தொழில்முனைவோரான உடற்கல்வி ஆசிரியர்
கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி ஒரு உடற்கல்வி ஆசிரியர். 12 வருடங்களாக உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஒருநாள் யூடியூப்பில் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது ffreedom app-ன் விளம்பரத்தைப் பார்த்தார். இந்த ஆப்-ல் தன்னை பதிவு செய்து தனது விருப்பமான மலர் வளர்ப்பு தொடர்பான கோர்ஸை எடுத்துக்கொண்டார்.அந்தக் கோர்ஸால் ஊக்கம் பெற்ற ஜோதி கடந்த வருடம் முதல் மிராபெல்
ரோஜா வளர்ப்பைச் செய்து வருகிறார். மேலும், வெகு விரைவில் தனது 1 ஏக்கர் நிலத்தில் ஒரு தேனீ பண்ணை மற்றும் மண்புழு உரத் தயாரிப்பு யூனிட்டை நிறுவ திட்டமிட்டுள்ளார்.
மலர் வளர்ப்பில் உள்ள மகத்தான வாய்ப்புகள்
“பெண்கள் நினைத்தால் எதை வேண்டுமாலும் சாதிக்கலாம்” என்று ஜோதி கூறுகிறார். மலர்களின் மணம் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களில் ஒரு வாசனை பொருட்களாக பயன்படுகின்றன. எனவே, மலர்களுக்கான சந்தை தேவை மற்றும் லாபத் திறன் அதிகமாகவே உள்ளது.
ஜோதி அவர்கள், தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் 4-ல் மூன்று பங்கில் மிராபெல் ரோஜாவைப் வளர்ப்பைச் செய்து வருகிறார். தொடக்கத்தில் ஒரு சில சவால்களை எதிர்கொண்டாலும் அவற்றை எதிர்கொண்டு இன்று லாபகரமான மலர் வளர்ப்பைச் செய்து வருகிறார்.
தனது விடா முயற்சியால் மலர் வளர்ப்பில் இன்று மாதம் ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரங்கள் வரை சம்பாதிக்கிறார். கடந்த வருடத்தில் மட்டும் 1 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளார். ஜோதியின் மலர் வளர்ப்பு முயற்சியில் அவரது கணவர் தொடர்ந்து ஆதரவையும் நம்பிக்கையையும் அளித்துள்ளார்.
முயன்றால் எதுவும் சாத்தியம் தான்
ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். நீங்கள் ஒரு பள்ளியில் பன்னிரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறீர்கள். அப்பணியில் நீங்கள் நிபுணராக இருப்பதோடு நல்ல வருமானமும் ஈட்டுவீர்கள். இப்போது புதிய ஒன்றை முயற்சி செய்வீர்களா? பெரும்பாலானோர் பதில் இல்லை என்பதாக தான் இருக்கும். ஆனால், நமது ஜோதி அவர்கள் தனது மனம் கூறியதைப் பின்பற்றி ffreedom app அளித்த வழிகாட்டுதலுடன் வெற்றிகரமான மலர் வளர்ப்பைத் தொடங்கினார்.
தனது வேலையே போதும் என்று ஜோதி நினைத்து இருந்தால் இன்று அவர் மாதம் 1 லட்ச ரூபாய் வரை சம்பாதித்து இருக்க முடியுமா? அவர் குடும்பத்தின் நிதி இலக்குகளை அடைந்து இருக்க முடியுமா? எனவே, உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். அது ஒரு போதும் உங்களைத் தவறாக வழி நடத்தாது. தொழில் தொடங்கும் பயணத்தில் உங்கள் குடும்பத்தின் ஆதரவும் இருந்தால் வெற்றி என்பது உங்கள் பின்னால் வரும் என்பதில் ஐயமில்லை.
ஜோதியின் மலர் வளர்ப்பில் ffreedom app ஆற்றிய பங்கு
மலர் வளர்ப்பைத் தொடங்க வேண்டும் எனும் விருப்பத்தை மட்டுமே வைத்திருந்த ஜோதிக்கு அதை எங்கு, எப்படி தொடங்க வேண்டும்? நிலத் தயாரிப்பு, மூலப் பொருள் கொள்முதல், நடவு, உரம், பணியாளர் தேவை, நீர் பாசனம், பூச்சிக்கட்டுப்பாடு, அறுவடை, பேக்கிங் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான உத்திகள் மற்றும் நுட்பங்கள் அனைத்தையும் ffreedom app வாயிலாக கற்றுக்கொண்டார்.
மேலும், இந்த ஆப்-ன் ffreedom nest ஊழியர்கள் அளித்த ஆதரவு மற்றும் அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கு விடையளித்து ஊக்கப்படுத்தியது என ஜோதியின் மிராபெல் ரோஜா மலர் வளர்ப்பு தொழில்முனைவு முயற்சியில் ffreedom app ஆற்றிய பங்கு அளப்பரியது.