நீங்கள் ஒரு சிறு விவசாயி என்று கருதுக. ஒரு முறை வயலில் நெல் பயிரிட்டு இருக்கிறீர்கள். எதிர்பாராமல் கன மழை பெய்து விடுகிறது. ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி ஈடு செய்வீர்கள்? கடன் பெற்று வேறு பயிர் வைப்பீர்கள். அப்போது முந்தைய பயிர்களுக்கான நஷ்டத்தை எப்படி ஈடு செய்வது? ஒரு வேளை இரண்டாவதாக பயிரிட்ட பயிரிலும் எதிர்பார்த்த லாபம் வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? குடும்பத்தையும் தன்னையும் காப்பாற்ற பெரும்பாலானவர்கள் விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழில் அல்லது வேலைக்கு சென்று விடுவார்கள். 2004-2005 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40% சதவீதமாக இருந்த விவசாயம் விவசாயம் சார்ந்த 20 முதல் 59 வயதுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 2018-19 ஆண்டில் 23.3% சதவீதமாக குறைந்துள்ளது. கிராமப்புற இந்தியாவிலும் 2004-2005 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 53.7% சதவீதமாக இருந்த எண்ணிக்கை 2018-19 ஆண்டில் 33.2% குறைந்துவிட்டது.
இது போன்ற நிகழ்வுகளை குறைக்க உருவாக்கப்பட்ட திட்டம் பிரதான் மந்திரி பசல் பீம யோஜனா. இந்தத் திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதி உதவி வழங்குதல். விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்தி விவசாயத்தில் அவர்களின் தொடர்ச்சியை உறுதி செய்தல். விவசாயத்தில் புதுமையான மற்றும் நவீன முறைகளை கடைபிடிக்க ஊக்குவிப்பது. விவசாயத் துறைக்கு கடன் வருவதை உறுதி செய்தல்.
விவசாயிகளின் அதிக பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம்
இயற்கை இடர்கள், பூச்சிகள், நோய்கள் போன்றவற்றால் பயிர்கள் விளையாமல் போவது அல்லது விளைச்சல் இல்லாமல் போகும் நிலையில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கவும், காப்பீட்டு வசதியை ஏற்படுத்தி தரவும் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
காரீப் பயிர்களுக்கு 2%, ரபி பயிர்களுக்கு 1.5% மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 5% பிரீமியம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். பயிர்களுக்கு ஏதேனும் எதிர்பாராத பாதிப்பு ஏற்பட்டால் நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் 90% மீதம் இருந்தாலும் நீங்கள் காப்பீடு செய்த தொகை முழுவதும் வழங்கப்படும். பிரீமியம் விகிதங்களின் வரம்பு இல்லை. பயிரிடுவதில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும். மேலும், இந்தத் திட்டம் காப்பீட்டு பிரீமியத்தில் 75-80 சதவீத மானியத்தை வழங்குகிறது.
விவசாயத்தை ஊக்குவிக்கும் விவசாயின் நண்பன்
இந்த பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா காப்பீடு திட்டம் இயற்கையாக உருவாகும் தீ, மின்னல், புயல்காற்று, ஆலங்கட்டி மழை, சூறைக்காற்று போன்றவற்றால் ஏற்படக்கூடிய தவிர்க்க இயலாத விளைச்சல் இழப்புகளுக்கு காப்பீடு தரப்படுகிறது. வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி, மழையின்மை, பூச்சி/நோய் தாக்குதல், பயிர் மூழ்கிப் போதல் போன்றவற்றால் ஏற்படும் எதிர்பாராத பயிர் இழப்புகளை ஈடுசெய்து சம்மந்தப்பட்ட விவசாயி மற்றும் அவரது குடும்பத்திற்கு ஏற்படும் நிதி இழப்பைத் தடுக்கிறது.
மேலும், சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள பயிர்களின் அளவுகள் மற்றும் அதற்கான பணம் குறித்த நேரத்தில் விவசாயியைச் சேரும் வகையில் அனைத்தும் ஸ்மார்ட் போன் வழியாகச் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டச் செயலாக்கத்தில் உருவாகும் சேவை கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இவை அனைத்தும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறாமல் இருக்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நிதியைக் காப்பாற்றும் அலிபாபா
விவசாயிகள் காரீஃப் பருவத்தில் விளைவிக்கும் நெல், சோளம், பஜ்ரா மற்றும் பருத்தி பயிர்கள், ரபி பருவத்தில் விளைவிக்கும் கோதுமை, பார்லி, கிராம், கடுகு மற்றும் சூரியகாந்தி பயிர்கள். அதாவது, அனைத்து வகையான தானியங்கள், திணைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் காப்பீடு செய்யப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற விவசாயிகள் அதிகாரப்பூர்வ பிரதான் மந்திரி பசல் பீம யோஜனா (PMFBY) வலைதளத்தில் குறிப்பிட்ட தேதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் தொகை ஹெக்டேருக்கு ரூ.15,100 ஆக இருந்த தொகை தற்போது இந்த பிரதான் மந்திரி பசல் பீம யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.40,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பலன் அடைய குறிப்பிட்ட பருவத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் பதிய வேண்டும். எ.கா ரபி பருவப் பயிர்கள் மற்றும் காரீஃப் பருவப் பயிர்கள்.
முடிவுரை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்து அதன் வழியாக நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசு செயல்படுத்தும் திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி பசல் பீம யோஜனா திட்டத்தின் கீழ் உங்கள் பயிர்களை காப்பீடு செய்வது தொடர்பான அனைத்து தகவல்களையும் ffreedom ஆப் வழியாக அறிந்துகொண்டோம்.