நமது தாத்தா, பாட்டி காலங்களில் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அவர்களே விருந்தினர்களுக்கு சமைத்து பரிமாறி விடுவார்கள். 100 பேர் என்றாலும் வெளி ஆட்களைச் சமைக்க விட மாட்டார்கள். ஆனால், தற்போது சிறிய நிகழ்ச்சியான பிரிவு உபசார விழா முதல் பெரிய நிகழ்ச்சியான திருமணம் வரை கேட்டரிங் நிறுவனங்களே பார்த்துக்கொள்கின்றனர். உங்களுக்கு ஏற்ற விலையில் சிறப்பான முறையில் செய்து தருகின்றனர். அவர்கள் கேட்கும் பணம் மட்டும் தந்துவிட்டால் போதும் இலை போடுவது, விருந்தினர்கள் வரவேற்பு, பந்தி பரிமாறுவது என அனைத்தையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் நிம்மதியாக உங்கள் உறவினர்களுடன் அளவளாவி வரலாம். வாருங்கள் இந்த கோர்ஸில் கேட்டரிங் பற்றி அறிந்துகொள்வோம்.
உங்கள் நேரத்தை சொந்தங்களுக்கு ஒதுக்குங்கள்
கல்யாணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளில் உணவிற்கு முக்கிய பங்கு உள்ளது. உணவு நன்றாக இருந்துவிட்டால் போதும் அனைவரின் மனமும் குளிர்ந்துவிடும். ஒருவேளை உணவு பரிமாறுதலை நீங்கள் மேற்கொண்டால் பல வித குழப்பங்கள், ஏமாற்றங்கள், கோபங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விழாவிற்கு வரும் உங்கள் சொந்தங்களை நன்றாக கவனிக்க முடியாமல் போகலாம். ஏற்கனவே இன்றைய வேகமான உலகில் சொந்தங்களைச் சந்திப்பதே சவாலாக மாறிவிட்ட நிலையில் அவர்களைச் சந்திக்கும்போதும் சரியாக பேசமுடியாமல் கவனிக்க முடியாமல் போவது மிகவும் வருந்தத்தக்கது அல்லவா.
அதற்காகவே, ஒரு வரம் போல கேட்டரிங் வணிகம் உள்ளது. உணவு பரிமாறுதலை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் போதும். பந்திக்கு இலை போடுவது முதல் வழியனுப்புவது வரை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். உங்கள் பொன்னான நேரத்தைச் சொந்தங்களுடன் மிக சிறப்பாக செலவிடலாம்.
சுவையான உணவுகள், இனிமையான நினைவுகள்
உங்கள் தேவை மற்றும் பட்ஜெட் கேட்டரிங் நிறுவனத்திடம் கூறிவிட்டால் போதும். நீங்களே வியக்கும் வண்ணம் கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் சிறப்பான அதேநேரம் சுவையான பல விதமான உணவுகளைத் தேர்வு செய்யலாம். எ.கா. கேசரி, பைன்ஆப்பிள் புட்டிங், அசோகா அல்வா, காசி அல்வா, அக்கார வடிசல், நெய் பொங்கல் போன்றவை. காலை உணவுக்கு இரண்டு வகை இனிப்பு, மெது வடை, நெய் வெண்பொங்கல், வெஜ் புலாவ், கிச்சடி, எசென்ஸ் தோசை, காளான் தோசை, கைமா தோசை, சோலா பூரி, பூரி, புட்டு, சேமியா கிச்சடி, ஆப்பம், இட்லி வகைகள், மதிய உணவிற்கு கொத்தமல்லி புலாவ், முந்திரி புலாவ், நெய் சாதம், மஷ்ரூம் பிரியாணி, மஷ்ரூம் கிரேவி, கோபி 65 மற்றும் வத்த குழம்பு.
பொறுப்புகளை எளிதாக கையாளுங்கள்
அந்தக் காலத்தில் சொந்தங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பார்கள். எ.கா. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பிள்ளைகள், பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி என அனைவரும் நெருக்கமாக வாழ்ந்தார்கள். எனவே, யார் வீட்டில் விசேஷம் என்றால் ஒன்றாக இணைந்து சிறப்பாக செய்துவிடுவார்கள். ஆனால், இன்றைய நவீன உலகில் அனைவரும் கல்வி, வேலைக்காக நகரங்கள், பெரு நகரங்களுக்கு செல்கின்றனர். எனவே, ஒருங்கிணைந்து வேலை செய்வது கடினம்.
இந்தக் குறையை நிவர்த்தி செய்யவே கேட்டரிங் வணிகம் உருவானது. கேட்டரிங் நிர்வாகத்திடம் உங்கள் பட்ஜெட், எதிர்பார்ப்பு போன்றவற்றை கூறிவிட்டால் போதுமானது. நீங்கள் எதிர்பார்ப்பதை விட ஒரு படி அதிகமாகவே செய்துவிடுவார்கள். நீங்கள் விரும்பும் வகையில் பந்தி முதல் தாம்பூல பை வரை மிகவும் சிறப்பாக செய்து தருவார்கள்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுங்கள்
நீங்கள் ஒரு கேட்டரிங் வணிகம் செய்கிறீர்கள் என்றால் வாடிக்கையாளர் உங்களிடம் வந்து ஒரு ஆர்டர் தந்த பின் பொருட்களைக் கொள்முதல் செய்ய மாட்டீர்கள். கண்டிப்பாக மொத்தமாக கொள்முதல் செய்து வைத்திருப்பீர்கள். அதாவது, கோதுமை, மைதா, ரவை, வெண்ணை, நெய், பருப்பு வகைகள், அப்பளங்கள், சமையல் எண்ணெய்கள் என அனைத்தையும் இருப்பு வைத்திருப்பீர்கள்.
எனவே, சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்கள் உங்கள் பெரிதும் பாதிக்காது. இது வாடிக்கையாளருக்கு மேலும் சலுகை வழங்க உதவுகிறது. அதேபோல மொத்த வியாபாரிகளிடம் மொத்தமாக பொருட்களைக் கொள்முதல் செய்வதால் நீங்கள் அதிக லாபம் பெறலாம். இந்த லாபத்தை நீங்கள் சிறிது வாடிக்கையாளருக்கு விட்டு தரும் போது உங்கள் கேட்டரிங் வணிகம் மக்கள் மத்தியில் பிரபலமடையும். இது உங்களுக்கு மேலும் பல ஆர்டர்களைப் பெற்று தரும்.
முடிவுரை கேட்டரிங் வணிகம் – 60 சதவீத லாபத்துடன் மாதம் 2 லட்சங்கள் சம்பாதிக்க தேவையான அனைத்து தகவல்கள், உத்திகள் பற்றி அனைத்தையும் ffreedom ஆப் வழியாக அறிந்துகொண்டீர்கள்.