மனிதன் எப்போதும் தேவைகளை நோக்கி சென்றாலும் பகட்டான வாழ்க்கை மீதான ஈர்ப்பு குறைவதில்லை. பகட்டு என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவது பட்டு துணி. ஏனென்றால் அதன் பளபளப்பு மற்றும் நழுவும் தன்மை, மென்மையாகவும் இலகுவாகவும் இருத்தல். பட்டு ஆடைகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உள்ளது.
பொதுவாக பருத்தியில் நெய்யப்பட்ட ஆடைகளை விட பட்டு ஆடைகள் மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது. பட்டு என்பது ஒரு வகையான புழுவின் உமிழ்நீரில் இருந்து உருவாகும் இழை. புழுக்களை கொதிநீரில் இட்டு பட்டு நூல்கள் பெறப்படுகின்றன. பின்னர் தேவையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
மேலும், நகைகள் அணியாவிட்டாலும் ஒரு பகட்டான தோற்றத்தை உருவாக்க பட்டு துணியால் முடியும். அதோடு பட்டை மறுவிற்பனை செய்யும் வாய்ப்பும் உள்ளது. அதாவது பழைய, கிழிந்த பட்டு துணிகளுக்கு நல்ல சந்தை மதிப்பு உள்ளது. இது நமக்கு சிறந்த லாபத்தைத் தருகிறது.
பட்டிற்கான தேவை என்பது எப்போதும் நிலையானது, மாறாதது. அதாவது, விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பல விதமான நிகழ்வுகளில் பட்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை எளிது.
மென்மையான, மிருதுவான தோலா? இல்லை இழை
பட்டு என்பது மென்மையான, மிருதுவான, பளபளப்பான ஒரு இழை. எவ்வளவு மென்மையானதோ அந்த அளவிற்கு வலிமையாகவும் இருக்கும். குறிப்பாக, அனைத்து இயற்கையான இழைகளை விட பட்டு இழை மிகவும் வலிமையானது. பட்டு துணியை அணிவது மிகவும் சௌகரியமானது, வசதியானது. உங்கள் ஒட்டுமொத்த தோற்றத்தையே மாற்றும் திறன் கொண்டது. இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளிலும் முக்கிய நிகழ்வுகளில் பட்டு பயன்படுத்தப்படுகிறது.
புழுவிலிருந்து பெறப்படும் பகட்டான இழை
பட்டு இழை என்பது பெரும்பாலும் பாம்பிக்ஸ் மோரி எனப்படும் கம்பளிபுழுவில் இருந்து பெறப்படுகிறது. இந்த புழுவிற்கு மல்பெரி இலைகளை உணவாக கொடுத்தால் அது தனது எச்சிலால் ஒரு கூட்டை உருவாக்க தொடங்கும். பின்னர் அந்தக் கூட்டை கொதிநீரில் இட்டால் இழைகளைத் தனியாக பிரித்து எடுத்துவிடலாம். பிரித்த இழைகளை நமது தேவைக்கு ஏற்ப ஆடைகள் அல்லது மருத்துவ இழையாக பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது புழுக்களைக் கொல்லாமல் இழைகளைப் பிரித்தெடுக்கும் முறையில் அஹிம்சா பட்டு இழைகள் தயாரிக்கப்படுகின்றன.
அஹிம்சா பட்டு முறையில் கூட்டு புழு நிலையில் புழுக்கள் கொல்லப்படாமல் அந்துப்பூச்சி நிலை வரை வளர அனுமதிக்கப்படுகிறது. பின்னர் பட்டு கூடுகள் பெறப்பட்டு பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது. இங்கு புழுக்களைக் கொல்வது தடுக்கப்படுகிறது.
அணிவதற்கு எளிதான சௌகரியமான இழைகளின் ராணி
தங்கத்தைப் போல பட்டு கருதப்படுவதற்கான காரணம் அதன் தன்மையே. பட்டு இழை என்பது எந்த அளவிற்கு வலிமையானதோ அந்த அளவிற்கு இலகுவானது. எனவே, பிற இழைகளால் ஆன உடைகளை விட பட்டு இழைகளால் ஆன உடை அணிவதற்கு மிகவும் வசதியானது, சௌகரியமானது.
எத்தனை விதமான உடைகள் அணிந்தாலும் பட்டை அணியும் போது கிடைக்கும் மரியாதை என்பது தனித்துவமானது. எனவே, பட்டு “இழைகளின் ராணி” எனப்படுகிறது. பட்டு, சட்டைகள், சூட்கள், டை கள், பிளவுஸ்கள், உள்ளாடைகள், குளிர்கால உடைகள் மற்றும் உறங்குவதற்கான படுக்கைகள் தயாரிக்க பயன்படுகின்றன.
மேலும், அனைத்து விழாக்கள், நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் பட்டு அணிந்து செல்லவே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். ஆண்கள், தற்போதைய நவீன உலகில் பட்டில் தயாரித்த நவீன ஆடைகளை நிறுவன நிகழ்ச்சிகள், கல்யாணம் மற்றும் பிறந்த நாள் விழா என அனைத்து வகையான நிகழ்ச்சிகளிலும் அணிய விரும்புகின்றனர்.
மேலும், பட்டை எளிதாக நிறம் ஏற்றலாம். எனவே, நமக்கு விருப்பமான நிறத்தில் ஆடைகள் உருவாக்க வழிவகுக்கிறது. பெண்களின் விருப்பமான உடைகளில் பட்டுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பட்டு அவர்களைச் சிறிது மேம்பட்ட மக்களாக தோற்றமளிக்க உதவுகிறது. பட்டு பிறர் மத்தியில் பெண்களின் மதிப்பை உயர்த்துகிறது. பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
மருத்துவத்தில் தையல் நூலாக பயன்படுத்தப்படும் பட்டு
பட்டு நூலின் வலிமை காரணமாக காயங்கள், வெட்டுகள், அறுவை சிகிச்சைகளில் தையல் நூலாகப் பயன்படுகிறது. குறிப்பாக தோல், கண் மற்றும் குடல் அறுவை சிகிச்சைகளில் தையல் நூலாக பயன்படுகிறது.
மேலும், உடைந்த எலும்புகளை ஒன்றிணைக்க கட்டு போடும் நூலாகவும் பயன்படுகிறது.
முடிவுரை
பட்டு புழு வளர்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் அதாவது தொடக்கம் முதல் இறுதி வரை தெளிவாகவும் விரிவாகவும் ffreedom ஆப் வழியாக கற்றுக்கொள்ளுங்கள்.