Home » Latest Stories » வணிகம் » பக்க விளைவுகள் அற்ற பாக்கு தட்டு

பக்க விளைவுகள் அற்ற பாக்கு தட்டு

by Gunasekar K

 பாக்கு மட்டையில் இருந்து தயாரிக்கப்படும் பாக்கு மட்டை (அரேகா) தட்டுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை அதே போன்று எளிதில் மக்கக்கூடியவை. இந்தத் தட்டுகள் பிளாஸ்டிக் / பாலிமர் பொருட்கள் மற்றும் காகித அடிப்படையிலான பொருட்களுக்கு சிறந்த மாற்றாகும். இவை பாக்கு மட்டை (அரேகா) பனை மரங்களின் துண்டாக்கப்பட்ட இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பாக்கு மட்டை (அரேகா) இலை ஸ்பேட்டில் இருந்து தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தட்டுகளுக்கு அதிக தேவை உள்ளது. இந்த பாக்கு மட்டை (அரேகா) தட்டு தயாரிக்கும் தொழிலை பற்றி முழுமையாக கற்றுக் கொள்ளலாம். உதிர்ந்த இலைகளில் இருந்து பாக்கு மட்டை (அரேகா) தட்டுகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? என்றும் அறிந்து கொள்ளலாம்.

சுற்றுசூழலின் தட்டையான நண்பன் 

பிளாஸ்டிக் என்பது மக்குவதற்கு 400 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் ஆகலாம். எனவே, சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தற்போது இதற்கு ஒரு தீர்வாக பாக்கு மட்டை (அரேகா) தட்டு தயாரிக்கப்படுகிறது. பாக்கு மட்டை (அரேகா) யில் இருந்து தயாரிக்கப்பட்டாலும் இவ்வகையான தட்டு நல்ல உறுதித்தன்மையைப் பெற்றுள்ளன. 

எனவே, இந்தத் தட்டுகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. முக்கியமாக பயன்பாட்டுக்கு பின் தூக்கி எறியப்பட்டாலும் மண்ணோடு மண்ணாக மக்கிவிடுகிறது. சுற்றுசூழலும் பாதுகாக்கப்படுகிறது என்பது இவ்வகையான தட்டுகளின் சிறப்பு அம்சம்.

பயன்பாட்டு பொருளாக மாறும் உதிரும் பொருள் 

பாக்கு மட்டை (அரேகா) தட்டு என்பது எதையும் வெட்டாமல், பறிக்காமல் தயாரிக்கப்படும் தட்டுகள். அதாவது, பாக்கு மரத்தில் இருந்து உதிரும் இலைகள் நீரில் ஊற வைக்கப்பட்டு நன்றாக காய வைக்கப்பட்டு பாக்கு மட்டை (அரேகா) தட்டுகளாக தயாரிக்கப்படுகிறது.

எனவே, உங்கள் மூலப் பொருளுக்கான முதலீடு என்பது மிகவும் குறைவு. ஆகையால், உங்கள் லாபம் கூடுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. அரசின் பிளாஸ்டிக் தடையால் பாக்கு மட்டை தட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ளது என்றால் மிகையல்ல. பாக்கு மட்டை (அரேகா) தட்டுகள் அனைத்து வடிவங்களிலும் சிறியது முதல் பெரியது வரை அனைத்து விலைகளிலும் தயாரிக்கப்படுகின்றன. இவை 1.50 ரூபாயில் இருந்து 4 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

விழாக்கள், பண்டிகைகள், மாநாடுகளின் மாசில்லா நாயகன்    

மனிதர்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளான விழாக்கள், பண்டிகைகள் மற்றும் மாநாடுகள் போன்ற நிகழ்வுகளில் உணவு என்பது கண்டிப்பாக இருக்கும். உணவை போட்டு சாப்பிட ஏதாவது ஒரு ஊடகம் தேவை. நெடுங்காலமாக அந்த இடத்தை பிளாஸ்டிக் வைத்திருந்தது. தற்போது அந்த இடம் மெல்ல மெல்ல இயற்கையான, மக்கும் தன்மையுள்ள பொருட்களால் மாற்றப்பட்டு வருகிறது. 

அதில் முதன்மையானது பாக்கு மட்டை (அரேகா) தட்டு. இவை தேவையில்லை என்று கருதப்படும் உதிர்ந்த இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. விழாக்கள், பண்டிகைகள் என நிகழ்வுகளுக்கு ஏற்ப ஸ்பூன் முதல் மதிய சாப்பிடும் தட்டு வரை தயாரிக்கப்படுகிறது. ஒரு பாக்கு மட்டை ஸ்பூன் 1.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு பாக்கு மட்டை 9 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

முன்பெல்லாம் ஒரு கல்யாணம், திருவிழா, மாநாடு முடிந்த பின் அந்த இடமே பிளாஸ்டிக் குப்பை கூளங்களால் நிறைந்திருக்கும். ஆனால், தற்போது பாக்கு மட்டை தட்டால் நிறைந்திருக்கிறது. சில நாட்கள் கழித்து சென்றால் அந்தத் தட்டுகளும் இருக்காது. ஏனென்றால் அவை மண்ணோடு மண்ணாக மக்கிவிடும். 

தேவையில்லை என்பதே சுற்றுசூழலுக்கு தேவையானது

அரசு சுற்றுசூழலைப் பாதுகாக்க பிளாஸ்டிக் தடை விதித்தாலும் இன்றும் மக்கள் பிளாஸ்டிக் கவர் கேட்டு கடைக்காரரிடம் வாதம் செய்வதை பார்க்கலாம். பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் போன்ற பொருட்கள் நீர், நிலம் மற்றும் காற்று என மூன்று வகையான சுற்றுசூழல்களையும் பாதிக்கிறது. 

வெளியில் இருந்து பார்ப்பவருக்கு ஏன் உதிரும் இலைகளைப் பத்திரமாக எடுத்து வைக்கிறார்கள் என்று புரியாது. ஆனால், அந்த உதிர்ந்த இலைகளே சுற்றுசூழல் மற்றும் மனிதக் குலத்தின் விடிவெள்ளியாக மாற போகிறது என்பது அவருக்கு தெரியாது. ஆம். அந்த இலைகளே பாக்கு மட்டை (அரேகா) தட்டு, ஸ்பூன், கிண்ணம், தொன்னை என மாற்றப்பட்டு சந்தையில் பிளாஸ்டிக்கின் மாற்றாக விற்கப்படுகிறது. 

மக்களும் பிளாஸ்டிக்கின் தீமைகளை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டு இயற்கையான பொருட்களுக்கு மாறி வருகின்றனர். எனவே, பாக்கு மட்டை (அரேகா) தட்டு வணிகத்திற்கான எதிர்கால வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது. 

முடிவுரை பாக்கு மட்டை (அரேகா) தட்டு உற்பத்தி வணிகம் வழியாக மாதம் 3 லட்ச ரூபாய் சம்பாதிக்க தேவையான அனைத்து தகவல்களையும் ffreedom ஆப் வழியாக தெளிவாக அறிந்துகொண்டோம்.

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.