விவசாயம் “இந்தியாவின் முதுகெலும்பு” என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறியுள்ளார்கள். இன்றும் 60% இந்திய மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலில் உள்ளனர். விவசாயத்தை முறையாக செய்தால் அதில் நல்ல லாபம் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு விவசாயம் தான் பப்பாளி விவசாயம். உங்களுக்குத் தெரியுமா? பப்பாளியின் பூர்வீகம் அமெரிக்கா என்றாலும் தற்போது உலகின் 43% பப்பாளிக்கான தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது. எனவே, பப்பாளி விவசாயம் அதிக லாபம் தரும் விவசாயம் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
மேலும், பப்பாளி வெப்ப மண்டல பிரதேசங்களில் நன்றாக வளரும் திறன் கொண்டது. நடவு செய்த மூன்று வருடங்களில் பழம் வைக்கும் அளவிற்கு வேகமாக வளரும் ஒரு தாவரம். பப்பாளி தாவரத்தின் நீர் தேவையும் குறைவு. குறிப்பாக அதிக நீர் இருப்பு தாவரத்தை கொன்றுவிடும். எனவே, இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் பப்பாளி விவசாயம் மிகவும் சிறப்பான தேர்வாக இருக்கும்.
பப்பாளி அதிகளவிலான பலன்களைக் கொண்ட ஒரு பழம். இது வைட்டமின் C, வைட்டமின் A, மெக்னீசியம், போலேட், நார்ச்சத்து, பீட்டா-கரோடின், லைகோபீன் போன்ற பல ஊட்டச்சத்துக்களை தன்னுள் வைத்துள்ளது. பப்பாளியில் இருந்து பெறப்படும் பப்பாயின் எனும் நொதி இறைச்சி துறையில் ஒரு மென்மையாக்கி ஆக பயன்படுகிறது.
பார்வையை மேம்படுத்தும் பப்பாளி
பப்பாளியில் உள்ள வைட்டமின் A, உங்கள் பார்வை திறனை மேம்படுத்துகிறது. பப்பாளியில் உள்ள ஜியாசாந்தின் (zeaxanthin) எனும் ஆன்டி ஆக்சிடென்ட் அலைபேசி, தொலைக்காட்சி, கணினி, மடிக்கணினி போன்ற பல்வேறு அன்றாட பயன்பாட்டு டிஜிட்டல் தளங்களில் இருந்து வரும் நீல ஒளியைத் தடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நீல ஒளியே வயது மூப்பால் வரும் மாகுலர் டிஜெனரேஷன் (Macular Degeneration) எனப்படும் விழிப்புள்ளிச் சிதைவிற்கு காரணமாக உள்ளது. எனவே, வயதான காலத்திலும் நல்ல பார்வை திறன் பெற பப்பாளி பெரிதும் உதவுகிறது.
ஆஸ்துமா மற்றும் புற்றுநோயைத் தடுக்கும் பப்பாளி
பப்பாளியில் அதிகமாக உள்ள பீட்டா-கரோட்டின் எனும் வேதிப்பொருள் ஆஸ்துமா நோய் ஏற்படாமல் தடுக்கிறது. உணவில் அதிகமாக பப்பாளியைச் சேர்ப்பது ஆஸ்துமா நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.
அதே போல பப்பாளியில் உள்ள பீட்டா-கரோட்டின் எனும் வேதிப்பொருள் ஒரு ஆன்டி ஆக்சிடென்ட் என்பதால் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது.
எனவே, உணவு முறையில் தேவையான அளவில் பப்பாளியைச் சேர்ப்பது ஆஸ்துமா மற்றும் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களைத் தடுக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியம், சர்க்கரை நோய் மற்றும் ஜீரணத்தில் பங்களிக்கும் பப்பாளி
வைட்டமின் K, நமது உடல் கால்சியம் உறிஞ்சிகொள்ளவும் சிறுநீர் வழியாக அதிக கால்சியம் வெளியேறுவதைத் தடுக்கவும் மிகவும் தேவையானது. பப்பாளியில் உள்ள வைட்டமின் K கால்சியம் உறிஞ்சுதல் செயல்முறைக்கு
பெரிதும் உதவுகிறது. எனவே, எலும்பின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
பப்பாளியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. டைப் 1 சர்க்கரை நோய் உள்ளவர்களின் ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் அதிக நார்ச்சத்து உணவுகள் பெரிதும் உதவுகிறது. டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களின் ரத்த சர்க்கரை, லிப்பிட் மற்றும் இன்சுலின் அளவுகளை மேம்படுத்துவதில் உதவுகிறது.
பப்பாளியில் உள்ள பப்பாயின் என்னும் நொதி செரிமானத்தில் உதவுகிறது. மேலும், பப்பாளியில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் நீர் இருப்பு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கவும் ஆரோக்கியமான ஜீரண மண்டலத்தை உருவாக்கவும் உதவுகிறது.
இதய நோய், வீக்கம், காயங்கள் குணப்படுத்துதல் மற்றும் தலைமுடி ஆரோக்கியம் காக்கும் பப்பாளி
இதய நோயைக் குறைக்க உதவும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் பப்பாளியில் நிறைந்துள்ளது. உடலின் வீக்கத்தைக் குறைப்பதில் கோலைன் அதிகமாக பங்களிக்கிறது. மேலும், உறக்கம், தசை இயக்கம், கற்றல் மற்றும் நினைவுத்திறன், செல் சவ்வு கட்டமைப்பு, நரம்பு தூண்டல்கள் மற்றும் கொழுப்பு உறிஞ்சுதல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் கோலைன் பப்பாளியில் அதிகமுள்ளது.
தோல் பராமரிப்பு மற்றும் படுக்கை புண்கள், காயங்களை ஆற்ற உதவும் கைமோபப்பாயின் மற்றும் பப்பாயின் நொதிகள் பப்பாளியில் நிறைந்துள்ளது. செபம் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் A பப்பாளியில் உள்ளது. இது நமது முடியை ஈர்ப்பதத்தோடு வைக்க உதவி ஆரோக்கியமான தலைமுடியை அளிக்கிறது. மேலும், அனைத்து உடல் திசுக்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சிக்கும் வைட்டமின் A மிகவும் அவசியம்.
பல வகைகளில் நன்மை அளிக்கும் பப்பாளி
பாரம்பரிய மருத்துவத்தில் மலேரியாவைக் குணப்படுத்தவும், இயற்கையான கருக்கலைப்பு மருந்தாகவும் மலமிளக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
முடிவுரை பப்பாளி விவசாயம் செய்து ஏக்கருக்கு 3 லட்சங்கள் லாபம் பெற தேவையான உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி அனைத்தையும் ffreedom ஆப் வழியாக தெளிவாக அறிந்துகொண்டோம்.