Home » Latest Stories » தனிப்பட்ட நிதி » எண்ணம் போல் வாழ்க்கை – நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்

எண்ணம் போல் வாழ்க்கை – நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்

by Gunasekar K
160 views

உங்களுக்கு ஒரு கேள்வி. வாழ்க்கையைச் சந்தோசமாக வாழ தேவையானது என்ன? நல்ல எண்ணங்கள், யாரையும் வெறுக்காமல் இருப்பது, நல்ல மனம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இவற்றை வைத்து நமது பசியைக் கட்டுப்படுத்த முடியுமா? அல்லது தேவையான பொருளை வாங்க முடியுமா? உண்மையில் சுமுகமான நடைமுறை வாழ்க்கைக்கு போதுமான அளவு பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் மன நிறைவோடு சந்தோசமாக இருக்க முடியும். ஏனென்றால் 21 ஆம் நூற்றாண்டில் அனைவரும் ஒரு பந்தயத்தில் ஓடுவதைப் போல ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

உங்களுக்கு தேவைப்படும் பொருள், சேவை என்று எதுவாக இருந்தாலும் அதை பெற காசு தேவை. நாம் அனைவரும் இளம் வயது முதல் நடுத்தர வயது வரை ஏதாவது ஒரு வேலை செய்து சம்பாதிக்கிறோம். முதிய வயதில் நம்மால் முன்பு போல உழைக்க முடியாது. அப்போது நம் தேவைகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? நமது பிள்ளைகள் என்று ஒரு சிலர் கூறலாம். ஆனால், யாராக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் செய்ய முடியாது. எனவே. உங்கள் தேவையை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு காசு சேர்த்து வைப்பது உங்கள் எதிர்காலத்தைச் சிறப்பாக அமைத்துக்கொள்ள உதவுகிறது.  

நிதி சுதந்திரம் – உங்கள் வருமான வழிகளை பெருக்குங்கள் 

ராஜா, புதிதாக திருமணமானவர். நல்ல வேலை, நல்ல சம்பளம் என நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு வேகத் தடை போல அவர் வேலை பார்த்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் விரைவில் மூடப்படும் என்னும் தகவல் வந்தது. அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?  இந்த வேலையில் சேருவதற்கு முன்பே அவர் பரஸ்பர நிதி, பங்கு சந்தை, வங்கி சேமிப்பு என பல வழிகளில் வருமானம் பெற்று வந்ததால் மூன்று மாதங்களுக்கு தேவையான பணம் அவர் கையில் இருந்தது. ராஜாவிற்கு ஒரே மாதத்தில் வேறு ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டது.  

இதை எதிர்மாறாக யோசித்து பாருங்கள். ஒரு வேளை மூன்று மாதங்கள் ஊதியமும் இல்லாமல் வேறு வருமானமும் இல்லாமல் அவர் எப்படி வாழ்க்கையை நகர்த்தி இருக்க முடியும்? இங்குதான் நாம் அனைவரும் தவறு செய்கிறோம். சரி, நல்ல வேலை, நல்ல சம்பளம் உள்ளது இனி நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பெறுகின்ற வருமானத்தைச் சேமிக்காமல் செலவு செய்கிறோம். எதிர்காலத்திற்கு என்று ஒரு தொகையைச் சேர்த்து வைப்பது உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் எதிர்பாராத நிதி இடர்பாடுகளில் இருந்து பாதுகாக்கும்.   

போதும் என்ற மனம் வேண்டாம்

நமது தமிழ் மொழியில், “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்று ஒரு பழமொழி உள்ளது. இதன் பொருள் இருப்பதை வைத்து நிறைவாக வாழ வேண்டும் என்பதே. நவீன உலகில் இந்த முதுமொழி பொருந்துமா? என்பது சந்தேகமே. ஏனென்றால், நமது அப்பா அரசாங்க உத்தியோகத்தில் 

 இருந்தார். எப்படி இருந்தாலும் மாத மாதம் வருமானம் வந்துவிடும். தற்போதைய பன்னாட்டு உலகில் பெரும்பாலானோர் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளும் குறைகிறது, அதிகரிக்கிறது. 

எனவே, ஒரே வருமானத்தை மட்டும் நம்பியிருக்க இயலாது. உங்களுக்கு வருமானம் வரும் வழிகளை நீங்கள் அதிகரித்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, பரஸ்பர நிதி. இந்தத் திட்டத்தில் மாத மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வந்தால் ஒரு நிலையான வருமானத்தை உருவாக்கலாம்.  

செலவைக் கட்டுப்படுத்துங்கள்! சேமிப்பை அதிகப்படுத்துங்கள்!

நீங்கள் மாத வருமானம் அல்லது உங்களது வருமான ஆதாரம் ஒன்று தான் என்றால் நீங்கள் வறுமை கோட்டுக்கு சற்று மேலே வாழ்கிறீர்கள் என்று பொருள் என பிரபல பொருளாதார நிபுணர் வாரன் பபெட் கூறியுள்ளார். இதன் பொருள் உங்களுக்கு பல வழிகளில் பணம் வரும் வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதே.

தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள் (எ.கா. பொது 

போக்குவரத்தைப் பயன்படுத்துதல், அருகிலுள்ள கடைகளுக்கு நடந்து செல்லுதல், அவசியமான பொருட்களை மட்டும் வாங்குதல் போன்றவை). வருமானத்தில் 30% சதவீதம் சேமிப்பாக எடுத்துவைக்க வேண்டும். எ.கா. 50000 ரூபாய் வருமானம் என்றால் நீங்கள் மாதம் 15,000 ரூபாயைச் சேமித்து வைக்க வேண்டும். அப்படியென்றால் ஒரு வருட முடிவில் உங்களிடம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இருக்கும். பத்து வருடங்களில் 18 லட்சங்கள் இருக்கும். மலைப்பாக இருக்கிறதா? ஆம். சிறு துளி பெரு வெள்ளம் எனும் பழமொழிக்கு ஏற்ப சேமிப்பு வழியாக அதிகரிக்கும் பணம். 

முடிவுரை 

உங்கள் வருமானத்தைப் பெருக்க  தேவையான நுட்பங்கள் பற்றி அனைத்தையும் ffreedom ஆப் இன் நிதி சுதந்திர கோர்ஸில் அறிந்துகொண்டோம். 

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.