மெதுவானது அல்ல மிகவும் வேகமானது – விலங்கு வளர்ப்பு
விலங்கு வளர்ப்பு என்பது இறைச்சி, பால் மற்றும் முட்டை தேவைக்காக விலங்குகளைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்ப்பது. அனைவரும் வளர்க்கும் கோழி, காடை, ஆடு வளர்ப்பு போலில்லாமல் முயல் வளர்ப்பது இறைச்சி சந்தையில் உங்களைத் தனித்துவப்படுத்தும். அதுவே உங்களுக்கு ஒரு நன்மையாக அமையும்.
தற்போதைய காலத்தில் மக்கள் வெவ்வேறு உணவுகளைச் சுவைக்க விரும்புவதால் முயல் வளர்ப்பு உங்களுக்கு அதிக லாபம் தரும். முறையாக பராமரித்து தீவனம், நீர், நோய்த்தடுப்பு போன்றவற்றை மேற்கொண்டால் நிச்சயமாக அதிக லாபம் பெறலாம்.
முயல் வளர்ப்பு தொழிலில் ஒரு முயல் மூன்று மாதங்களில் வளர்ந்துவிடுவதால் நீங்கள் அதிக லாபம் பெற முடியும். அதன் இறைச்சி, தோல் மற்றும் கழிவு என அனைத்திற்கும் நல்ல தேவை உள்ளது. எனவே, அவற்றை விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.
முயல் வளர்ப்பில் முந்தி செல்லுங்கள்
7 பெண் முயல், 3 ஆண் முயல், 10×4 அளவுள்ள ஒரு கூண்டு ஒரு யூனிட் எனப்படுகிறது. இதற்கு ரூ. 25,000 செலவாகிறது. பிறந்த முயல் குட்டி 50-70 கிராம் எடை இருக்கும். 4 மாதங்களில் பருவமடைந்து விடும். பருவமடைந்த முயல் வருடத்திற்கு 6 முதல் 7 முறைகள் என 7 வருடங்கள் வரை குட்டி ஈனும். உளுந்து, கொண்டை கடலை, மக்கா சோள பவுடர், பருப்பு பவுடர், கோதுமை தவிடு, முள்ளங்கி, கோஸ், கேரட் போன்றவற்றை உணவாக கொடுக்கலாம். பகல் 11-12 மணி அளவில் 50-100 மிலி நீர் தரலாம்.
மேலும், முயல் இருப்பிடத்தை மிகவும் தூய்மையாக வைப்பது அவசியம். அவ்வப்போது சுத்தம் செய்வது மிகவும் நல்லது. இது அவற்றை நோய் தாக்கும் அபாயத்தில் இருந்து காப்பதோடு நல்ல எடையை அடைய உதவும்.
முயலின் வாழ்க்கை சுழற்சி மற்றும் நோய் மேலாண்மை
ஒரு முயலின் ஆயுட்காலம் 7 வருடங்கள். 4 மாதங்களில் 2 ½ கிலோ எடையை எட்டிவிடும். முயலின் 5 வது மாதத்தில் இனச் சேர்க்கை செய்யலாம். கர்ப்ப காலம் 30 நாட்கள்.
சோரியாசிஸ் எனப்படும் முடி உதிர்தல் மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் வைத்தால் சரியாகிவிடும். இல்லையென்றால் ஹைடெக் எனப்படும் ஊசியைச் செலுத்த வேண்டும். கழிச்சல், கல்லீரல் நோய் போன்ற பிற நோய்களுக்கும் தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் தேவையான தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும், முயல்களை அவ்வப்போது கண்காணித்து வருவது நோய் வருவதை முன்கூட்டியே கணிக்க உதவும். இது எதிர்பாராத இழப்புகளைத் தடுக்கும்.
சிக்கனை விட அதிக புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்து உள்ள முயல் இறைச்சி
ஒரு 85 கி சிக்கனில் 26 கி புரதம் உள்ளது. இரும்புச் சத்து இல்லை. ஆனால், 85 கி முயல் கறியில் 28 கி புரதமும் 22% இரும்புச்சத்தும் உள்ளது. இது போன்று பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும், ஒப்பீட்டு அளவில் சிக்கனை விட முயல் கறியில் குறைந்த கொழுப்பு சத்து உள்ளது.
எனவே, கொழுப்பு இல்லாத ஊட்டச்சத்து பெற விரும்புவோரின் முதன்மையான தேர்வு முயல் கறியாக இருக்கும்.
மீனில் மட்டுமே உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் பிற விலங்கு கறியில் இல்லாத ஒமேகா கொழுப்பு அமிலங்கள் முயல் கறியில் உள்ளது. அதாவது, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் பி, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம் என பல தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளது.
முயல் வளர்ப்பின் பயன்கள், லாபங்கள் & சந்தைப்படுத்தல்
பிற விலங்கு கறிகளுக்கு (கோழி, ஆடு) உள்ள தேவையைப் போல சந்தையில் முயல் கறிக்கு அதிக தேவை இருக்கிறது. நீங்களாகவும் விற்கலாம் அல்லது இறைச்சி கடைக்காரர்களிடம் ஒப்பந்தம் செய்தும் விற்கலாம். பெரிய அங்காடிகளிலும் விற்கலாம். முயலின் இறைச்சி கிலோ ரூ.400 வரை விற்கிறது. முயலின் தோல் ரூ.250-300 விற்கிறது. ஊட்டச்சத்துகள் நிறைந்த முயலின் கழிவுகள் ஒரு டிராக்டர் லோடு ரூ.25000 வரை விற்கிறது. இயற்கை உரமாக முயலின் கழிவு இடப்படுகிறது.
முடிவுரை மாறுபட்ட விலங்கு வளர்ப்பான முயல் வளர்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் ffreedom ஆப் வழியாக தெளிவாக அறிந்துகொண்டோம்.