கர்நாடக மாநிலம், விஜயபுராவைச் சேர்ந்தவர் குருராஜ். விவசாயக் குடும்ப பின்னணி கொண்டவர் என்றாலும் தொடக்கத்தில் மலர் விவசாயத்தில் பல இழப்புகளை எதிர்கொண்டார். இன்று அதே மலர் விவசாயத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
மலர் விவசாயத்தில் சாதித்த டூர் மற்றும் டிராவல்ஸ் ஓட்டுநர்
கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருராஜ். இவரது குடும்பம் விவசாய பின்னணியைக் கொண்டது என்றாலும் ஒரு டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். குருராஜ், தனது சிறுவயது முதலே விவசாயம் மீது பேரார்வம் கொண்டு இருந்தார். தொடக்கத்தில் இவரது தந்தை மலர் வளர்ப்பு விவசாயத்தைத் தொடங்கினார். நஷ்டம் ஏற்பட்டது. பிறகு சிறிது காலம் கழித்து குருராஜ் தோட்டக்கலை பயிர்களை முயற்சி செய்தார். அதிலும் நஷ்டம் அடைந்தார். பின்னர் குடும்பத்தின் நிதி தேவைகளை எதிர்கொள்ள ஒரு டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்தார்.
பின்னர், கொரோனா ஊரடங்கு காலத்தில் ffreedom app-ல் கடன் பெறுதல் தொடர்பான கோர்ஸ்களைப் பார்த்தார். நிதி சுதந்திரம் பெறவே முதலில் இந்தப் ஆப்பை டவுன்லோட் செய்தார். லாக்டவுன் சமயத்தில் மலர் வளர்ப்பு மீது ஆர்வம் கொண்டார்.
சரியான வழிகாட்டுதல், சிறப்பான வெற்றி
ffreedom app-ன் மலர் வளர்ப்பு கோர்ஸில் நிலத் தயாரிப்பு, விதை தேர்வு, நடவு செயல்முறை, நீர் பாசனம், அறுவடை, சந்தைப்படுத்தல் தொடர்பான உத்திகள் மற்றும் நுட்பங்களை அறிந்துகொண்டார். தனது 1 ஏக்கர் நிலத்தில் சாமந்தி பூவைப் பயிரிட்டு நேரடியாக சந்தையில் விற்றார்.
மழைக்காலம் முடிந்த பின், வெயில் காலம் தொடக்கத்தில் மறுபடியும் தனது மலர் வளர்ப்பை குருராஜ் தொடங்கினார். இம்முறை ரோஜா, மல்லிகை, சூரிய காந்தி என பல வகை மலர்களை நடவு செய்தார். இம்மலர்களை நடவு செய்வதற்கான முறைகள் மற்றும் திறன்களைக் கற்றுக்கொண்டார், எனவே, தனது முயற்சி மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்து மேற்கண்ட அனைத்து மலர்களையும் பயிரிட்டார். விளைவித்த மலர்களை இடைத்தரகர்கள் யாரிடமும் விற்காமல் நேரடியாக சந்தையில் விற்கிறார்.
மலர்கள், பல்வேறு விதங்களில் பயன்படுகின்றன. முக்கியமாக கோவில்கள், விழாக்கள், திருமணங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகளில் அலங்காரப் பொருட்களாக பயன்படுகின்றன. வாசனை திரவியங்கள், மருந்து பொருட்களில் சுவைவூட்டியாகவும், ஆடைகள் தயாரிப்பில், உணவு பொருட்கள், தீவனத் தயாரிப்பில் இயற்கை நிறமேற்றியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
விடாமுயற்சி இருந்தால் அனைத்தும் சாத்தியம் தான்
தொடக்கத்தில், தனது மலர் வளர்ப்பு விவசாயத்தில் சறுக்கல்களை எதிர்கொண்டாலும் தனது விடா முயற்சி மற்றும் ffreedom app அளித்த வழிகாட்டுதல் வாயிலாக இன்று ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கிறார். மாதம் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரங்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற இலக்கை அமைத்துள்ளார்.
தனது விவசாய முயற்சியை விரிவுபடுத்த ஒருங்கிணைந்த விவசாயம் கோர்ஸைப் பார்த்துள்ளார். அதன் வாயிலாக தனது நிலத்தில் பழங்களை நடவு செய்ய திட்டமிட்டுள்ளார். நிதி சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய ffreedom app-க்கு அவர் நன்றி கூறுகிறார். மேலும், வணிகம் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு தாங்கள் ஆரம்பிக்க விரும்பும் தொழில் பற்றிய முறையான அறிவுத்திறனை பெற வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அது மட்டுமில்லாமல் தங்கள் விளைபொருட்களுக்கு சந்தையில் வழங்கப்படும் விலை தொடர்பான தகவல்களையும் பிற சந்தை பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என குருராஜ் கூறுகிறார்.