உறுதியும் சரியான அறிவும் எந்தத் துறையிலும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதற்கு பராஜு ராமமூர்த்தி ஒரு சிறந்த உதாரணம். விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவர் என்றாலும் முறையான கல்வி இல்லாததால், அவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பல சவால்களை எதிர்கொண்டார். ஆனால் விவசாயத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வமும், புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவரைத் தொடர்ந்தது.
பாதையைத் தேடாதீர்கள், பாதையை வகுத்திடுங்கள்
பராஜு ராமமூர்த்தி, விவசாயம் செய்ய முறையான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்த போது ffreedom app பற்றி அறிந்தார். தனது விவசாய நுட்பங்களை மேம்படுத்தி அவரது கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு வாய்ப்பைக் கண்டார். ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு பற்றி அறிந்துகொள்ள இந்த ஆப்பைப் பயன்படுத்தி தனது 5 ஏக்கர் பண்ணையில் இந்த நுட்பங்கள் அனைத்தையும் செயல்படுத்தினார். இன்று, அவர் தனது ஒருங்கிணைந்த பண்ணையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்ளூர் வாடிக்கையாளர்கள் சந்தைகளுக்கு விற்பனை செய்து 3.6 லட்சங்கள் என சிறப்பான வருமானம் ஈட்டுகிறார்.
பாராஜுவின் வெற்றிக் கதை விவசாய சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாக திகழ்கிறார். அவரது புதுமையான யோசனைகள், கடின உழைப்பு மற்றும் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விருப்பம் ஆகியவை அவரது வாழ்க்கையை மாற்றியது மற்றும் அவரது நிதி இலக்குகளை அடைய உதவியது. சரியான அறிவு மற்றும் நுட்பங்களுடன், எவரும் தங்கள் விவசாயத் தொழிலை லாபகரமான நிறுவனமாக மாற்ற முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
தினமும் வருமானம் பெறுங்கள் – ஒருங்கிணைந்த விவசாயத்தின் திறன்
ஒருங்கிணைந்த விவசாயத்தில் நீங்கள் நெல், சோளம், கீரைகள், காய்கறிகள் என பல வகை பயிர்களை நடுவதால் அவற்றின் வளர்ச்சி சீரான இடைவெளியில் மாறுபடுவதால் தினமும் ஏதாவது ஒரு கீரை, காய்கறி என சந்தையில் விற்று நீங்கள் வருமானம் பெறலாம். மேலும், செம்மறி ஆடு வளர்ப்பையும் செய்வதால் அதன் ரோமம், பால், இறைச்சி மற்றும் சாணம் என அனைத்தையும் விற்று நல்ல லாபம் பெறுவதற்கான சாத்தியம் மிகவும் அதிகமாகவே உள்ளது. மேலும், இவ்வகை விவசாயத்திற்கு அரசு சலுகைகள், மானியங்கள் குறித்தும் அறிந்து கொண்டார். அதன் வாயிலாக பல வழிகளில் வருமானம் பெறுகிறார்.
ffreedom app அளித்த வணிக அறிவுத்திறன் மற்றும் பிற திறன்கள்
சூர்யாபேட்டாவைச் சேர்ந்த 35 வயது விவசாயி பராஜு ராமுர்த்தி, ஒருங்கிணைந்த விவசாயத்தைத் தொடங்க விரும்பியபோது யூடியூப் வீடியோ வாயிலாக ffreedom app பற்றி அறிந்தார். தொடக்கத்தில், அவருக்கு நிதிக் கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், அவர் ஆப்-ல் எடுத்துக்கொண்ட கோர்ஸ்கள் தொடக்க முதலீடுகளை உருவாக்கும் வாய்ப்புகளை அளித்தது.
ஒருங்கிணைந்த வேளாண்மைக்கு தேவையான நிலத் தயாரிப்பு, ஒருங்கிணைந்த வேளாண்மை வகைகள், விரிவான விவசாயம் சார்ந்த துணை தொழில்கள், ஒருங்கிணைந்த வேளாண்மையில் 365 நாட்களும் சம்பாதிப்பது எப்படி, ஒருங்கிணைந்த வேளாண்மையில் தொழில்நுட்பம் மற்றும் நீரின் தேவை, உரம் மற்றும் பருவகால தன்மை, ஒருங்கிணைந்த விவசாயத்தின் சந்தை, நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் சவால்கள் போன்றவற்றை அறிந்து கொண்டார்.
தனது ஒருங்கிணைந்த விவசாயத்தில் உருவாகும் பயிர் கழிவுகளைத் செம்மறி ஆடுகளுக்கு உணவாக அளித்து கால்நடைகளின் உணவு தேவையை நிறைவு செய்கிறார். அதேபோல ஆடுகளின் சாணம் இயற்கை விவசாயத்தின் மிக சிறந்த உரமாக பயன்படுகிறது. இந்த வகையில் தனது நிலத்திற்கான உரச் செலவையும் சேமிக்கிறார்.
“கால்நடை வளர்ப்பையும் விவசாயத்தையும் இணைத்தால் எனக்கு அதிக லாபம் கிடைக்கிறது. காய்கறிகளை விற்று தினமும் சம்பாதித்து வருகிறேன். ஃப்ரீடம் ஆப் எனக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது, எனது வருவாயை அதிகரிக்க ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குகிறது.”