வளம் தரும் சாக்லேட் வணிகம்
காகுடுறு ஷர்மிளா, இந்தியாவின் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தின் அல்லாடுபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் வெறும் 1000 ரூபாய் முதலீட்டில் தனது தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்கினார். ffreedom app-ல் சாக்லேட் தயாரிப்பு தொடர்பாக அனைத்து திறன்கள் மற்றும் உத்திகளை அறிந்துகொண்டார். பின்னர், 1000 ரூபாய் முதலீட்டில் தனது சொந்த சாக்லேட் வணிகம் தொடங்கினார். இன்று நண்பர்கள், உறவினர்கள் தொடங்கி உள்ளூர் கடைகள் வரை தனது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளார். மேலும், தான் கற்றுக்கொண்டதை தனது பகுதியில் உள்ளவர்களுக்கும் கற்று தந்து அவர்கள் வாயிலாக உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தி வணிகத்தை மேலும் வளர்த்துள்ளார்.
வானமே எல்லை! முயன்றால் முடியாதது இல்லை
பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலை கிடைத்தால் போதும் என்று ஒன்றிலேயே நின்றுவிடுகிறார்கள். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, Jack of all trades Master of None. இதன் பொருள் அனைத்திலும் ஏதோ ஒன்று தெரியும். ஆனால், எதிலும் முழுமையாக தெரியாது. சுருக்கமாக கூறினால் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், நமது ஷர்மிளா அவர்கள் ffreedom app-ல் தைவான் கொய்யா விவசாயம் தொடர்பான கோர்ஸைப் பார்த்தார். அந்த விவசாயத்தால் ஈர்க்கப்பட்ட ஷர்மிளா 1,00,000 ரூபாய் முதலீடு செய்து 3110 செடிகளை மூன்று ஏக்கர் நிலத்தில் நட்டு வளர்த்தார். அத்துடன் நின்றுவிடாமல் சாமந்தி பூக்கள், தக்காளிகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயிர்கள் மற்றும் ஒரு பசு மற்றும் எருமையை வளர்த்து அவற்றின் சாணத்தை இயற்கை உரமாக பயன்படுத்துகிறார். எனவே, சாக்லேட் வணிகம் தொடங்கி கொய்யா, பசு மற்றும் எருமை வளர்ப்பு என ஒருங்கிணைந்த விவசாயம் செய்து தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
பல மடங்கு லாபம் தரும் சாக்லேட் வணிகம் மற்றும் ஒருங்கிணைந்த விவசாயம்
ஷர்மிளா, தனது சாக்லேட் வணிகத்தில் ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். தனது ஒருங்கிணைந்த விவசாயம் வாயிலாக காய்கறிகள், பால் போன்றவற்றை விற்று ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
ffreedom app இல் சாக்லேட் வணிகம் மற்றும் ஒருங்கிணைந்த விவசாயம் தொடர்பான ஆன்லைன் வீடியோ மற்றும் உள்ளடக்கத்தைப் பார்த்து கற்று வணிகம் தொடங்கினார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அளித்த வரவேற்பு வணிகத்தை விரிவுப்படுத்த தூண்டுகிறது. இவ்வணிகத்தில் பெற்ற வெற்றி ஒருங்கிணைந்த விவசாயத்திலும் அவரது தடத்தைப் பதிக்க ஊக்குவித்தது.
இவை அனைத்தும் ஷர்மிளாவின் திட்டமிடல், உறுதியான மனம் மற்றும் விடாமுயற்சியால் பெறப்பட்டது. கடந்த மாதத்தில் அவரது சாக்லேட் வணிகத்தில் ரூ. 10000 லாபமாக பெற்றார். எனவே, நீங்கள் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் அதற்கு தேவையான படிகளைச் செயல்படுத்த வேண்டும். தோல்வி வந்தால் சோர்ந்துவிட கூடாது. விடா முயற்சியுடன் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருக்க வேண்டும். எங்கு முயற்சி உள்ளதோ அங்கு வெற்றி உள்ளது. “என்னை போன்ற மக்களுக்கு உதவவே ffreedom app உள்ளது. வணிகத்தை எப்படி தொடங்க வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று அறியாதவர்களுக்கு வழிகாட்டுகிறது” – ஷர்மிளா