Home » Latest Stories » விவசாயம் » உங்கள் இலக்குகளை அடைய உதவும் இறால் வளர்ப்பு

உங்கள் இலக்குகளை அடைய உதவும் இறால் வளர்ப்பு

by Gunasekar K
185 views

மனிதனின் ஊட்டச்சத்து தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக பல்வேறு விதமான உணவுகளை உருவாக்க தொடங்கினான். மனித உடலின் கட்டமைப்புக்கு மிகவும் அவசியமான ஒன்று புரதம். தனது புரதத் தேவையைப் பூர்த்தி செய்ய கோழிகள், ஆடுகள் போன்ற விலங்குகளைப் பயன்படுத்தினான். இவற்றை விட மனித உடலுக்கு தேவையான உயர்தரப் புரதம் நிறைந்த உணவு ஒன்று உள்ளது. ஆம். அதுதான் இறால். இறால் என்பது ஒரு கடல் வாழ் உயிரினம். மனிதத் தேவைக்காக நாம் நெல் விளைவிக்கும் வயலில் இறால் வளர்க்கப்படுவதே இறால் வளர்ப்பு எனப்படும்.   

இறால் பண்ணை என்பது ஒரு மிக சிறந்த லாபம் தரும் வணிகம். இது மனித நுகர்வுக்காக இறால்களை வளர்ப்பது அல்லது இறால்களை உற்பத்தி செய்வது. ஒரு ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்ட குளத்தில் இருந்து சுமார் 4,000 கிலோ இறால்களை உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ இறாலின் விலை 250-350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. செலவுகளைத் தவிர்த்தால் ஏக்கருக்கு 4 முதல் 5 லட்சங்கள் வரை நிகர லாபம் பெறலாம்.  இது வழக்கமான பயிர் முறையில் விதைக்கப்படும் மற்ற பயிர்களைக் காட்டிலும் அதிக லாபம் தரும் தொழிலாக இருக்கிறது.

சோர்வு, மனஅழுத்தத்தைக் குறைக்கும் சயனோகோபாலமின் 

இறால்கள் வைட்டமின் B12 எனப்படும் சயனோகோபாலமின் மற்றும் போலேட் நிறைந்த உணவு. இந்த வைட்டமின்கள் ஆற்றல் உற்பத்தி மற்றும்  சிவப்பு ரத்த செல்களின் புதுப்பித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

மேலும், உடலின் DNA வை உருவாக்குதல், மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு ஊட்டம் அளித்தல் போன்றவற்றில் வைட்டமின் B12 முக்கிய பங்கு வகிக்கிறது. 

அரிதான தாது உப்புகளின் சிறந்த ஊட்டச்சத்து ஆதாரம் 

மனித உடலின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்க உதவும் அயோடின், ஜிங்க் மற்றும் செலினியம் போன்ற தாது உப்புகள் நிறைந்துள்ள உணவுகளில் இறால் முக்கிய இடம் பெறுகிறது. 

அயோடின், தைராய்டு சுரப்பியின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமானது.  

தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிரான உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஜிங்க் மற்றும் செலினியம் பெரிதும் உதவுகிறது. கொரோனா காலத்தில் மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைத்த ஜிங்க் மிகுந்த உணவுகளில் இறால் தனி இடம் பெற்றது.  

புற்றுநோய் மற்றும் இதய நோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடென்ட்களின் குவியல் 

வீக்க எதிர்ப்பு திறன் மற்றும் ஆபத்தான நாள்பட்ட நோய்களான இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கும் திறனுள்ள அஸ்டாக்சாந்தின் எனும் சேர்மம் இறாலில் அதிகம் உள்ளது. மேலும், உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் இறால் உதவுகிறது. 

சிக்கன் அல்லது பீப் உணவுகளில் உள்ளதை விட 22 மடங்கு அதிகமான வைட்டமின் E இறாலில் உள்ளது. கொழுப்பில் கரையும் இந்த வைட்டமின் ஒரு ஆன்டிஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு உங்களை இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கிறது. 

உடல் எடையைக் குறைப்பதற்கான இயற்கை வழி 

இறால் என்பது எளிதான செரிமானம் மற்றும் உயர்தரப் புரதத்தின் மிக சிறந்த ஆதாரமாக உள்ளது. மேலும், குறைவான கலோரிகள் மற்றும் கொழுப்பு இருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்களுக்கான மிக சிறந்த தேர்வாக இறால் உள்ளது. 

சிறந்த ஆரோக்கியம் அளிக்கும் சமச்சீர் உணவு  

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க தேவையான சமச்சீர் உணவில் இறால் பெரிதும் உதவுகிறது. அதாவது, ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட சமச்சீர் உணவில் ஒரு பங்கு உணவை இறால் பூர்த்தி செய்கிறது.

இளமையாக தோற்றமளிக்க உதவும் இறால் 

இறாலில் உள்ள வைட்டமின் E உங்கள் தோல் செல்களைப் புதுப்பித்து எப்போதும் இளமையாக காட்சியளிக்க உதவுகிறது. 

அல்சைமர் நோயைத் தேடும் அசாத்தியமான இறால் 

இறாலில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்தைப் பெரிதும் தடுக்கிறது. தொடர்ந்து இறால் உண்பது அல்சைமர் நோய் தடுக்க உதவுகிறது. 

எலும்புகளை உறுதியாக்க உதவும் நண்பன்

இறாலில் காணப்படும் அதிக கால்சியம் செறிவு உடலின் எலும்புகளை வலிமையாக்கப் பயன்படுகிறது. குறிப்பாக, உறுதி பற்கள் மற்றும் எலும்பு வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு தேவைப்படும் வளரிளம் பருவத்தினர் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் முதுமைக்கான அறிகுறிகள் போன்றவற்றை குறைக்க இறால் பயன்படுகிறது. 

முடிவுரை இறால் வளர்ப்பு வழியாக ஆண்டுக்கு 12 லட்சங்கள் வரை அதிக லாபம் பெற தேவையான உத்திகள் மற்றும் நுட்பங்கள் பற்றி தெளிவாக ffreedom ஆப் வழியாக அறிந்துகொண்டோம்.

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.