குறைவாக கிடைக்கிறது. பெரும்பாலும் கிராமங்களில் விவசாயிகளால் தங்கள் கிணறுகளில் வளர்க்கப்படுகின்றன.
கொழுப்பு இல்லாத உயர்தரப் புரதம்
கோழி, ஆடு இறைச்சிகளில் நன்மைகள் இருந்தாலும் அதிலுள்ள கொழுப்பு காரணமாக அவற்றைத் தவிர்ப்போருக்கு மிக சிறந்த தேர்வாக இருப்பது மீன். ஏனென்றால், மீனில் உயர்தர புரதம் உள்ளது. மேலும், இந்தப் புரதம் கொழுப்பு இல்லாத புரதம் என்பதால் உடல் பருமன் உள்ளவர்கள், வயதானவர்கள், இதய நோய் உள்ளவர்கள் என அனைவருக்கும் ஏற்றது.
மேலும், மீனில் இருந்து பெறப்படும் எண்ணெய் பலவகையான நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
பல்வேறு ஊட்டச்சத்துகளின் ஆதாரம் – கெளுத்தி மீன்
பொதுவாக, அசைவ உணவுகளில் மட்டுமே வைட்டமின் B போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளது. அதிலும் மீன் உணவில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் உள்ளது. எனவே, பெரும்பாலான மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. உணவு தேவைக்காக வளர்க்கப்படும் கெளுத்தி மீன்களில் உயர்தர புரதம், வைட்டமின் பி12, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது.
மேலும், சோடியம், செலினியம் மற்றும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு தாது உப்புக்களும் நிறைந்துள்ளது. இந்த மீனில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உடல் எடையைக் குறைக்கவும், இதய நோய் வராமல் தடுக்கவும், தசை வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
முடிவுரை
பங்காசியஸ் மீன் வளர்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் தொடக்கம் முதல் இறுதி வரை தெளிவாகவும், விரிவாகவும் ffreedom ஆப் இல் அறிந்துகொண்டோம்.