ஆனந்தா, கர்நாடகாவின் கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாசப்பூர் நகரத்தைச் சேர்ந்தவர். இவர் நிலத்தில் போதுமான நீர் ஆதாரம் இல்லாத போதும் தனது நிலத்தில் குளம் அமைத்து மழை நீரைச் சேமித்து பயிர்களை வெற்றிகரமாக நடவு செய்து வருகிறார்.
உங்களிடம் இருக்கும் வளங்களின் முழு திறனையும் பயன்படுத்துதல்
ஆனந்தா, கர்நாடகாவின் கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாசப்பூர் நகரத்தைச் சேர்ந்தவர். தனது 6 ஏக்கர் நிலத்தில் குறைந்த அளவு நீர் ஆதாரமே வைத்துள்ளார். எனினும், Boss Wallah பண்ணை குளம் அமைத்தல் தொடர்பான கோர்ஸைப் பார்த்த பிறகு, 50,000 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட ஒரு பண்ணை குளத்தை அமைத்து மாங்காய்களை வெற்றிகரமாக பயிரிட்டு அறுவடை செய்கிறார்.
நிலத்தில் நீர் இல்லையே என சோர்ந்துவிடாமல் தனது பண்ணை நிலத்தில் மழை நீரைச் சேமித்து பயன்படுத்த ஒரு குளம் ஒன்றை ஆனந்தா கட்டமைத்தார். தனது நிலத்தில் டுடாபுரி, நீலம், மலகோபா, கலப்பாடி, ராசபுரி போன்ற பல மாம்பழ வகைகளை நடவு செய்துள்ளார். மேலும்,
ஆனந்தா 25 முதல் 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்
எதிர்காலத்தில், தனது விவசாய விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் மேலும் பெரிய குளம் ஒன்றை அமைத்து 100 தென்னைகள் மற்றும் 50 பிளாக் பிளம் மரங்களை நடவு செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், இப்பண்ணை நிலத்தை அமைக்க அரசு மானியமாக 1.6 லட்சங்களைப் பெற்றுள்ளார். இப்பண்ணை குளத்தை அமைக்க ஆனந்தாவிற்கு தோராயமாக 1.5 லட்சங்கள் வரை செலவாகியுள்ளது.
தற்போது ரோஜா, பட்டன் ரோஜா மற்றும் பன்னீர் இலைகளை சிறிய அளவில் பயிரிட்டுள்ளார். வேளாண்மை மீது அதிக ஆர்வம் கொண்ட ஆனந்தா 2019-ல் Boss Wallah-ன் யூடியூப் சேனலில் விவசாயம் தொடர்பான பல வீடியோக்களைப் பார்த்தார். மேலும் அறிய, ஆப்-யை டவுன்லோட் செய்து சந்தா பெற்றார். ஒருங்கிணைந்த விவசாயம், பண்ணை குளங்கள் மேலும் தொடர்புடைய பல வீடியோக்களைப் பார்த்துள்ளார்.
இத்துடன், தனது பண்ணை குளத்தில் மீன் வளர்ப்பு தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.
இப்போது, குறைந்த நீர் ஆதாரம் கொண்ட நிலத்தில் ஏன் கஷ்டப்பட்டு விவசாயம் செய்ய வேண்டும்? என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். தனது முயற்சி மற்றும் உறுதியின் மீது நம்பிக்கை வைத்து ஆனந்தா உழைத்தார். மேலும், தனது நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் பாதகத்தை தனக்கு சாதமாக மாற்றிக்கொண்டார். திருக்குறளில், “தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” எனும் ஒரு குறள் உள்ளது. இதன் பொருள் தெய்வத்தால் கூட செய்ய முடியாத காரியத்தை ஒருவரது முயற்சியால் செய்து விட முடியும் என்பதே.
Boss Wallah அளித்த உத்திகள் மற்றும் நுட்பங்கள்
ஆனந்தா அவர்களைப் பொறுத்தவரை Boss Wallah விவசாயம், ஒருங்கிணைந்த விவசாயம், பண்ணை குளம் அமைத்தல் உட்பட பல விவசாயம் தொடர்பான மிக சிறந்த கோர்ஸ்களைக் கொண்ட ஆப் என்று உறுதியாக நம்புகிறார். விவசாயத் துறையில் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் இத்துறையில் ஏற்கனவே வெற்றி பெற்ற நிபுணர் விவசாயிகளின் வழிகாட்டுதல் பெறுவதற்கு மிக சிறந்த ஆதாரம் என்று கூறுகிறார்.
மேலும், விவசாயம் அல்லது வணிகத்தில் வெற்றி பெற விரும்பும் தனி நபர்களுக்கு Boss Wallah நிச்சயமாக வழிகாட்டும் என்றும் ஆனந்தா குறிப்பிடுகிறார். எதிர்காலத்தில் விவசாயத்தில் தான் பெறும் வருமானத்தை இரட்டிப்பாகும் என்று ஆனந்தா நம்புகிறார்.