Boss Wallah அளித்த வாய்ப்பு
MCA பட்டதாரியான அம்ருதா, பிரீலான்ஸ் டிஜிட்டல் மார்க்கெட்டராக பணிபுரிந்துள்ளார். கோவிட்-19 தொற்றுநோயால் நிதி நெருக்கடியைச் சந்தித்தார். தனது நிதி நெருக்கடியை எதிர்கொள்ள கூடுதல் வருமானம் தேவை என்று முடிவு செய்து வணிகம் தொடங்க எண்ணினார். Boss Wallah-ல் ஸ்டாக் மார்க்கெட் கோர்ஸ் படித்தார். அதன் வாயிலாக ஸ்டாக் மார்க்கெட்டில் 35-40% லாபம் பெற்றார்.
ஸ்டாக் மார்க்கெட்டிங் முதல் எண்ணெய் மில் அதிபர் வரை
ஸ்டாக் மார்க்கெட்டில் லாபம் பெற்ற போதும் தனது இலக்கைத் தொடர ஒரு 1000 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்து நில கடலை எண்ணெய் மில் வணிகம் தொடங்கினார். அதற்கான மூலப் பொருளான வேர்க்கடலையைத் தந்தையிடம் கொள்முதல் செய்தார். எண்ணெய் மில் கட்டமைப்பிற்காக அரசின் PMFME திட்டத்தில் 8 லட்சம் நிதியுதவி கிடைத்தது. டெர்ம் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் என நிதி தொடர்பான அறிவை சுதிர் அவர்களிடம் பெற்றார். இன்று ஒரு நாளைக்கு 60 லிட்டர் எண்ணெய் தயாரிக்கிறார். 1 லிட்டர் எண்ணெய் சில்லறையாக 350 ரூபாய்க்கும் மொத்தமாக 280 ரூபாய்க்கும் தருகிறார்.
திட்டமிட்ட வணிகம், தெவிட்டாத லாபம்
எண்ணெய் வணிகம் பற்றி ஏதும் அறியாமல் தற்போது அம்ருதா பெற்றுள்ள வியக்கத்தக்க வெற்றிக்கு முக்கிய காரணம் Boss Wallah என்றால் அது மிகையாகாது. MCA படித்த டிஜிட்டல் மார்க்கெட்டராக இருந்தாலும் நிதி, ஸ்டாக் மார்க்கெட் மற்றும் இன்சூரன்ஸ் பற்றி Boss Wallah வாயிலாக அறிந்துகொண்டார். இது அவரது தொழிலைத் திட்டமிட்டு அமைத்துக்கொள்ளவும் 4 முதல் 6 லட்சங்கள் வரை வருமானம் பெறவும் உதவியது.
தொடக்க நிலையாளர் முதல் நிபுணர் வரை
எண்ணெய் மில் வணிகம் தொடர்பாக தேவையான இடம், மூல தனம் பெறுதல், உபகரணங்கள், மூலப் பொருள் கொள்முதல், பணியாளர் தேவைகள், இயக்க செலவுகள், சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் கணக்கு பராமரிப்பு போன்ற பலவற்றை மிகவும் தெளிவாக Boss Wallah வாயிலாக அறிந்துகொண்டார்.
பின்னர், எண்ணெய் மில் வணிகம் அமைக்க அரசின் பிரதான் மந்திரி நுண் உணவுகள் செயலாக்கம் திட்டத்தில் நிதி பெற்றார். பின்னர், தனது தந்தையின் வயலில் இருந்து எண்ணெய் தயாரிக்க தேவையான மூலப் பொருளான வேர்க்கடலையைக் கொள்முதல் செய்தார். தனது உற்பத்தி நிறுவனத்தின் அருகில் வசிக்கும் விவசாயிகளிடம் இருந்து வேர்க்கடலையை நல்ல விலைக்கு பெற்று அதை சிறப்பாக பேக் செய்து சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்று அதிக லாபம் பெறுகிறார். ”நீங்கள் இருக்கும் இடத்திலேயே சிறப்பான தொழில் ஆரம்பித்து தன்னிறைவை அடையுங்கள்” அதாவது வாய்ப்புக்காக காத்திராமல் வாய்ப்புகளை உருவாக்குங்கள் என்பதே அம்ருதாவின் கருத்து.
பொருளாதார சுதந்திரத்தின் வேண்டுமா? Boss Wallah யை பாருங்கள்!
உங்களது சொந்த வணிகம் தொடங்க விரும்புகிறீர்களா? அதற்கான வழிமுறை, அனுமதி, உரிமம், கொள்முதல், உற்பத்தி மற்றும் பலவற்றை அறிய வேண்டுமா? அம்ருதா, எண்ணெய் மில் வணிகத்தில் வெற்றி பெற தேவையான திறன்களையும் உத்திகளையும் Boss Wallah-ல் கற்றுக்கொண்டு அதை வெற்றிகரமாக செயல்படுத்தி சிறப்பான நிலையை அடைந்தார்.
Boss Wallah-ல் இதை போன்று பல தொழில்முனைவு, நிதி சேமிப்பு மற்றும் விவசாயம் தொடர்பான பல கோர்ஸ்கள் உள்ளது. இவை அனைத்தும் இந்திய மக்கள் தங்களது சொந்த தொழில் கனவை நனவாக்க உதவுகிறது. இது வேலை தேடுபவர்கள் வேலைகளை உருவாக்கும் தொழில்முனைவோர்கள் நிறைந்த ஒரு வல்லரசு நாடாக இந்தியா விளங்க வேண்டும் என்னும் எங்கள் CEO வான சுதீர் அவரது இலக்கை அடைய உதவுகிறது.