இன்றைய காலகட்டத்தில் மக்கள் வெவ்வேறு வகையான உணவுகளைத் தேடி தேடி உண்பதால் வாத்து இறைச்சி மற்றும் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், கோழி வளர்ப்பை விட வாத்து வளர்ப்பு எளிது மற்றும் பராமரிப்பு செலவும் குறைவு. ஒப்பிட்டளவில் வாத்து கோழியை விட காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் திறன் கொண்டது.
வாத்துகளின் உணவாக பயிர்கழிவுகள், உடைத்த மக்காசோளம், வெள்ளை, சிகப்பு அரிசி போன்றவற்றை தரலாம்.
வளரும் பருவத்தினருக்கு ஏற்ற வகையில் அதிக கலோரிகள், கொழுப்புகள் மற்றும் விட்டமின்கள் நிறைந்து இருப்பதால் வாத்தின் இறைச்சி சிறந்த ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டது. வாத்தின் முட்டை கோழி முட்டையை விட பெரிதாக இருப்பதால் அதன் ஊட்டச்சத்து நன்மைகளும் அதிகமாக உள்ளது. அதாவது ஒரு வாத்து முட்டை சாப்பிடுவது 1 ½ கோழி முட்டை சாப்பிடுவதற்கு சமம். எனவே, வாத்து சிக்கனமான விலையில் சிறந்த ஊட்டச்சத்து ஆதாரமாக விளங்குகிறது.
முட்டை தேவையைப் பூர்த்தி செய்யும் தத்தி நடக்கும் பறவைகள்
கோழிக்கு அடுத்து நமது முட்டை தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கிய பறவை வாத்து. காக்கி கேம்ப்பெல், நாகேஸ்வரி, இந்தியன் ரன்னர் போன்றவை முட்டை தேவைக்காகவும் பீகிங், சீனா டக், மாஸ்க்கோவி போன்றவை கறி தேவைக்காகவும் வளர்க்கப்படுகின்றன.
இவை அதிகபட்சம் 2.5 கிலோ முதல் 2.7 கிலோ எடையை அடைகிறது. வாத்துகள் நன்றாக சுற்றி திரியும் அளவிற்கு இடம் வைத்திருப்பது நல்லது.
மேலும், அவை நன்றாக நீந்தி விளையாடும் வகையில் நீர்நிலைகள் இருப்பது மிகவும் நல்லது. இந்த அமைப்புகள் வாத்துகள் இயல்பாக இருக்க உதவுகிறது. மேலும் அதிக அளவிலான கறி மற்றும் முட்டையை வழங்குகிறது.
குறைந்த செலவில் அதிக முட்டைகள்
மேலும், வளர்ப்பு வாத்து என்பது 6 முதல் 10 ஆண்டுகள் வாழும் திறன் பெற்றது. எனவே, நீங்கள் தூய்மையான இருப்பிடம், நீர் மற்றும் நல்ல தீவனம், நோய் மேலாண்மை திறம்பட செய்தால் நீங்கள் பல மடங்கு லாபம் பெறலாம் என்பது நிச்சயம். 18 மாதங்களில் கறிக்குத் தேவையான எடையை அடைந்துவிடுகிறது.
ஒப்பீட்டளவில் வாத்து கோழியை விட அதிக முட்டைகளை விட இடும். மேலும், ஒரு வாத்து முட்டை 1 ½ கோழி முட்டை அளவிற்கு இருக்கும். அதேபோல கோழி இடும் முட்டைகளை விட வாத்து 40 முட்டைகள் வரை இடும். அதன் அடைகாக்கும் காலமும் குறைவாக உள்ளது. எனவே, வாத்து குஞ்சுகளைப் விரைவில் பெறலாம், அதன் வழியாக உங்கள் பண்ணையை விரிவுபடுத்தலாம்.
அனைத்து காலநிலைக்கு ஏற்ற பறவை
கோழி வளர்ப்புக்கு காலநிலை, தீவனம், பராமரிப்பு, நோய் மேலாண்மை மற்றும் நீர் போன்றவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். ஆனால், வாத்து காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. அதோடு அனைத்து விதத்திலும் அதாவது இருப்பிடம், உணவு, நோய் மற்றும் லாபம் கோழி வளர்ப்பை விட வாத்து வளர்ப்பு மிகவும் எளிதானது.
அத்துடன் வாத்து என்பது இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு திறன் கொண்டது மற்றும் பல்வேறு சூழ்நிலைகளான அதிக வெப்பம் மற்றும் அதிக மழை போன்ற அனைத்து காலநிலைகளையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது.
நோய் எதிர்ப்பு திறன் கொண்ட வாத்து
வாத்து, கோழிகளைத் தாக்கும் பல விதமான பறவை காய்ச்சல் நோய்களுக்கு எதிரான திறன் கொண்டது. எனவே, பராமரிப்பு செலவு குறைவானது.
எனினும், வாத்தின் இருப்பிடத்தைத் தூய்மையாக பராமரிப்பது, தேவையான நோய் தடுப்பு மேலாண்மையை செய்வது உங்கள் ஒட்டுமொத்த லாபத்தை அதிகரிக்க உதவுகிறது.
சிக்கனமான விலங்கு வளர்ப்பு – வாத்து வளர்ப்பு
கோழி வளர்ப்பைக் காட்டிலும் வாத்து வளர்ப்பில் பல நன்மைகள் மற்றும் லாபங்கள் உள்ளது. கோழி வளர்ப்பில் காட்டப்படும் பராமரிப்பில் பாதியளவு பராமரிப்பைக் காட்டினாலே வாத்து வளர்ப்பில் நல்ல லாபம் பெறலாம்.
வாத்து வளர்ப்பிற்கு தேவையான இருப்பிடம், தீவனம் என அனைத்தும் விலை மலிவானது. மேலும், வாத்தின் வளர்ச்சி காலம் குறைவு என்பதால் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்று விரைவில் அதாவது குறைந்த செலவில் அதிக லாபம் பார்க்கலாம். நோய் தாக்கும் அபாயமும் குறைவு என்பதால் ஒட்டுமொத்த பராமரிப்பு செலவு குறைகிறது.
முடிவுரை
வாத்து வளர்ப்பு கோர்ஸ் வழியாக வாத்து வளர்ப்புக்குத் தேவையான அனைத்து தகவல்கள், செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள் பற்றி தெளிவாகவும் விரிவாகவும் ffreedom ஆப் இல் அறிந்துகொண்டோம்.