Home » Latest Stories » விவசாயம் » மலர்களின் முடிசூடா அரசன் மற்றும் அரசி

மலர்களின் முடிசூடா அரசன் மற்றும் அரசி

by Gunasekar K
283 views

உங்களிடம் காதலின் சின்னம் பற்றி கேட்டால் என்ன பதில் தருவீர்கள்? தாஜ்மஹால். உண்மையில் தாஜ்மஹால் காதலின் சின்னம் தான். ஆனால், நான் கூறுவது ஒரு மலர். உடனே அனைவரும் ரோஜா என்று கூறிவிடுவீர்கள் அல்லவா. உலகில் அத்தனை மலர்கள் இருக்க ரோஜா மட்டும் ஏன் காதலின் சின்னமாக கருதப்படுகிறது? கிரேக்கத்தின் அழகு, காதல், காமத்தின்   கடவுளான “அப்ரோடைட் (Aphrodite)” உடன் ரோஜா பூவிற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆகையால், ரோஜா காதலின் சின்னமாக உள்ளது.

மேலும், இயற்கையாகவே மனிதர்களுக்கு பளிச்சென்று இருக்கும் நிறங்கள்  மீது ஈர்ப்பு உள்ளது. ஒரு கூடை நிறைய இருக்கும் மல்லியை விட ஒற்றையாக இருக்கும் ரோஜாவிற்கு மக்களை ஈர்க்கும் தன்மை அதிகம். தற்போதைய காலத்தில் ரோஜா ஒரு அலங்காரப் பொருளாக மட்டுமில்லாமல் வாசனை திரவியங்கள், ஜாம்கள், சூப்கள், தேநீர், எண்ணெய், ஜெல்லி, ரோஸ் வாட்டர், பர்பி, அல்வா, குலாப் ஜாமுன், நக்கெட் போன்ற பல வகையான பொருட்களைத் தயாரிக்க பயன்படுகிறது. 

எனவே, ரோஜா வளர்ப்பு என்பது அதிக லாபம் தரும் ஒரு தாவர வளர்ப்பு. பொருட்கள் தயாரிக்க மட்டும் இல்லாமல் ரோஜாக்களைத் தாவரமாகவே விற்கப்படுவதும் உண்டு. இவை ஒருவர் புதிய ரோஜா தோட்டம் அமைக்க உதவுகிறது.  

விழாக்கள், நிகழ்ச்சிகளின் வரவேற்பாளன்

நீங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறீர்கள் உங்களை எப்படி வரவேற்கிறார்கள். நீர் போல ஒன்றை உங்கள் மேல் தெளித்து வரவேற்பார்கள். அது என்ன? ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீர். இது நல்ல மணம் கொண்டது மற்றும் தெளிக்கப்பட்டவுடன் அதன் மணத்தால் நமது மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றிவிடும் தன்மை கொண்டது. ரோஸ் வாட்டர் ஒரு அலங்காரப் பொருளாக மட்டும் இல்லாமல் பல வகையான பயன்பாட்டு நன்மைகளைக் கொண்டுள்ளது.

அதாவது, ரோஸ் வாட்டர் சரியாக செரிமானம் ஆகாத சிறியவர்கள், பெரியவர்களுக்கு செரிப்பதற்கான நீராக கொடுக்கப்படுகிறது. தொண்டைக்கட்டு, தோல் எரிச்சல், தோல் சிவத்தல், தொற்றுக்களைத்  தடுப்பது மற்றும் குணப்படுத்துவது, வெட்டுக்கள், தழும்புகள் மற்றும் தீக்காயங்கள், தலைவலி மற்றும் இளமையாக தோற்றமளிக்க  பயன்படுத்தப்படுகிறது.  

அழகுடன் இணைந்த அறிவு 

ரோஜா என்பது மிகவும் அழகானது மட்டும் தான் என்று நீங்கள் நினைத்தால்? அதை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒரு ரோஜாவின் பழமான ரோஸ் ஹிப் இல் வைட்டமின் சி உள்ளது. எனவே, இது உங்கள் உடலின் நீர்ச்சத்து அளவைப் பராமரித்து தொற்றுகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. 

ரோஜா இதழ்கள் மற்றும் தேன் கொண்டு செய்யப்படும் குல்கந்து, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு போன்ற  நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. தினசரி குல்கந்து சாப்பிடுவதால் உடலின் வெப்பத்தை தணிக்க உதவும்.

மேலும், நமது பாரம்பரிய நாட்டு மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவத்தில் ரோஜா பலவித வடிவங்களில் அதாவது பொடி, இலை, திரவம், லேகியம்  பயன்படுத்தப்படுகிறது.

உங்கள் எண்ணத்தை மாற்றும் மணம்

ரோஜா பூக்கள் அதிகப்படியாக வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகிறது. இந்தத் திரவியங்கள் உங்கள் சோகமான மனதை உற்சாகமாக மற்றும் திறன் கொண்டது. பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களை எதிர்க்கும் திறன் ரோஜா எண்ணெய்க்கு உள்ளது. 

மேலும், உங்கள் மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைத்து அமைதியான எண்ணத்தைப் பெற உதவுகிறது. அதாவது, உங்கள் உடலின் இதய துடிப்பு அளவு, மன அழுத்த ஹார்மோன் ஆன கார்டிசால் அளவு போன்றவற்றைக்  குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது. உடல் வலிகள் மற்றும் மாதவிடாய் அசௌகரியம் போன்றவற்றைக் குறைக்கும் தன்மை கொண்டது. 

மதிப்புமிக்க மலரின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்    

ரோஜா என்பது மேலோட்டமாக பார்த்தால் ஒரு அலங்காரப் பொருள் போல தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், ரோஜாவில் இருந்து பெறப்படும் வணிக ரீதியான பொருட்களை கணக்கிட முடியாது. அந்த அளவிற்கு ரோஜாவைப் பயன்படுத்தி பல விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.  

ரோஜா இதழ்கள் கொண்டு ஜாம்கள், ஜெல்லிகள், சாக்லேட்கள், மர்மலேட்கள், துர்கிஷ் டிலைட் (ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு வகை), கனாஃப் & பக்லாவா (பேக்கரி பொருள்கள்),  ரூ அப்சா (பானம்), மூலிகை டீ,  ஐஸ்கிரீம்கள் மற்றும் குல்பிகள் போன்ற பல உணவு பொருட்களை தயாரிக்க பயன்படுகின்றன. 

மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் மிக சிறந்த வணிக வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.

முடிவுரைரோஜா வளர்ப்பில் ஆண்டுக்கு 10 முதல் 12 லட்சங்கள் சம்பாதிக்க தேவையான உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி அனைத்தையும் ffreedom ஆப் வழியாக தெளிவாக அறிந்துகொண்டோம்.

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.