ஒரு மாடி தோட்டம் என்பது நமக்கு தேவையான காய்கறிகள், கீரைகள் மற்றும் பூக்களை நமது மாடியில் உள்ள இடத்தில சிறப்பாக பயிரிடுவது. இம்முறையில் நமக்கு விருப்பமான காய்கறிகள் மற்றும் கீரை வளர்க்கலாம். சிறப்பாக பராமரிக்கலாம். அதாவது கத்திரிக்காய், கேரட் மற்றும் முள்ளங்கி போன்ற பயிர்களை வளர்க்கலாம். இருக்கும் இடத்தை நன்றாக பயன்படுத்தி வெவ்வேறு தாவரங்களை வளர்ப்பது, பராமரிப்பது மற்றும் அறுவடை செய்வது பற்றி அறிந்துகொள்வோம்.
மேலும், தற்போதைய காலத்தில் இயற்கை உணவின் ஊட்டசத்து தேவை காரணமாக அதற்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களின் விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. கடையில் நாம் வாங்கும் காய்கறிகள் நூறு சதவீதம் இயற்கையாக விளைவிக்கப்பட்டதா? என்று நம்மால் உறுதியாக கூற முடியாது.
எனவே, நமது வீட்டில் மாடியில் உள்ள காலி இடத்தைப் பல்வேறு காய்கறிகள், பழங்கள், கீரைகள் விளையும் தோட்டமாக மாற்றுவது நமது ஆரோக்கியத்தை அதிகரித்து நிதியையும் மேம்படுத்த உதவும். நாம் விளைவிப்பது என்பதால் தேவையில்லாத பூச்சிக்கொல்லி பயன்பாடு தவிர்க்கப்படும்.
மேலும், இயற்கை உரங்களான ஜீவாமிர்தம், வேப்பம் புண்ணாக்கு போன்றவை உங்கள் மண் வளத்தைப் பாதுகாத்து தாவரத்தின் ஊட்டச்சத்தை அதிகரிக்கிறது. இயற்கையாக விளைவிக்கப்பட்ட தாவரத் தயாரிப்புகளான காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றுக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது.
குறைவான இடம், நிறைவான லாபம்
தோட்டம் என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன? ஒரு பெரிய விசாலமான நிலப்பரப்பு அல்லவா? மாடி தோட்டத்திற்கு தேவையான இடம் நமது வீட்டு மாடியிலேயே உள்ளது. கத்திரி, வெண்டை. அவரை, சிறுகீரை என அனைத்தையும் பயிரிடலாம் மற்றும் அதிக லாபம் பெறலாம்.
மாடியில் நமக்கு உள்ள இடத்தை நன்கு திட்டமிட்டு தோட்டம் அமைக்கலாம்.
காய்கறிகள், பழங்கள், கீரைகள் என அனைத்திற்கும் தனித்தனியான இடம் அமைத்து வளர்ப்பது நீர், உரம் மற்றும் அறுவடைக்கு எளிதாக இருக்கும்.
கொரோனவால் பாதிக்கப்படாத ஒரே வணிகம்
2021, மார்ச் வரலாற்றில் மனிதர்கள் மறக்கமுடியாத மாதமாக மாறிப்போனது. காரணம், கொரோனா என்னும் பெரும்தொற்று. இக்காலக்கட்டத்தில் தடையில்லாமல் நடைபெற்ற மூன்று வணிகங்களில் பால், காய்கறி மற்றும் மளிகை வணிகம் மட்டுமே. இதில் இருந்து காய்கறி வளர்ப்பின் முக்கியத்துவத்தை அறியலாம்.
பதிவு, உரிமம், அரசு ஆதரவு, கடன்கள், மற்றும் மானியங்கள்
ஒரு மாடி தோட்டம் அமைக்க அரசு சார்பாக கிடைக்கக்கூடிய சலுகைகள், கடன்கள் மற்றும் மானியங்கள் பற்றி அறிந்துகொள்வோம். மேலும், மாடி தோட்டம் அமைக்க பெறவேண்டிய பதிவு மற்றும் உரிமம் பற்றியும் அறிந்துகொள்வோம்.
காய்கறிகள், கீரைகள் மற்றும் மலர் செடிகள்
கத்திரிக்காய், கேரட், முள்ளங்கி, வெண்டை, தக்காளி, உருளை கிழங்கு, பீட்ரூட் மற்றும் மிளகாய் போன்ற காய்கறி வகைகள், சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, புளிச்ச கீரை, வல்லாரை கீரை போன்ற கீரை வகைகள் மற்றும் ரோஜா, ஜெரேனியம், பனாமா ரோஸ், காட்டு இஞ்சி, ஷூட்டிங் ஸ்டார் மலர், நீலாம்பரி மலர், காட்டு எலுமிச்சை பூ மற்றும் நறுஞ்சுவைக் கீரை போன்ற மலர் செடிகள் என ஒரு நிலத் தோட்டத்தில் அமைக்கக்கூடிய அனைத்து விதமான தாவரங்களையும் வைக்கலாம்.
உரம், தொழிலாளர் தேவை
மாடி தோட்டத்திற்கு தேவையான உரங்கள் (ஜீவாமிர்தம், வேப்பம் புண்ணாக்கு, ஆட்டு எரு, கோழி எரு மற்றும் மாட்டு எரு) போன்ற உரங்களைப் பயன்படுத்தலாம். பூச்சி தொல்லையைக் குறைக்க வேப்பம் புண்ணாக்கு போன்ற இயற்கையான உரங்களைப் பயன்படுத்தலாம். தோட்டத்தை நிர்வகிக்க தேவையான தொழிலாளர் எண்ணிக்கை அல்லது வீட்டில் உள்ளவர்களே பார்த்துக்கொள்ள முடியுமா? என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம்.
செயற்கை உரங்களைப் பயன்படுத்தலாமா? பயன்படுத்தினால் எவ்வளவு பயன்படுத்தலாம்? மண் வளம் பாதுகாக்கப்படுமா? போன்ற கேள்விகளுக்கு தெளிவாக விடை பெறுங்கள்.
சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் லாபம்
விளைவித்த காய்கறிகளை அருகில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்வது உங்களுக்கான விளம்பரமாக அமைந்து விளைபொருள்களைச் சந்தைப்படுத்த உதவுகிறது. மேலும், இம்முறையை திறம்பட செய்வது உங்கள் வியாபாரத்தை அதிகரித்து நல்ல லாபம் பெற உதவுகிறது.
மேலும், அருகிலுள்ள காய்கறி கடைகள், பல்பொருள் அங்காடிகளில் இயற்கையாக விளைவித்த பொருட்களுக்கு அதிக தேவையுள்ளது. இது நீங்கள் அதிக லாபம் பெறவும் உதவுகிறது. இல்லையென்றால் நீங்களே வீடு வீடாக சென்று விற்கலாம். அருகிலுள்ள உழவர் சந்தை அல்லது பொது சந்தைகளில் விற்கலாம்.
முடிவுரைமாடி தோட்டம் வழியாக அதிக லாபம் பெற தேவையான அனைத்து செயல்முறைகளையும் விரிவாகவும், தெளிவாகவும் ffreedom ஆப் இல் அறிந்துகொண்டோம்.