மனிதர்களின் உணவு தேவை அதிகரிப்பால் வெவ்வேறு உணவுகளுக்கான தேடல் விரிவடைந்துள்ளது. ஊட்டச்சத்து மற்றும் ஏற்றுக்கொள்ளும் விலையில் விற்கப்படும் உணவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. காளான் அதில் முக்கியமான இடம் பெறுகிறது. சைவ உணவு உண்பவர்களின் காப்பானாக காளான் உள்ளது. அதாவது, அசைவ உணவில் மட்டுமே கிடைக்கக்கூடிய சில ஊட்டச்சத்துகளைச் சைவ உணவு உண்பவர்கள் பெற காளான் உதவுகிறது.
வழக்கமாக மக்கள் காளானை பொரியல், குழம்பு, வறுவல் செய்து உண்கிறார்கள். இக்கால மக்களுக்கு ஏற்றவாறு ஈரப்பதமான காளான்கள் கொண்டு சிப்ஸ், சூப், ஊறுகாய், மிட்டாய், சாஸ் போன்ற உணவுகளையும், உலர்ந்த காளான்கள் கொண்டு உடனடி சூப் பொடி, பேக்கரி தயாரிப்புகள், அப்பளங்கள் மற்றும் நக்கெட்டுகள் போன்றவற்றை தயார் செய்யலாம்.
இவை வழக்கமான பொருட்களில் இருந்து மாறுபட்டு இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ஊட்டச்சத்தின் மதிப்புகூட்டுதல்
இன்றைய காலகட்டத்தில் சிறியவர் பெரியவர் என அனைவரும் வழக்கமான உணவுகளைத் தவிர்த்து விதவிதமான உணவுகளைச் சுவைக்க விரும்புகின்றனர். மேலும், சைவ உணவு முறை பின்பற்றுபவர்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி விஞ்ஞானிகள், உணவியல் வல்லுநர்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு தாவரம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்ய முயன்று வெற்றி பெற்றுள்ளனர்.
காளான் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், காளானை இன்றைய கால உணவுமுறைக்கு ஏற்ப அதாவது சிப்ஸ், சூப், நக்கெட்டுகள் மாற்றி அதன் சந்தை மதிப்பை உயர்த்தி அதிக லாபம் பெற முடியும். இதுவே மதிப்பு கூட்டுதல் எனப்படுகிறது. அதாவது ஒரு பொருளை அதன் மூலப் பொருளாக
அப்படியே விற்காமல் அதன் வடிவம், வண்ணத்தை மாற்றி விற்பது.
காளானை அப்படியே சமைத்து தரும்போது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் சாப்பிடாமல் ஒதுக்கிவிடுவர். சிப்ஸ், சூப், நக்கெட்டு என்று மாற்றி சமைத்து தரும்போது அவற்றை விரும்பி உண்பார்கள். மேலும், இப்படி செய்வது வழக்கமான காளானுக்கு கிடைக்கும் விலையை அதிக விலையைப் பெற்று தருகிறது.
சைவ உணவு உண்பவர்களின் நண்பன்
பொதுவாக, அசைவ உணவு நமது உணவை ஆற்றலாக மற்ற உதவும் வளர்ச்சிதை மாற்றம், புதிய ரத்த செல் மற்றும் ஆரோக்கியமான செல் உருவாக்கம், மூளை செல்கள் மற்றும் பிற உடல் திசுக்களை உருவாக்கப் பயன்படுகிறது.
மேலும், மூளை செல்கள் நன்றாக செயல்படவும் புதிதாக இருக்கவும் கோலைன் என்னும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இது வைட்டமின் பி நிறைந்த உணவு பொருட்களில் அதிகமாக உள்ளது. பொதுவாக, வைட்டமின் பி சைவ உணவுகளை விட அசைவ உணவுகளில் அதிகம் உள்ளது. சைவ உணவாளர்களின் இந்தக் குறையைப் போக்க வந்த நண்பன் காளான். ரிபோஃப்ளேவின் (வைட்டமின் B2), போலேட் (B9), தியாமின் (B1), பேண்டோதெனிக் அமிலம் (B5) மற்றும் நியாசின் (B3) போன்ற வைட்டமின்கள் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் புரதப் பூ
பெரும்தொற்று காலத்தில் புரதத்திற்கான தேவை அதிகரித்தது. அசைவம் உண்பவர்களுக்கு பல தேர்வுகள் இருந்தபோது சைவ உணவாளர்களின் புரதத் தேவையைக் காளான்களே பூர்த்தி செய்தன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் போதுமான புரதச் சத்தை உட்கொள்ள வேண்டும். மேலும், தசை வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிக்க புரதச் சத்து அவசியம். புரதச் சத்து மிகுந்த சைவ உணவுகளில் காளானுக்கு முக்கிய பங்கு உண்டு.
காளான் புரதம், வைட்டமின் பி உடன் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஜிங்க், தாமிரம் மற்றும் செலினியம் போன்ற தாது சத்துக்களால் நிறைந்துள்ளது. குறிப்பாக, காளான் உண்பதற்கு சிக்கன் போல சுவையாகவும் இருப்பதால் சைவ உணவு உண்பவர்கள் மட்டும் இல்லாமல் அசைவ உணவு உண்பவர்களின் தேர்வாகவும் உள்ளது.
காளான் சார்ந்த உணவுகளின் தேவை அதிகரிப்பால் காளானின் சந்தை தேவையும் அதிகரித்துள்ளது.
முடிவுரை
குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் காளான் மதிப்பு கூட்டல் பற்றி பொருட்களைத் தயாரிப்பது, பேக் செய்வது மற்றும் சந்தைப்படுத்துவது வரை அனைத்தையும் ffreedom App இல் அறிந்துகொண்டோம்.