ஆடு வளர்ப்பு என்பது விலங்கு வளர்ப்பில் அதிக லாபம் தரும் தொழில்களில் ஒன்று. ஆட்டின் இறைச்சி, பால், கம்பளி மற்றும் எரு அதிக விற்பனை வாய்ப்புகளைக் கொண்டது. பெரும்பாலும் ஆடு என்பது பிற விலங்குகளான கோழி மற்றும் மாடு போன்றவற்றுடன் இணைந்து வளர்க்கப்படுகிறது. எனினும் ஆடு வளர்ப்பை (அதாவது செம்மறி மற்றும் வெள்ளாடு) திறம்பட செய்தால் அதிக லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஆட்டு இறைச்சியில் கொழுப்பு சிறிது அதிகம் என்றாலும் அதன் ஊட்டச்சத்து மதிப்பு மிகவும் அதிகம். குறிப்பாக நமது உடல் செல்கள், ரத்த செல்கள், மூளை செல்கள் புதிதாகவும் நன்றாக செயல்படவும் காரணமான வைட்டமின் பி வகைகளான B1 (தியாமின்), B2 (ரிபோஃப்ளேவின்), B3 (நியாசின்), B5 (பேண்டோதெனிக் அமிலம்), B6 (பைரிடாக்சின்), B7 ( பயோட்டின்), B12 (சயனோகோபாலமின்) மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது.
ஒரு சில ஆட்டு இனங்கள் இறைச்சி தேவைக்காக மட்டும் வளர்க்கப்படுகிறது. அப்படி இறைச்சிக்காக மட்டும் வளர்க்கப்படும் ஆட்டு இனங்களில் ஒன்று டார்பர் செம்மறி ஆட்டு இனம்.
குறைந்த கம்பளி, அதிக இறைச்சி வழங்கும் டான்
இறைச்சி பெறுவதற்கு என்று ஒரு ஆடு இனத்தை வளர்க்க வேண்டும் என்று இறைச்சி உற்பத்தியாளர்கள், விலங்கியல் வல்லுநர்களின் முயற்சி காரணமாக டார்பர் என்னும் ஆட்டு இனத்தை உருவாக்கினார்கள். இவ்வகை ஆடுகள் பிற செம்மறி ஆடுகளுடன் ஒப்பிடும் போது குறைவான கம்பளி உற்பத்தி செய்து அதிக இறைச்சியை வழங்குகின்றன.
பொதுவாக டார்பர் ஆடு இனங்கள் அதிகப்படியான கம்பளியை உற்பத்தி செய்வதில்லை. மேலும், உற்பத்தி செய்யப்படும் மிக குறைந்த அளவிலான கம்பளியும் தானாகவே உதிர்ந்துவிடுவதால் இறைச்சி வழியாக மட்டுமே நீங்கள் லாபம் பெற முடியும்.
டார்பர் ஆடு இனம் ஒரு பேரல் போன்ற வடிவுடன், கொம்புகளற்ற உயரம் குறைந்த மங்கலான கருப்பு அல்லது வெள்ளை முடி கொண்ட தலை உடையது. குறைந்த மூடி மற்றும் கலைந்த கம்பளியுடன் கருப்பான பாதத்தைக் கொண்டிருக்கும் இனம். டார்பர் ஆடு இனத்தில் வெள்ளை டார்பர் வகை ஆடு மற்றும் கருப்பு டார்பர் வகை ஆடு என இருவகைகள் உள்ளது.
அனைத்து காலநிலைகளையும் சமாளிக்கும் சாமுராய்
டார்பர் இன ஆடுகள் மழை, வெயில், புயல் மற்றும் வெள்ளம் போன்ற அனைத்து வகையான காலநிலைகளையும் தாக்குபிடித்து வாழும் திறன் கொண்டது. டார்பர் இன ஆடுகள் அனைத்து காலநிலைகளையும் சமாளிப்பதற்காக சிறப்பாக உருவாக்கப்பட்டது. தீவனமாக பசும்புல் தரலாம்.
தேவையென்றால் தானியங்களை உணவாக அளிக்கலாம். ஆனால், தானியங்களை உண்ணும் டார்பர் ஆட்டை விட பசும்புல் உண்ணும் ஆடு
விரைவாக எடை கூடுகிறது.
டார்பர் இன ஆடுகளின் தடிமனான தோல் அனைத்து வகையான காலநிலைகளையும் எளிதாக சமாளிக்க உதவுகிறது. டார்பர் இன ஆட்டின் தோல் உயர்ந்த தரத்தில் இருப்பதால் தோல் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.
தங்கம் போல விரைவாக எடை கூடும் இனம்
பிற செம்மறி ஆடு இனங்களைப் போல் இல்லாமல் டார்பர் இன ஆடுகள் விரைவான வளர்ச்சியைக் கொண்டுள்ளன. அதாவது, டார்பர் இன ஆடுகளின் குட்டிகள் நான்கே மாதத்தில் 36 கிலோ முதல் 40 கிலோ எடையை அடைந்து விடுகின்றன. விளக்கமாக கூற வேண்டுமெனில் ஒரு நாளில் ஒரு பவுண்டு எடையில் கால் பகுதி அளவில் வளர்ச்சி பெறுகின்றன. அதிகமான இனப்பெருக்கக் காலத்தைக் கொண்டுள்ளன. எனவே, நீங்கள் அதிக லாபம் பெறலாம்.
டார்பர் இன ஆடுகள் அதிக தசைகளால் படர்ந்து பெரிதாக வளரும் ஒரு செம்மறி ஆடு. டார்பர் இன கிடா ஆடுகள் 104 கிலோ முதல் 124 கிலோ வரை வளரும் திறன் கொண்டது. அதேநேரம் பெட்டை டார்பர் இன ஆடுகள் 70 கிலோ முதல் 95 கிலோ எடையை அடையும் திறன் கொண்டது. 1 கிலோ மட்டன் 750 முதல் 950 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
மேலும், சந்தையில் டார்பர் இன ஆடுகளின் இறைச்சிக்கு அதிக தேவை இருப்பதால் நீங்கள் அதிக லாபம் பெறுவது உறுதி.
முடிவுரை
குறைவான உயர்ந்த தரமான இறைச்சியை அளிக்கும் டார்பர் செம்மறி ஆடு வளர்ப்பில் பயன்படுத்தப்படும் உத்திகள் மற்றும் நுட்பங்கள் பற்றி அனைத்தையும் ffreedom ஆப் வழியாக அறிந்துகொண்டோம்.