இனிப்பு எனும் வார்த்தையைக் கேட்டவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? சர்க்கரை, தேன், சாக்லேட் மற்றும் கேக்குகள் அல்லவா. இங்கு கேக்குகள் என்பது தற்போது ஒரு வழக்கமான உணவு போலவே மாறிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கேக்குகளை விரும்பி உண்கின்றனர். எப்படி கேக் இவ்வளவு பிரபலமாக உள்ளது என்று யோசிக்கிறீர்களா? முதல் காரணம் அதன் மென்மையான அமைப்பு. இரண்டாவது, அதில் சேர்க்கப்படும் வண்ணங்கள் மற்றும் எசென்ஸ். மூன்றாவது அதன் கவர்ந்து இழுக்கும் தோற்றம்.
தற்போது நிச்சயதார்த்தம், திருமணம், பிறந்தநாள் விழா, பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் கேக் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் பல விதமான, வகையான கேக்குகள் கிடைக்கின்றன. எ.கா. பிறந்தநாள் கேக்குகள், ஐஸ்கிரீம் கேக்குகள், பழ கேக்குகள், சாக்லேட் கேக்குகள், கிறிஸ்துமஸ் கேக்குகள், திருமண கேக்குகள் போன்ற பல வகைகளில் நமது விருப்பத்திற்கு ஏற்ப கேக்குகள் கிடைக்கின்றன. கேக்குகளின் சந்தை தேவை அதிகமாக இருப்பதால் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே உள்ளது.
உங்கள் வணிகம்! உங்கள் லாபம்!
கேக் தயாரிப்பு வணிகம் என்பது ஒரு சுய தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு மிகவும் ஏற்றது. ஏனென்றால் இந்த வணிகத்தில் மூலப் பொருட்களின் கொள்முதல், உற்பத்தி அளவுகள், கேக்குகளின் வடிவம், பேக்கிங் உத்திகள், விற்பனை செயல்முறைகள் என அனைத்தையும் நீங்கள் தான் முடிவு செய்ய போகிறீர்கள்.
எனவே, தேவை அதிகமுள்ள பண்டிகை, திருமணம் போன்ற நாட்களில் உற்பத்தியை அதிகரித்து நல்ல லாபம் பெறலாம். அதுபோல தேவை குறைந்த நாட்களில் உற்பத்தியைக் குறைத்து அதற்கேற்ப லாபம் பெறலாம்.
வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப வெவ்வேறு பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட கேக்குகளை பல வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் அளவுகளில் தயாரிக்கலாம்.
மேலும், பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வது, பொருட்களை அழகாக பேக் செய்வது, விற்பனை செய்ய வேண்டிய இடங்களைக் கண்டறிவது மற்றும் விற்பனையை மேம்படுத்த தேவையான நுட்பங்களைத் தெரிந்துகொள்வது போன்றவை மிகவும் அவசியம்.
மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப புதிய புதிய கேக் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது உங்கள் பொருட்களைச் சந்தையில் தனித்து இருக்க உதவுகிறது. உங்கள் லாபத்தையும் கணிசமாக அதிகரிக்க உதவுகிறது.
வாழ்வை வளமாக்கும் ஒர்க் ப்ரம் ஹோம் வணிகம்
கொரோனா தொற்றுக்கு பிறகு உள்ளூர் வணிகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கான வாய்ப்பைத் தேடி மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். கேக் தயாரிப்பு வணிகம் 20,000 ரூபாய் எனப்படும் குறைந்தபட்ச முதலீட்டில் எளிதாக தொடங்கலாம். தேவையான உபகாரணங்களான பிரீஸர், குளிர்சாதனப் பெட்டி, ஓவென், ட்ரேக்கள், ஸ்பூன்கள் போன்றவற்றை வாங்க வேண்டும்.
கேக்குகளைப் பல விதங்களில் வழங்க வேண்டும். பட்டர் கேக், பவுண்ட் கேக்,
ஸ்பான்ஜ் கேக், ஜீனோய்ஸ் கேக், பிஸ்கட் கேக், ஏஞ்சல் புட் கேக், ஷிப்பான் கேக், பிளேவர் இல்லாத பேக்கடு கேக், பேக் செய்யாத பிளேவர் இல்லாத கேக், கேரட் கேக் மற்றும் ரெட் வெல்வெட் கேக் போன்ற பல வகைகளில் கேக்குகளை வழங்குவது வாடிக்கையாளர்களின் தேர்வை அதிகப்படுத்தும். கேக்குகளின் வகைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யலாம் என்பதால் உங்களது லாபமும் பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் வணிகத்தின் பெயரும் பெரிய அளவில் பிரபலமடையும். இது உங்களுக்கான மறைமுக சந்தைப்படுத்தலாக அமையும்.
சிறப்பான லாபம் தரும் பல்வேறு பேக்கரி பொருள்கள்
கேக் தயாரிப்பு என்பது வெறும் கேக் தயாரிப்பாக செய்தால் அதிக லாபம் பெற இயலாது. கேக்குடன் பப்ஸ்கள், பன்கள், பிரட்கள், பல விதமான பிஸ்கட் வகைகள் போன்றவற்றை தயாரிப்பது உங்கள் லாபத்தை அதிகரிக்கும். எ.கா. வெஜிடபிள் பப்ஸ், எக் பப்ஸ், பன்னீர் பப்ஸ், மஸ்ரூம் பப்ஸ், சிக்கன் பப்ஸ் போன்ற பப்ஸ் வகைகள், ஜாம் பன், கோகோனட் பன், பிளைன் பன் போன்ற பன் வகைகள், புரூட் பிரட்கள், சாதா பிரட்கள், கோதுமை பிரட்கள் போன்ற பிரட் வகைகள் மற்றும் சால்ட் பிஸ்கட், கேழ்வரகு பிஸ்கட், தேங்காய் பிஸ்கட், சாக்லேட் பிஸ்கட், நட்ஸ் பிஸ்கட், வெண்ணெய் பிஸ்கட் போன்ற பிஸ்கட் வகைகளை விற்பது உங்கள் கடையில் பலதரப்பட்ட பொருட்கள் கிடைக்கும் என்னும் நம்பிக்கை வாடிக்கையாளர்களிடம் உருவாக்கும்.
உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் விதவிதமான பொருள்கள்
கேக் உடன் தொடர்புடைய பிற நொறுக்குத்தீனி பொருட்களை (சாக்லேட்கள், முறுக்குகள், சிப்ஸ்கள், ஜாம்கள், குளிர்பானங்கள்) போன்ற விற்பது உங்களுக்கு நன்மையாக அமையும். ஏனென்றால், கேக் வாங்க வேண்டும் என்று வரும் நபர்கள் மேற்கண்ட பொருட்களை வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
முடிவுரை வெறும் 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே கேக் தயாரிப்பு வணிகம் தொடங்க தேவையான நுட்பங்கள் பற்றி ffreedom ஆப் வழியாக அறிந்துகொண்டோம்.