பரசுராம், கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர். இவர் தனது சொந்த ஊரில் ஒரு தொழில் தொடங்க விரும்பினார். Boss Wallah-ல் ஆடை வணிகம் தொடர்பான கோர்ஸைப் பார்த்து தனது சொந்த ஆடை வணிகத்தை ஆரம்பித்தார்.
ஆடை வணிகத்தில் சாதனை படைத்த PUC மாணவர்
கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரசுராம். 22 வயதான இவர் ஒரு வெற்றிகரமான ஆடை வணிகத்தை நிறுவியுள்ளார். சிறிது வயது முதல் வேலை செய்து வரும் இவர், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்பினார். மேல்நிலை கல்வி பயின்று உள்ள இவர் டிகிரி முடிக்கவில்லை.
ஒரு நாள் முகநூல் லைவ்-ல் Boss Wallah விளம்பரத்தைப் பார்த்தார். இந்த ஆப்-ல் விவசாயம், தனிநபர் நிதி மற்றும் வணிகம் தொடர்பாக பல கோர்ஸுகள் உள்ளன. இவற்றுள் தனது விருப்பமான ஆடை வணிகம் தொடர்பான கோர்ஸை எடுத்துக்கொண்டார். கோர்ஸில் விளக்கப்பட்ட அனைத்து செயல்முறைகள், உத்திகள் மற்றும் நுட்பங்களை அறிந்துகொண்டார்.
எங்கு முயற்சி உள்ளதோ அங்கு வெற்றி உள்ளது
பரசுராம், எளிய நடுத்தர குடும்பத்தில் இருந்து வருகிறார். அவருக்கு தொழில் தொடங்க விருப்பம் இருந்தபோதிலும் அதற்கான வழிமுறைகள் பற்றி அறியாமல் தடுமாறினார். இங்குதான் Boss Wallah பரசுராமுக்கு உதவியது. ஆடை வணிகம் தொடங்க தேவையான மூல தனம், மூலப் பொருட்கள், இடம், பணியாளர் தேவை, சந்தைப்படுத்தல் போன்ற பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார்.
முக்கியமாக, தனது கனவு வணிகம் தொடங்க முதல் தேவையான மூலதனம் பெற உதவும் அரசு திட்டமான பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் (PMEGP) கோர்சைப் பார்த்தார். பின்னர், அதில் விளக்கப்பட்டுள்ள செயல்முறைகள் வாயிலாக எப்படி கடன் பெறுவது என்பதை அறிந்து தனது வணிகத்திற்கான பணம் சுமார் 3 லட்சத்தைப் பெற்றார். பின்னர், ஆடை வணிகம் மற்றும் உற்பத்தி வணிகம் தொடர்பான கோர்ஸ்களைப் பார்த்து தனது அறிவுத்திறனைப் பெருக்கிக்கொண்டார். பரசுராம் 18 வயதில் ஆடை வணிகத்தை ஆரம்பித்தார். இன்று தனது கடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேவையான அனைத்துவிதமான உடைகளையும் வைத்துள்ளார். இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் நாம் அனைவரும் நமது வாழ்க்கையில் ஏதோ ஒன்று சாதிக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால், ஒரு சிலரே அதில் வெற்றி பெறுகிறார்கள். ஏன்? வெறும் விருப்பம் மட்டும் இருந்தால் போதாது அதை அடைவதற்கான முயற்சியையும் செய்ய வேண்டும்.
ஆடை வணிகத்தில் உள்ள லாபம் மற்றும் நன்மைகள்
பரசுராம், தனது எதிர்கால குடும்பத்திற்காக ஒரு வணிகம் அமைத்து தர விரும்பி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். Boss Wallah-ல் ஆடை வணிகம் தொடர்பாக அனைத்தையும் தெரிந்துகொண்டு வெற்றிகரமாக தனது சொந்த ஆடை வணிகத்தை நடத்தி மாதம் 30,000 வரை லாபம் ஈட்டுகிறார்.
ஆடை வணிகத்தில் பல நன்மைகள் உள்ளது. மனிதன் உள்ளவரை ஆடைகளுக்கான தேவை குறையாது. அதுவும் இல்லாமல் ஒரு ஆடை என்பது பழம், காய்கறி, பால் போன்று கெட்டு விடாது. மேலும், ஆடை வணிகத்தின் லாப வரம்பு குறைந்தபட்சம் 30% முதல் 60% சதவீதம் வரை உள்ளது. உங்கள் கடையில் விற்கப்படும் ஆடையின் தரம் சிறப்பாக இருந்தால் வாடிக்கையாளர்களின் வாய்வழி பேச்சே உங்கள் வணிகத்திற்கான சிறந்த சந்தைப்படுத்தல் உத்தியாக அமைந்துவிடும்.
பரசுராம், அவரது வணிகத்தில் பெற்ற சிறந்த லாபம் காரணமாக தனது சொந்த ஆடை தயாரிப்பு நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளார். மேலும், தனது கனவை நனவாக்க உதவியBoss Wallah-க்கு பரசுராம் நன்றி கூறுவதோடு எவரும் ஒரு தொழிலைத் தொடங்கும் முன் அதை பற்றி தெரிந்துகொள்வது மிகவும் நல்லது என்றும் அறிவுறுத்துகிறார். இதற்கு Boss Wallah பெரிதும் உதவுகிறது என்று பரசுராம் கூறுகிறார்.