Home » Latest Stories » விவசாயம் » சூப்பர் பலன்கள் கொண்ட சூப்பர் உணவு

சூப்பர் பலன்கள் கொண்ட சூப்பர் உணவு

by Gunasekar K
114 views

நமது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா காலத்தின் உணவுகளுக்கும் இன்றைய கால உணவுகளுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. நிறம், சுவை மட்டும் இல்லாமல் ஊட்டச்சத்துகளிலும் அதிக வித்தியாசம் உள்ளது. அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு அக்கால உணவுகளே காரணம். வயலில்  விளைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகளின் ஊட்டச்சத்துகளே. சரித்திரம் மீண்டும் திரும்பியுள்ளது. “மோரிங்கா” எனும் பெயர் ஏதோ வெளிநாட்டு பெயர் போல உள்ளதா? கவலை வேண்டாம். 

நம்மூர் முருங்கையின் புதிய பெயர்தான் அது. முருங்கை மரம் என்பது அதன் இலைகள், பூக்கள், காய்கள், விதைகள் மற்றும் வேர்கள் என அனைத்தும் பயன்தரக் கூடியது. முருங்கையில் வைட்டமின் A, வைட்டமின் C, பொட்டாசியம், கால்சியம், புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. 

எனவே, ஊட்டச்சத்து குறைபாடுள்ள எவரும் விலை அதிகமான காய்கறி, பழங்களைத் தேடி போக வேண்டியதில்லை. அவற்றில் தனி தனியாக உள்ள அதே ஊட்டச்சத்துக்கள் இந்தச் சூப்பர் உணவான மோரிங்காவில் உள்ளது. தற்போதைய குழந்தைகளுக்கு ஏற்றவாறும் இந்த வேகமான நவீன காலத்திற்கு ஏற்பவும் முருங்கை இலையை அப்படியே தராமல் அவற்றைப் பவுடர் போல அரைத்து தருவது இன்றைய தலைமுறையும் இதன் பலன்களை அடைய உதவுகிறது.

பல வகையான நோய்களின் மருத்துவன் 

தோல் அரிப்புகள், ரத்த சோகை, தலைவலிகள், ரத்த அழுத்தம், வீக்கம்,  விறைப்புத்தன்மை குறைபாடு,வயிற்றுப்போக்கு மற்றும் ஜீரம் என அனைத்து வகையான நோய்களைத் தீர்க்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 

வறட்சியைத் தாங்கும் மற்றும் நீடித்து உழைக்கும் திறனுள்ள அதிசய  தாவரம்

முருங்கை தாவரம் என்பது நமது நாட்டின் வெப்பமான சூழலைத் தாங்கி வளரும் திறன் கொண்டது. எனவே, இதற்கான நீர் தேவை என்பது மிகவும் குறைவு. அதிக செட்டின் (zeatin) அளவுகளைக் கொண்டிருப்பதால் குளோரோபில் சிதைவைத் தடுக்கிறது. இது இலைகளை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கவும் எந்த விதமான சேதங்களும் இல்லாமல் வேறு இடத்திற்கு கொண்டு செல்லவும் பயன்படுகிறது. 

ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் – மோரிங்கா 

மோரிங்காவில் வைட்டமின் A மற்றும் C, பொட்டாசியம், கால்சியம், புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மோரிங்காவில் எட்டு அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. 90 க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம், பிளேவனாய்டுகள், கரோட்டினாய்டுகள், பினாலிக் சேர்மங்கள் என 46 விதமான ஆன்டிஆக்சிடென்ட்கள் உள்ளது

மேலும், ஐசோசயனைட் மற்றும் பினாலிக் பெறுதிகள் போன்று 36 விதமான வீக்க எதிர்ப்பு சேர்மங்களைக் கொண்டுள்ளது. இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மஞ்சளைப் போல குடல் அழற்சி நோயைக் குணப்படுத்த உதவுகிறது.   

முடிவுரை 

சூப்பர் உணவான மோரிங்கா வழி தொழில்முனைவோராக மாறுவது தொடர்பான அனைத்து தகவல்களையும் ffreedom ஆப் இல் தெளிவாக அறிந்துகொண்டோம்

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.