மனிதன் அறிந்த தொழில்களில் மிகவும் பழமையானது விலங்கு வளர்ப்பு. மனிதன், நாகரீகம் வளர வளர தன்னை சுற்றியுள்ள விலங்குகளைப் பழக்கப்படுத்தி தன் தேவைகளைப் பூர்த்தி செய்துக்கொள்ள தொடங்கினான். மனிதன் விரைவில் பழக்கிய விலங்குகளில் கோழி, ஆடு மற்றும் மாடு முதல் மூன்று இடங்களை பிடிக்கின்றன. இவற்றுள் குறைவான காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய முதன்மையான விலங்கு வளர்ப்பு கோழி வளர்ப்பே. ஏனென்றால், கோழியின் இறைச்சி, முட்டை மற்றும் கழிவு என அனைத்தும் மிக சிறந்த வணிக மதிப்பைக் கொண்டுள்ளது.
தற்போதைய நவீன உலகில் இயற்கை உணவிற்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களும் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளவும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை நாடுகின்றனர். அத்தகைய உணவுகளில் ஒன்று கோழி. சந்தைகளில் பெரும்பாலும் விற்கப்படும் கோழிகள் நல்ல ஊட்டச்சத்துக்கள் கொடுத்து வளர்க்கப்படுகின்றன. ஆகையால், கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றுக்கு அதிக சந்தை தேவை உள்ளது. எனவே,
கோழி வளர்ப்பின் எதிர்கால வாய்ப்புகள் மிகவும் நன்றாக உள்ளது.
குறைந்த கொழுப்பு, அதிக புரதமுள்ள உணவு
கோழி இறைச்சி குறைந்த கொழுப்பு மற்றும் அதிக புரதம் கொண்ட உணவுகளில் மிகவும் முக்கியமானது. புரதம், மனித தசைகளின் கட்டமைப்பில் பெரிதும் உதவுகிறது. தசைகள் நன்கு வளரவும் உறுதியாக இருக்கவும் பயன்படுகிறது. புரதச்சத்து உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது, ஊட்டச்சத்துக்களைக் கடத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது, உடலின் திரவ சமநிலை, pH மதிப்பு மற்றும் உயிரி வேதியியல் செயல்முறைகளைப் பராமரிக்க உதவுகிறது.
எனவே, வளரிளம் பருவத்தினர், இதய நோயாளிகள், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவு.
எலும்புகளை வலிமையாக்கும் சிறந்த உணவு
கோழி இறைச்சியில் புரதம் மட்டுமல்ல எலும்புகளை வலிமையாக்கும் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. மேலும், முடக்குவாதத்தைத் தடுக்க உதவும் செலினியம் என்னும் ஆன்டிஆக்சிடென்ட்டைக் கொண்டுள்ளது.
மனஅழுத்தத்தை நீக்கும் உணவு
கோழி இறைச்சியில் உள்ள டிரிப்டோபன் மற்றும் வைட்டமின் B5
மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. குறிப்பாக டிரிப்டோபன் ஆழ்ந்த உறக்கம் மற்றும் வலி தாங்கும் திறனை அளிக்கிறது. உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. கோழி இறைச்சியில் உள்ள வைட்டமின் B5 கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உடைத்தலில் மட்டும் இல்லாமல் சிவப்பு ரத்த செல்கள் மற்றும் இனப்பெருக்க மற்றும் மனஅழுத்தக் குறைப்பு ஹார்மோன்களின் உற்பத்தி போன்றவற்றுக்கு பயன்படுகிறது.
மாதவிடாய் தொடர்பான மனஅழுத்தத்தைக் குறைக்கும் உணவு
கோழி இறைச்சியில் உள்ள மெக்னீசியம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் உருவாகும் அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது. இது அவர்களது மனநிலையைச் சமநிலையில் வைத்து அமைதியாக இருக்க உதவுகிறது.
டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் உணவு
கோழி இறைச்சியில் உள்ள ஜிங்க் எனும் தாது உப்பு ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து விந்தணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தும் திறன் கொண்டது.
நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் உணவு
பொதுவாக, சளி, இருமல் போன்ற பொதுவான சுவாசத் தொற்றுகளைக் குணப்படுத்த சிக்கன் சூப் அருந்துவது பல காலமாக உள்ள வழக்கங்களில் ஒன்று. சிக்கன் சூப் நமது சுவாசக் குழாய்களில் படிந்து தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும், சிக்கனில் உள்ள புரதம் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது, நோய் எதிர்ப்பு காரணியான நியூட்ரோபில்கள் இடம்பெயர்வைச் சிக்கன் சூப் தடுக்கிறது.
இதயத்தைப் பாதுகாக்கும் உணவு
சிக்கனில் உள்ள வைட்டமின் B6 ஹார்ட் அட்டாக் உருவாக்கும் காரணியான ஹோமோசிஸ்டீன் எனும் அமினோ அமிலம் மற்றும் அது தொடர்பான பிற கூறுகளைக் குறைக்க உதவுகிறது. மேலும், சிக்கனில் உள்ள நியாசின் இதய நோய் காரணியான கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
அதிகம் விரும்பப்படும் உலகளாவிய உணவு
உங்களுக்குத் தெரியுமா? உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படும் இறைச்சி உணவுகளில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கிறது. அதாவது, வெவ்வேறு வடிவங்கள் மற்றும் விதங்களில் சிக்கன் உணவு விற்கப்படுகிறது. சிக்கனை நம் விருப்பம் போல குழம்பு, பக்கோடா, நக்கெட்கள், வறுவல், பொரியல் என சமைத்து உண்ணலாம்.
மேலும், சிக்கன் ஸ்பிரட், சிக்கன் பேட்டி, நக்கெட், பிரஸ்ட் பில்ட்கள், சிக்கன் ஊறுகாய், லோப் (Loaf) மற்றும் ரோல்கள் என்று மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக விற்கலாம்.
இயற்கை உரமாக பயன்படும் கழிவு
கோழியின் கழிவில் நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பயிர் நன்றாக வளர தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இயற்கை விவசாயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
முடிவுரை கோழி வளர்ப்பு வழியாக 40 நாட்களுக்கு ஒரு முறை 90,000 ஆயிரங்கள் சம்பாதிக்க தேவையான உத்திகள் மற்றும் நுட்பங்கள் பற்றி அனைத்தையும் தெளிவாக ffreedom ஆப் வழியாக அறிந்துகொண்டோம்.