Home » Latest Stories » விவசாயம் » சிப்பிக்குள் முத்து!! முத்து போல அதிக லாபம் தரும் விவசாயம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

சிப்பிக்குள் முத்து!! முத்து போல அதிக லாபம் தரும் விவசாயம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

by Gunasekar K
90 views

மனிதர்களின் உணவு தேவை அதிகரிப்பால் வெவ்வேறு உணவுகளுக்கான தேடல் விரிவடைந்துள்ளது. ஊட்டச்சத்துமிக்க அதேசமயம் மலிவான உணவுகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. காளான் அதில் முக்கியமான இடம் பெறுகிறது. காளான் என்பது உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கக்கூடிய ஒரு காய்கறி. இதில் போதுமான வைட்டமின் பி12, பாஸ்பரஸ், செலினியம், போலேட், வைட்டமின் D போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. 

எனவே, சைவ உணவு உண்பவர்களின் காப்பானாக காளான் உள்ளது. அதாவது, அசைவ உணவில் மட்டுமே கிடைக்கக்கூடிய மேற்சொன்ன சில ஊட்டச்சத்துகளைப் பெற காளான் உதவுகிறது. மேலும், புற்றுநோய் தடுக்க தேவையான பாலிபினால்கள், ஆன்டிஆக்சிடென்ட்கள் செலினியம் மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளது. குறிப்பாக, வெள்ளை காளானில் மேற்சொன்ன அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. 

காளான் வளர்ப்பு – அடிப்படை கேள்விகள், முதலீடு, கடன் மற்றும் அரசு திட்டங்கள் 

காளான் வளர்க்க தேவையான மூலப் பொருட்கள், முதலீடு, இடம் என்ன? காளானில் உள்ள வகைகள் என்ன? காளான் வளர்க்க ஒரு 20 x 20 அடி அறை போதும். தரைத்தளமாக இருப்பது மிகவும் நல்லது. குறைந்தபட்ச முதலீடாக ரூ.20,000  தேவைப்படுகிறது. தரமான காளான் விதைகள், வைக்கோல் போன்றவை தேவை. 

காளான் வளர்ப்பு பற்றி கொள்முதல் தொடங்கி சந்தைப்படுத்தல் வரை அனைத்து படிகளையும் தெளிவாக விளக்கும் வரைவு திட்டத்தை வங்கியில் கொடுத்து கடன் பெறலாம். சிறுதொழில் திட்டம் மற்றும் முத்ரா திட்டம் போன்றவற்றின் மூலம் கடன் பெறலாம். 

பதிவு, உரிமம் & இடம் 

100 சதுர அடியில் 10 அடி அகலம் மற்றும் 20 அடி நீளம் 400 முதல் 450 காளான் வளர்ப்பு பைகள் அமைக்கலாம். 8 அடி உயரம் வரை காளான் பைகளை  அமைக்க வேண்டும்.  

சிறுதொழில் அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். fssai உரிமம் பெற வேண்டும்.

மூலப் பொருட்கள் மற்றும் தொழிலாளர் தேவை 

குறைந்தது 2 தொழிலாளர்கள் தேவை. வைக்கோல் மற்றும் தரமான காளான் விதைகளைப் பெறலாம். காளானை வளர்க்க தரமான காளான் விதைகள், பிளாஸ்டிக் கவர்கள், வைக்கோல், காளான்களைக் கட்டி வைக்க தேவையான ரப்பர் பேண்டுகள் தேவை.   

விதைகளைத் தொற்று நீக்கம் செய்வது அவசியம். தொற்று நீக்கம் செய்வது நல்ல விளைச்சல் தந்து அதிக லாபம் பெற உதவுகிறது. 

காளான் வளர்த்தல் 

காளான் விதைகள், 12க்கு 24 அடி பிளாஸ்டிக் கவர், வைக்கோல் மற்றும் ரப்பர் பேண்டுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். விதைகள் போட்டு வைக்கோலை அதன் மேல் போட வேண்டும். இதே செயல்முறை 5 முதல் 5 அடுக்குகள் வரும் வரை திரும்ப செய்து முழுவதும் நிரப்ப வேண்டும்.

காளான் நன்கு வளர தேவையானது ஈரப்பதம். எனவே, அறையின் ஈரப்பதத்தைப் பராமரிக்க ஒரு ஹுமிடிபையர் (humidifier) வாங்க வைக்க வேண்டும். 

இதய நோயைக் குறைக்கும் காளான் 

காளானில் உள்ள எர்கோதியோனைன் மற்றும் பீட்டா குளுக்கன் இதய நோயை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைகிறது. பீட்டா குளுக்கன் என்பது ஒரு கரையக்கூடிய நார்சத்து இது கொலஸ்ட்ராலைச் செரிக்கும்படியான ஜெல்லாக மாற்றி செரித்துவிடுகிறது. பின்னர் டிரைகிளிசரைடுகள் பிடித்து வைத்து அவற்றின் உறிஞ்சுதலைத் தடுக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை குறைத்து குடல் இயக்கத்தை மேம்படுத்தும் காளான்

காளானில் உள்ள பாலிசாக்கிரைடுகள் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்து இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துகிறது. இந்த பாலிசாக்கிரைடுகள் உங்கள் குடலில் உள்ள நன்மை அளிக்கும் பாக்டீரியாவை அதிகரிக்க உதவுகிறது.

இது உங்கள் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது. மேலும், தாவர உணவு உண்பவர்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதில் காளான்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

விலை, சந்தைப்படுத்தல். விற்பனை மற்றும் ஏற்றுமதி 

விளைந்த காளான்களைத் தரப்படுத்தி சந்தை விலைக்கு ஏற்ப அருகிலுள்ள கடைகள், பல் பொருள் அங்காடிகள் மற்றும் சந்தைகளில் விற்கலாம். குறித்த நேரத்தில் குறித்த அளவுகளில் தினமும் வழங்குவது வாடிக்கையாளர் நம்பிக்கையை அதிகரித்து உங்கள் வட்டத்தைப் பெரிதாக்கும். மிகச் சிறந்த தரமுள்ள காளான்களை ஏற்றுமதியும் செய்யலாம். 

மேலும், காளான்களை சிப்ஸ், நக்கெட்டுகள், ஊறுகாய், சாஸ் மற்றும் அப்பளங்கள் என இன்றைய காலத்திற்கு ஏற்ப மதிப்பு கூட்டி விற்பது உங்கள் லாபத்தை அதிகரிப்பதோடு புதிய சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கும்.

முடிவுரை சிப்பி காளான் வளர்ப்பு தொடர்பான செயல்முறைகள் பற்றி காளான் விதைகள் கொள்முதல் தொடங்கி சந்தைப்படுத்தல் வரையுள்ள அனைத்து படிகளையும் ffreedom ஆப் இல் தெளிவாகவும் விரிவாகவும் அறிந்துகொண்டோம்.

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.