விலங்கு வளர்ப்பு என்பது நெடுங்காலமாக உள்ள ஒரு தொழில். மனிதர்கள் இறைச்சி, பால், முட்டை போன்ற தேவைகளுக்காக விலங்குகளைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கின்றனர். விலங்கு வளர்ப்பில் மாடு, கோழி வளர்ப்புக்கு போல ஆடு வளர்ப்பும் முக்கிய இடம் பெறுகிறது. ஆடுகள் அதன் தோல், பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.
நமது தேசத் தந்தை காந்தி அவர்களது விருப்பமான உணவில் ஆட்டு பால் முக்கிய இடம் வகித்தது. ஆடு வளர்ப்பு பற்றி அனைத்தையும் அறிவோம். முறையான பராமரிப்பு, தீவனம் மற்றும் நோய் மேலாண்மை மேற்கொண்டால் ஆடு வளர்ப்பு அதிக லாபம் தரும்.
மாண்டியாவின் பெருமை – பன்னூர் செம்மறி ஆடு
பன்னூர் செம்மறி ஆடு என்பது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தின் பாண்டூர் கிராமத்தைப் பூர்வீகமாக கொண்டது. பிற ஆட்டு
இனங்களை ஒப்பிடும்போது அளவில் சிறியதாக இருக்கும், அதாவது 2 அடி உயரம் வரை வளரும்.
ஒரு வளர்ந்த பன்னூர் செம்மறி ஆடு 24 முதல் 35 எடை வரை வளரும் திறன் கொண்டது. 2 வருடங்களில் இனப்பெருக்கத் திறனை அடைந்து 1 ¼ வருடங்களில் குட்டி ஈனுகிறது.
பன்னூர் செம்மறி ஆடுகள் பெரும்பாலும் அதன் இறைச்சி மற்றும் கம்பளி தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. நல்ல லாபம் பெற ஆடுகளை அதன் தன்மைக்கு ஏற்ற வகையில் வெப்பநிலை, சுற்றுப்புறச் சூழல், தீவனம், நீர் மற்றும் நோய் மேலாண்மை போன்றவற்றைச் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
குறைந்த காலத்தில் விரைவான வளர்ச்சியடையும் பெறும் ஆடு
பன்னூர் செம்மறி ஆட்டின் பிறந்த குட்டி 2 கிலோ எடை இருக்கும். 6 மாதங்களில் 13 கிலோ எடையை அடைந்துவிடுகிறது. 1 வருடத்தில் 22 கிலோ எடையை அடைந்துவிடுகிறது. பன்னூர் ஆட்டிற்கு என்று தனி தீவனங்கள் ஏதும் இல்லை.
பச்சை புல், வைக்கோல், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் வழங்கினால் போதுமானது. ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் நீர் தரலாம். ஒரு முழு வளர்ச்சியடைந்த பன்னூர் செம்மறி ஆடு 35 கிலோ எடையை அடைகிறது. ஆண்டுக்கு 1 முதல் 3.3 கிலோ கம்பளியைத் தருகிறது. பன்னூர் செம்மறி ஆடு வெள்ளையும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும்.
பன்னூர் ஆடுகளுக்கு போதுமான இடைவெளியில் தடுப்பூசி செலுத்துவது செம்மறி ஆடு அம்மை, கோமாரி நோய், இரத்தப்போக்கு செப்டிசீமியா போன்ற நோய்களைத் தடுக்க உதவும். அவ்வப்போது பன்னூர் ஆடுகளை வயிற்றைத் தூய்மைப்படுத்துவது அவசியம். அதாவது, குடல் புழு நீக்கம் செய்வது மிகவும் அவசியம். இந்தச் செயல்முறை ஆடுகளின் எடை மற்றும் தரம் குறையாமல் இருக்கவும் எதிர்ப்பாராத இழப்புகளைத் தடுக்கவும் உதவுகின்றன.
குறைந்த முதலீட்டில் நல்ல தரமான இறைச்சியைப் பெறுங்கள்
பன்னூர் செம்மறி ஆட்டிற்கான கொட்டகையை கூரை அல்லது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கொண்டு அமைக்கலாம். மேலும் எதிரி விலங்குகள், கடுமையான தட்ப வெப்பநிலைகளைத் தாங்கும் வகையில் அமைப்பது மிகவும் அவசியம்.
பன்னூர் செம்மறி ஆடு அதிக எடை பெறும் திறனையோ சிறப்பான இனப்பெருக்கப் பண்பையோ பெறவில்லை என்றாலும் அதன் சிறந்த உயர்தர இறைச்சிக்கான சந்தை தேவை காரணமாக அதிகம் வளர்க்கப்படுகின்றன.
குறிப்பாக இந்த பன்னூர் ஆட்டின் இறைச்சியில் கொழுப்பு ஒரு படலம் போல படிந்து இருக்கும்.
எனவே, பன்னூர் ஆட்டின் இறைச்சி நல்ல சுவை மற்றும் சிறப்பான இறைச்சி தரத்திற்காக அதிகம் விரும்பப்படுகிறது. பன்னூர் ஆட்டின் இறைச்சியில் இரும்பு, பொட்டாசியம், சோடியம் போன்ற தாது உப்புகளும் அதிக வைட்டமின் B12 இருப்பு காரணமாக வளரும் பருவத்தினருக்கு மிகவும் ஏற்றது. பொதுவாக, இறைச்சி சந்தையில் 1 கிலோ பன்னூர் மட்டன் 850 ரூபாய் முதல் 950 ரூபாய் வரை விற்கிறது.
முடிவுரை
அதிக லாபம் மற்றும் சந்தை தேவையுள்ள சிறந்த தரமான ஆட்டு கறி தரும் பன்னூர் செம்மறி ஆடு வளர்ப்பு பற்றிய அனைத்து தகவல்களையும் (குட்டி பெறுதல், கொட்டகை அமைத்தல், தீவனம், நோய் மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல்) ffreedom App இல் அறிந்துகொண்டோம்.