விலங்கு வளர்ப்பு என்பது நெடுங்காலமாக உள்ள ஒரு தொழில். மனிதர்கள் இறைச்சி, பால், முட்டை போன்ற தேவைகளுக்காக விலங்குகளைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கின்றனர். விலங்கு வளர்ப்பில் முதன்மையானது மாடு. பால் தேவைக்காக மாடு வளர்க்கப்படுகிறது.
நமது நாட்டு மாடுகளை விட கிர் வகை மாடுகள் அதிக பால் தருகிறது. அதாவது, ஒரு கிர் வகை மாட்டில் இருந்து ஒரு நாளைக்கு 50-80 லிட்டர்கள் A2 வகை பால் பெறலாம். இந்த கிர் மாடு குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு மாட்டு இனம் ஆகும். இது தரும் A2 வகை பாலுக்கு மிகவும் அதிகமான சந்தை தேவை உள்ளது. நல்ல விலையும் வழங்கப்படுகிறது.
A2 வகை பாலில் வைட்டமின்கள் மற்றும் கொலஸ்ட்ரம் அடர்ந்துள்ளது. நாள்பட்ட நோய்களான தலைவலிகள், ஆஸ்துமா, மூட்டு வலிகள், தைராய்டு மற்றும் அமிலத்தன்மை அதிகமாதல் போன்றவற்றையும் புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
ஒரு நாளைக்கு 80 லிட்டர்கள் பால் தரும் இந்திய வகை மாடு
பொதுவாக அதிக பால் தரும் மாடுகளில் வெளிநாட்டு ரகமான ஜெர்சி இனங்கள் தான் அதிக பால் தரும். ஆனால், நீங்கள் படித்தது சரிதான். ஒரு நாளைக்கு 80 லிட்டர்கள் வரை பால் தரும் கிர் மாடு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாட்டு மாடு வகை. அதிக பால் தரும் இந்திய மாட்டு இனங்களில் கிர் இன மாடுகளே முதன்மையானது.
கிர் பால் பண்ணை அமைத்தல் மற்றும் கிர் பசுவின் பண்புகள்
ஒரு கிர் மாட்டின் பண்ணை கொட்டகை குறைந்தது 18 அடி இருக்க வேண்டும். ஒரு மாட்டிற்கும் மற்றொரு மாட்டிற்கும் குறைந்து 5 சதுர மீட்டர்கள் இடைவெளி விட வேண்டும். கொட்டகை ஈரப்பதம் இல்லாமல் தூய்மையாக வைக்க வேண்டும்.
இந்த மாட்டு இனங்கள் செவலை, வெள்ளை நிறங்களில் இருக்கும். பிறந்த கிர் கன்று 12 கிலோ எடை இருக்கும். இவை பல்வேறு காலநிலைகள், வறட்சி சூழ்நிலைகள் மற்றும் பலவிதமான நோய்களுக்கு எதிராக இயற்கையான எதிர்ப்பு திறன் கொண்டது.
கிர் பசு வளர்ப்பிற்குத் தேவையான முதலீடு, உணவு மற்றும் நோய் மேலாண்மை
ஒரு கிர் மாடு வாங்க 1 ½ லட்சங்கள் தேவைப்படும். வங்கி கடன் அல்லது அடமானக் கடன் பெறலாம். உலர்ந்த தாவரங்கள், புற்கள், பருத்தி புண்ணாக்கு, சோயா உமி, கேரட், பீட்ரூட் போன்றவற்றை உணவாக அளிக்கலாம்.
வாரம் ஒரு முறை கரும்பு கொடுக்கலாம். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை வெல்லம் தர வேண்டும். ஒரு நாளைக்கு 20 முதல் 30 லிட்டர்கள் நீர் தரலாம்.
காம்பு நோய், ஜீரம், கழிச்சல், புண்கள் ஏற்படுகிறது. அருகிலுள்ள விலங்கு நல மருத்துவர் அல்லது விலங்கு மருத்துவமனையை நாடலாம். FMA தடுப்பூசி போடுவது நோய்களைத் தடுக்கும்.
கிர் பசுவின் வாழ்க்கை சுழற்சி மற்றும் பொருட்கள் மற்றும் துணைத் தயாரிப்புகள்
கிர் பசு 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும். 5 மாதங்களில் கன்று ஈனும். ஒரு கிர் கன்று இனப்பெருக்கத்திற்கு தயாராக 3 ½ வருடங்கள் ஆகும். அதன் வாழ்நாளில் 10 முதல் 12 கன்றுகள் வரை ஈனும். கிர் பசுவின் பாலில் இருந்து
தயிர், மோர், நெய், பன்னீர் போன்ற பல வணிக ரீதியான பொருட்களைப் பெறலாம்.
மேலும், பால் சார்ந்த பல வகையான ஸ்னாக்ஸ்களை தயாரித்து சந்தைப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, பால் இனிப்புகள், ஐஸ்கிரீம்கள், சாக்லேட்டுகள் என பாலை மதிப்பு கூட்டி விற்கலாம்.
சந்தைப்படுத்தல், விலை மற்றும் லாபம்
1 1/2 வருட கிர் மாட்டு கன்றை 35 ஆயிரம் ரூபாய்க்கும் 2 1/2 வருட கிர் மாட்டு கன்றை 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கலாம். ஒரு சினையுற்ற கிர் மாட்டை 95 ஆயிரம் முதல் 1 1/2 லட்சம் வரை விற்கலாம். ஒரு லிட்டர் A2 பால் கிராமங்களில் 80 ரூபாய்க்கும் நகரங்களில் 150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மாட்டின் சாணத்தை இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகிறது.
முடிவுரை
சிறந்த நோய் எதிர்ப்பு திறன் மற்றும் அதிக பால் தரும் திறனுள்ள கிர் மாடு வளர்ப்பு பற்றி அனைத்தையும் ffreedom வழியாக தெளிவாகவும் விரிவாகவும் அறிந்துகொண்டோம்.