சாக்லேட் வணிகத்தில் சாதனை படைக்கும் பெண்மணி
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயதான எஸ்தர் ராணி குட்டு. இவர் பத்தாம் வகுப்பு படித்துள்ளார் மற்றும் இல்லத்தரசியாக உள்ளார். எனினும், தொழில்முனைவோராக வேண்டும் தனது விருப்பத்தை விட்டுவிடவில்லை. தனது வீட்டில் இருந்தபடியே ஒரு வணிகம் தொடங்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அதற்கான வழிகாட்டுதல் இல்லாமல் தடுமாறினார். எஸ்தர் அவர்களது நண்பி ஒருவர் வழியாக நமது ffreedom app பற்றி தெரிந்துகொண்டார். ffreedom app-ல் தனது விருப்பமான சாக்லேட் தயாரிப்பு வணிகம் பற்றி அறிந்து ஊக்கம் பெற்றார்.
உடனடியாக தனது சொந்த சாக்லேட் தயாரிப்பு வணிகத்தை ஆரம்பித்தார். தொடக்கத்தில் சாக்லேட் வணிகத்தில் சிறிது தடுமாறினாலும் தனது கணவர் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சாக்லேட்டுகள் தயாரித்தார். உலர் பழங்கள் கொண்டு செய்யப்படும் வெள்ளை சாக்லேட்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அமோக ஆதரவை வெளிப்படுத்தினர்.
ffreedom app அளித்த வழிகாட்டுதல்
ffreedom app-ல், சாக்லேட் வணிகம் தொடங்குவதற்கான மூலதனத் தேவைகள், உரிமம், அனுமதி மற்றும் உரிமை, மூலப்பொருட்கள், உபகரணங்கள் மற்றும் பணியாளர் தேவைகள், முழுமையான சாக்லேட் தயாரிக்கும் செயல்முறை, இருப்பிடம், மார்க்கெட்டிங், பேக்கேஜிங் மற்றும் போக்குவரத்து, வாடிக்கையாளர் சேவை, விலையிடல், செலவுகள் மற்றும் லாபம், மற்றும் சவால்கள் மற்றும் இடர் மேலாண்மை போன்றவற்றை திருமதி, எஸ்தர் அவர்கள் தெரிந்துகொண்டார்.
வெற்றிகரமான சாக்லேட் வணிகத்தில் முத்திரை பதித்த பெண்மணி
ffreedom app வாயிலாக பெற்ற அறிவுத்திறன் மற்றும் பிற திறன்கள் வாயிலாக மூலப் பொருள்கள் கொள்முதல், தயாரிப்பு செயல்முறை, பேக்கிங் பற்றி எஸ்தர் கற்றுக்கொண்டார். கோர்ஸ் வழிகாட்டியான சைலஜா எனக்கு அனைத்தையும் தெளிவாக விளக்கினார் என்று திருமதி.எஸ்தர் கூறுகிறார்.
இத்துடன் நின்றுவிடாமல் உங்கள் வணிகத்தை ஆரம்பித்து நடத்துவது வரை நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களிலும் உங்கள் உடன் ffreedom app Nest ஊழியர்கள் துணை நிற்பார்கள். சாக்லேட் தயாரிப்பு வணிகத்தின் நுட்பங்கள், உத்திகள், செலவுகள், பணியாளர் தேவை, பேக்கிங், சந்தைப்படுத்தல் தொடர்பான அனைத்தையும் அறிந்து செயல்படுத்த தொடங்கினேன். எனது தொழில்முனைவோர் முயற்சிக்கு எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மிகவும் ஆதரவாக உள்ளனர்.
தொடக்கத்தில் மாதிரிகளைத் தயாரித்து சுவைத்து பார்த்தேன், அதில் பெற்ற நம்பிக்கையால் 10 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து மூலப் பொருள் கலவை, அச்சுகள், ரேப்பர்களை விஜயவாடாவிலும் ஹைதராபாத்திலும் கொள்முதல் செய்தேன். டார்க் சாக்லேட், வெள்ளை சாக்லேட், செர்ரி சாக்லேட், உலர் பழங்கள் கொண்ட சாக்லேட், தேங்காய் சுவை கொண்ட சாக்லேட்கள் போன்றவற்றை தயாரிக்க தொடங்கினேன்.
எனது சாக்லேட் தயாரிப்புகளின் பல்வேறு வகையான புகைப்படங்களை ffreedom app-ல் பதிவேற்றினேன். இன்று, பல வகைகள், விலைகளில் எனது ஹோம் மேட் சாக்லேட்களை அருகில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கடைகளுக்கு விநியோகம் செய்கிறார்.
அதன் வாயிலாக நான் பல வாடிக்கையாளர் அழைப்புகளைப் பெறுகிறேன். மேலும், துண்டு பிரசுரங்கள், வாட்ஸ்அப் வாயிலாக எனது சாக்லேட் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தி எனது வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று விரும்புகிறார். எனவே, திருமதி எஸ்தரின் ஒரு தொழில்முனைவோராக வேண்டும் எனும் கனவை அவரால் நனவாக்க முடிந்தது. இதன் வாயிலாக, அவரது நிதி இலக்குகளை அடைந்து தனது குடும்பத்தின் நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தது.