Home » Latest Stories » வணிகம் » அழகால் உலகை ஆளுங்கள்

அழகால் உலகை ஆளுங்கள்

by Gunasekar K
121 views

நான் என்றோ ஒரு புத்தகத்தில் படித்தது. ஒரு அழகு நிலையத்தின் பலகையில் இப்படி எழுதி இருந்தார்களாம் “கவனம் எங்கள் நிலையத்தில் இருந்து வரும் அழகான பெண் உங்கள் பாட்டியாக கூட இருக்கலாம்”. ஆம். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்களை அழகுபடுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். நமது தமிழில் ஒரு பழமொழி உண்டு ஆள் பாதி ஆடை பாதி. பெருகிவிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் அது சார்ந்த வேலைவாய்ப்புகளும் மக்களுக்கு போதுமான வருமானத்தை அளிக்கின்றன. மற்றவர்கள் முன்பு நீங்கள் பேசுவதற்கு முன்பே உங்கள் தோற்றம், ஆடை பேசிவிடும். எனவே, தங்களை அழகுபடுத்திக்கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்தப் பன்னாட்டு நிறுவன வேலைவாய்ப்புகள் பெருகிவிட்ட காரணத்தினால் எப்போதும் அழகாக காட்சியளிப்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அழகாக இருப்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. மக்கள், இயற்கையான அழகு பொருட்களை நாடி செல்வதால், தற்போது சருமத்திற்கு, முடிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பக்க விளைவுகள் அற்ற இயற்கையான அழகு சாதனப் பொருட்கள் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. இந்தப் பாடத்தில் அழகு நிலைய தொழில் வாய்ப்பு பற்றி அறிவோம் வாருங்கள்.

திருத்துங்கள் பேப்பரை அல்ல – தலைமுடி மற்றும் தாடியைத் திருத்துதல் 

உங்கள் அழகின் பெரும்பகுதி முகத்தை வைத்தே எடை போடப்படுகிறது. அதிலும் பெரும்பாலும் தலைமுடியைச் சார்ந்தே உள்ளது. ஒரு சிறந்த தலைமுடி திருத்தும் உங்கள் தோற்றத்தை மாற்றும் வல்லமை படைத்தது. அதேபோல உங்கள் தாடியைத் திருத்துவதும் மிகவும் அவசியம். இன்றைய காலகட்டத்தில் தலைமுடி மற்றும் தாடியின் திருத்தும் பெரும்பாலும் மெஷினால் செய்யப்படுகிறது. தேவையுள்ளோருக்கு மட்டும் கத்தரிக்கோலால் செய்யப்படுகிறது.  

கிளோஸ் கட், சம்மர் கட், பாப் கட் போன்ற தலைமுடி திருத்தங்களும், பிரெஞ்சு பேர்டு, கோட் பேர்டு போன்ற தாடி திருத்தங்களும் உள்ளது.   

உங்கள் குறையை நிறையாக மாற்றும் கன்சீலர் 

ஒருவர் உங்களைப் பார்க்க வருகிறார் என்றால் உங்கள் முகத்தைத் தான் முதலில் பார்ப்பார். இது அனைவருக்கும் பொருந்தும். மனதின் கண்ணாடியான முகம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். ஆனால், நாம் நினைப்பது நடந்து விடுகிறதா? இல்லை. முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், பருக்கள், கரு வளையங்கள், வறட்சி, எண்ணெய் வடிதல் போன்றவை முகத்தின் அழகைக் குறைத்துவிடுகிறது. 

இந்தக் குறைகளை மறைக்க உதவும் ஒரு பொருள் தான் கன்சீலர். கன்சீலரில் பல வகைகள் உள்ளது. திரவ கன்சீலர், ஸ்டிக் கன்சீலர், கிரீம் கன்சீலர், பென்சில் கன்சீலர் மற்றும் கிரீம் கன்சீலர். கன்சீலர் உங்கள் முகத்தின் குறைகளை மறைத்து அழகாக தோற்றமளிக்க உதவுகிறது. அதற்காக அழகு இல்லையென்றால் நாம் சாதிக்க முடியாதா என்ற கேள்வி எழலாம். இதன் பொருள் அதுவல்ல. நாம் அழகாக இருக்கிறோம் என்று உணரும்போது உங்கள் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. பதட்டம் இல்லாமல் மனம் மிகவும் அமைதியாகிவிடுகிறது. அமைதியான மனம் அது நினைக்கும் அனைத்தையும் சாதித்து முடிக்கும். எனவே, ஒருவரது  தன்னம்பிக்கையை அதிகரிக்க அழகுபடுத்தி கொள்வது உதவுகிறது.  

கன்சீலர் பெரும்பாலும் செயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டாலும் அதிகரித்து வரும் இயற்கை பொருட்களுக்கான தேவை காரணமாக இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட கன்சீலர்களும் கிடைக்கின்றன.  

உங்கள் முடியைப் பளிச்சென்று மாற்றும் லோஷன்கள் 

இன்றைய உலகம் பன்னாட்டு உலகம். எனவே, பன்னாட்டு உலகிற்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்வது அவசியம். அதில் முதலில் வருவது உங்களை பிறருக்கு எப்படி காட்சிப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பதே. 

இந்த நிலை எதனால் உருவாகிறது? தோற்றம். ஒருவரிடம் நீங்கள் பேசும் முன்பே உங்கள் தோற்றம் பேசிவிடுகிறது. உங்கள் முடியின் தோற்றத்தைச் சிறப்பாக மாற்ற உதவும் ஒரு பொருள் தான் ஷாம்பு மற்றும் கண்டிஷனர். உங்கள் முடி மற்றும் மண்டையோட்டு தோலின் அழுக்குகள் மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்குகிறது. எனவே, உங்கள் முடி கவர்ச்சிகரமாக தோற்றமளிக்கிறது. உங்களது ஒட்டுமொத்த தோற்றத்தை அழகாக காட்டுவதில் முடிக்கு முக்கிய பங்கு உள்ளது. 

ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பெரும்பாலும் செயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டாலும் அதிகரித்து வரும் இயற்கை பொருட்களுக்கான தேவை காரணமாக இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களும் கிடைக்கின்றன.  

என்றும் இளமையாக தோன்றுங்கள் – ஆன்டி ஏஜிங் கிரீம்       

இளமையை விரும்பாதவர் யார்? என்றும் இளமையாக இருக்கவே மனிதர்கள் விரும்புவார்கள். ஆனால், என்ன செய்வது? இயற்கை உயிரினங்களை அப்படி படைக்கவில்லையே. முதுமை என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. எனினும், மனிதன் தன்னை இளமையாக காட்சிப்படுத்த விரும்புகிறான். அதற்காகவே உருவாக்கப்பட்டது தான்  ஆன்டி ஏஜிங் கிரீம். ஆன்டி ஏஜிங் கிரீம் முகத்தின் சுருக்கங்களை மறைத்து நீங்கள் இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது. 

ஆன்டி ஏஜிங் கிரீம் பெரும்பாலும் செயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டாலும் அதிகரித்து வரும் இயற்கை பொருட்களுக்கான தேவை காரணமாக இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட ஆன்டி ஏஜிங் கிரீம்களும் கிடைக்கின்றன.  

முடிவுரை அழகுக்கு அழகு சேர்க்கும் பியூட்டி பார்லர் வணிகம் வழியாக ஆண்டுக்கு 5 லட்சங்கள் சம்பாதிக்க தேவையான உத்திகள் மற்றும் நுட்பங்கள் பற்றி அனைத்தையும் ffreedom ஆப் வழியாக தெளிவாக அறிந்தோம். 

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.