மகேந்திரா ஹெச் பேடகேரி, கர்நாடகத்தின் கடக் மாவட்டம் லக்ஸ்மேஸ்வர் தாலுகா, ராமகிரி கிராமத்தை சேர்ந்தவர். தொடக்கத்தில் ஹவேரியில் உள்ள KLE கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக 8000 சொற்ப சம்பளத்தில் பணிபுரிந்தார். விரிவுரையாளராக பணிபுரிந்தாலும் அவரது ஆர்வம் இயற்கை விவசாயம் மீதே இருந்தது. அதற்கான வழிகாட்டுதல் இல்லாமல் தடுமாறி வந்தார். யூ டியூப் இல் ffreedom app பற்றி அறிந்து பதிவு செய்து கொண்டார்.
உங்கள் திறன்களை வெளிக்கொண்டு வாருங்கள்
திட்டமிட்ட கடின உழைப்பு மற்றும் தீர்மானத்துடன் ffreedom app-ல் உள்ள இயற்கை விவசாயக் கோர்ஸில் சேர்ந்தார். இயற்கை விவசாயம் தொடர்பான அனைத்து நுணுக்கங்கள் மற்றும் உத்திகளை அறிந்தார். அதாவது, நிலம் தயார்படுத்துதல், மண்ணின் pH, விதைத்தல், உரமிடுதல், நீர்ப்பாசனம், பணியாளர் தேவை மற்றும் அறுவடை தொடர்பாக அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
தொடக்கத்தில் சில பின்னடைவுகளை எதிர்கொண்டாலும் தனது விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற தொடங்கினார். மேலும், ffreedom app வழங்கிய பல ஆதாரங்கள், அதாவது பயிற்சி வகுப்புகள் மற்றும் நேரடி வேளாண் அமர்வுகளால் ஊக்கம் பெற்ற மகேந்திரா இயற்கை விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் (வெள்ளாடு மற்றும் செம்மறியாடு) தொடங்கினார். இப்போது அவர் இருக்கும் பகுதியில் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரங்களிலும் மிகவும் பிரபலமான இயற்கை விவசாயியாக உள்ளார்.
மனது இருந்தால் மார்க்கம் உண்டு
உங்களுக்கு ஒரு கேள்வி? மகேந்திரா அவர்கள் தனக்கு கிடைத்த விரிவுரையாளர் வேலையிலே தொடர்ந்து இருந்தால் இன்று அவர் தன்னிறைவு பெற்ற இயற்கை விவசாயியாக மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டி இருக்க முடியுமா? இல்லை அல்லவா. ஒரு பழமொழி உண்டு உங்கள் ஆர்வத்தையே தொழிலாக மாற்றினால் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதன் பொருள் நீங்கள் விருப்பத்தையே வேலையாக மாற்றினால் உங்கள் வாழ்க்கையில் சலிப்பே வராது என்பதே.
ஒரு வேலையை சிறப்பாக எப்படி செய்வது? நீங்கள் விரும்புவதை செய்வதே அதற்கான வழி – ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார். எனவே, உங்கள் வாழ்க்கையை மாற்ற உங்களால் மட்டுமே முடியும். அதாவது, நீங்கள் மனது வைத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் மாற்றம் நிகழும். எனவே, தற்போதைக்கு போதும் என்று உங்கள் தகுதிக்கு குறைவான இடத்தில் நின்றுவிடாமல் உண்மையான திறனையும் அறிந்து உழைத்தால் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாத அளவிற்கு வெற்றி பெற முடியும். திரு. மகேந்திரா அவர்களது வாழ்க்கையும் இதையே உணர்த்துகிறது.
உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள் – முயற்சி செய்வதில் தவறில்லை
இன்று மகேந்திரா, தனது உள்ளுணர்வைப் பின்பற்றியதால் அவர் விரும்பிய தொழிலை மிகவும் நேசித்து செய்கிறார். தற்போது 8 ஏக்கர் நிலத்தில் மாங்காய்கள், சீத்தா பழங்கள், தேங்காய், முருங்கை மற்றும் பல பயிர்களை விவசாயம் செய்வதுடன் கால்நடை வளர்ப்பையும் (ஆடு மற்றும் செம்மறி ஆட்டு பண்ணை) வெற்றிகரமாக செய்து வருகிறார்.
தனது விவசாயம் மற்றும் வணிக முயற்சிகளுடன் இயற்கை விவசாயத்தின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். நஞ்சில்லா உணவை தயாரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளுக்கு இவர் ஆற்றிய பங்கு இயற்கை விவசாயத் துறையில் நிபுணராக வழிவகுத்தது.
மகேந்திரா, தனித்தன்மையான அறிவுத்திறன்களைப் பெற்றவர். அதாவது, ஆங்கிலம் பயிற்றுவிக்கும் திறனுடன் ஒரு வெற்றிகரமான வன்பொருள் வணிகமும் நடத்தி வருகிறார். இப்போது ffreedom app வாயிலாக இயற்கை விவசாயம் தொடர்பான அறிவுத்திறனைப் பெற்று நஞ்சில்லா உணவையும் நிலையான தற்சார்பு விவசாயத்தையும் ஊக்குவித்து வருகிறார்.