நவீன மேக்கப் கலையில் உள்ள வாய்ப்புகள்
இன்றைய நவீன பன்னாட்டு உலகில் அனைவரும் தங்களை அழகுபடுத்திக்கொள்ள விரும்புகின்றனர். தலை முதல் கால் வரை சிறப்பாக தோற்றம் அளிக்க வேண்டும் என்று அதிகம் செலவிடுகின்றனர். பெங்களூருவைச் சேர்ந்த நந்தினி ராம்பிரசாத் சிறு வயதில் இருந்தே மேக்கப் எனப்படும் ஒப்பனை கலையில் அதிக ஆர்வம் கொண்டு இருந்தார். ஆனால், முறையான வழிகாட்டுதல் இல்லாமல் சிறிது தடுமாறினார். திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் உதவியுடன் மேக்கப் கலையின் அடிப்படைகளைத் தெரிந்து கொண்டார்.
பின்னர் ஒரு நாள் ஓய்வாக கைபேசியில் ஒப்பனை தொடர்பான வீடியோக்களைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போது Boss Wallah விளம்பரத்தைப் பார்த்தார். ஆப்-ல் ஒப்பனை தொடர்பான கோர்ஸை எடுத்துக்கொண்டு மேக்கப் மீதான தனது ஆர்வத்தை வணிகமாக மாற்றுவதற்கான திறன்களை அறிந்துகொண்டார்.
ஒப்பற்ற வருமானம் தரும் ஒப்பனை கலை
தனது சொந்த மேக்கப் ஸ்டுடியோவை அமைத்திட வேண்டும் என்பதே நந்தினி ராம்பிரசாத் அவர்களது இலக்காக இருந்தது. சரியான நேரத்தில் முறையான வழிகாட்டுதலை Boss Wallah அளித்தது. Boss Wallah-ன் CEO சுதீர் அவர்களது வழிகாட்டுதல் மற்றும் தனது கணவர் அளித்த நம்பிக்கையுடன் நந்தினி அவரது சொந்த மேக்கப் ஸ்டுடியோ மற்றும் கோச்சிங் சென்டரான NR மேக்கப் வேர்ல்ட் கோச்சிங் அகாடமியைத் தொடங்கினார். Boss Wallah-ல் தோல் பராமரிப்பு மற்றும் மேக்கப் நிபுணத்துவம் கோர்ஸ்களில் தேர்ச்சி பெற்றார்.
இன்று தனது மூன்றாவது பேட்ச் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். ஒரு பேட்ச்சில் 5 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவர் பெறும் பயிற்சிக்கு ஏற்ப 20 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார். தற்போது அவரது அகாடமி மாதம் 1 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறது. மேலும், தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வு மேலாண்மை திட்டங்களையும் வழிநடத்துகிறார்.
தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வெளிதோற்றம்
“ஆள் பாதி ஆடை பாதி” என்பது தமிழில் பிரபலமாக இருக்கும் ஒரு பழமொழி. இதன் பொருள் ஒருவர் மீதான வெளிமனிதரின் ஒட்டுமொத்த அபிப்ராயம் அவரது வெளித்தோற்றம் மற்றும் ஆடையைப் பொறுத்தே யூகிக்கப்படும் என்பதே. மேலும், அழகாக தோற்றமளிக்கும் போது நம்மை அறியாமல் நாமே மிகவும் தன்னம்பிக்கையுடன் உணர்வோம் மற்றும் அதற்கேற்ப நமது செயல்பாடுகளை உற்சாகத்துடன் செய்வோம். எனவே, நமது செயல்கள் மீது நாம் எதிர்பார்க்கும் விளைவுகளைப் பெறலாம்.
இன்றைய 21 ஆம் நூற்றாண்டு பன்னாட்டு நிறுவனங்களால் நிறைந்துள்ளது. அதனால் தனிநபர் வருமானம் பெருகியுள்ளது. எனவே, மக்களும் தங்கள் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ள செலவு செய்ய தயங்குவதில்லை. இன்று பெண்களுக்கு சமமாக ஆண்களும் ஒப்பனை செய்துகொண்டு திருத்தமாக தோற்றமளிக்க விரும்புகின்றனர். மேலும், உங்கள் ஆர்வத்தையே வணிகமாக மாற்றும் போது நீங்கள் சலிப்பு என்பதே இருக்காது. எனவே, மேக்கப் தொழிலுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு என்பதை மறுக்க முடியாது.
வாடிக்கையாளர் அதிகரிக்கும் சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் நுட்பங்கள்
நந்தினி தனது வாடிக்கையாளர் தளத்தை அதிகரிக்க ஒரு வெப்சைட் மற்றும் பல்வேறு சமூக வலைத்தளங்கள் வாயிலாக சந்தைப்படுத்தல் உத்திகளையும் செயல்படுத்துகிறார். நந்தினி, “உங்கள் இலக்கை அறிந்தால் உறுதி மற்றும் விடாமுயற்சியுடன் அதை அடைவதற்கு பின்வாங்காமல் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.
மேலும், தனது சிறு வயது கனவை நனவாக்க உதவிய Boss Wallah க்கு நன்றி கூறுவதோடு தன்னைப்போல் உள்ள மற்றவர்களும் இந்த ஆப் வழங்கும் நன்மைகளை அடைய ஊக்குவிக்கிறார்.