Home » Latest Stories » வணிகம் » எண்ணம் போல் வாழ்க்கை – வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வணிகம்

எண்ணம் போல் வாழ்க்கை – வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வணிகம்

by Gunasekar K

பாபு என்பவர் போதுமான அளவு சம்பாதிக்கும் அரசு ஊழியர். ஒரு நாள் அவர் ஓய்வு பெற்று விட்டார், தற்போதைய அரசு கொள்கைப்படி அவர் ஓய்வூதியமும் பெற இயலாது. ஏற்கனவே சிறிது சேமித்து வைத்து இருந்ததால் அவர் வாழ்க்கையை எளிதாக நடத்தி வந்தார். எனினும், ஒரு சில மாதங்களில் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இதற்கு நேர்மாறாக யோசிப்போம். பாபு தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஒரு ஆடை வணிகத்தைத் தொடங்கினார். முதல் பத்து வருடங்களில் கஷ்டப்பட்டாலும் பதினோராவது வருடம் முதல் லாபம் பெற தொடங்கினார். தொழில் தொடங்கி முப்பது வருடங்களில் பல மடங்கு லாபம் பெற்றுவிட்டார். கிடைத்த லாபத்தை வேறு வேறு தொழில்களில் முதலீடு செய்ய தொடங்கினார். தற்போது ஹோட்டல், சினிமா தியேட்டர், திருமண மண்டபம் என பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சில மாதங்களில் அவரது வருமானம் 10 லட்சங்கள் மேல் சென்றுள்ளது. 

பாபு தனக்கு பிடித்தமான முறையில் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அதாவது, இரண்டு மூன்று பங்களாக்கள், 10 விதமான கார்கள் மற்றும் தேவைக்கும் அதிகமான வங்கி இருப்பு, நிலங்கள் போன்றவற்றை வைத்துள்ளார். இது எப்படி சாத்தியம்? முதல் நிகழ்வில் ஒரு வழியில் பெற்ற வருமானத்தை வைத்து சிறிது சேமித்து வைத்தார், இரண்டாவது நிகழ்வில் பல வழிகளில் பணம் வரும் வாய்ப்புகளை உருவாக்கி கொண்டார். எனவே, ஒரு வெற்றிகரமான வணிகம் உங்களுக்கான பல வாய்ப்புகள் மற்றும் வசதிகளை உருவாக்கி தரும் என்பதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது.

சிறப்பான வணிகம் அமைக்க தேவையான மிக சிறந்த குறிப்புகள்

ஒரு தொழில் தொடங்குவது என்பது எளிது. ஆனால், அதை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்த சில தகுதிகளை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு:

எண்ணம்: உங்கள் வணிகத்தைத் தொடங்க அதற்கான தெளிவான எண்ணத்தை உருவாக்கி அதை செயல்படுத்த வேண்டும். அதாவது, மூலப் பொருட்களின் கொள்முதல், தொழிலாளர் தேவை, உற்பத்தி செயல்முறை, பேக்கிங், விளம்பரம் செய்தல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றை பற்றி தெளிவான புரிதல் வேண்டும். 

சந்தை தொடர்பான ஆராய்ச்சி: நீங்கள் தொடங்க விரும்பும் தொழிலைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். 

ஏற்கனவே சந்தையில் உள்ளவர்கள் அதாவது போட்டியாளர்கள் அவர்களது உத்திகள், பொருட்கள் பற்றி அறிதல் வேண்டும்.

நிதி: உங்கள் வணிகத்தைத் தொடங்க தேவையான நிதியைத் திரட்ட வேண்டும். அதாவது, தனிப்பட்ட சேமிப்புகள், வங்கி கடன்கள் அல்லது பிற முதலீடுகள் வழியாக உங்கள் வணிகத்தைத் தொடங்க தேவையான நிதியைப் பெற வேண்டும்.

வணிகத் திட்டம்: வணிகம் தொடங்க முதலில் ஒரு விரிவான வணிகத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். இது உங்கள் இலக்குகளை அடைவதற்கும் தொடர்ந்து வணிகத்தைச் சிறப்பாக மேற்கொள்வதற்கும் பெரிதும் உதவும்.

சட்டப்பூர்வ தேவைகள்: ஒரு வணிகக் கட்டமைப்பைத் அமைத்து செயல்பட தேவையான சட்டப்பூர்வ உரிமங்கள் மற்றும்  அனுமதிகளைப் பெறுவது மிகவும் அவசியம்.

சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை: உங்களது இலக்கு வாடிக்கையாளர்களைச் சென்றடையவும், உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை வாங்குவதற்கு அவர்களை ஈர்க்கவும் ஊக்கப்படுத்தவும்  மிக சிறந்த சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உத்திகள் மற்றும் நுட்பங்களை  உருவாக்க வேண்டும். 

மேலாண்மை மற்றும் டீம்: உங்கள் வணிகம் பெரிதாக வளரும்போது, அதைச் சிறப்பாக நிர்வகிக்க தனி தனி டீமை நீங்கள் உருவாக்க வேண்டும். உதாரணமாக, பணியாளர் சம்பளம், நலன், பணியமர்த்துதல், ஊதிய உயர்வு போன்றவற்றை நிர்வகிக்க ஒரு மனித வள டீமை உருவாக்க வேண்டும்.

செயல்பாடுகள்: உங்கள் வணிகம் தினமும் அதன் இலக்குகளை எந்தவிதமான தடங்கலும் இன்றி அடைய உதவும் கட்டமைப்புகளையும் செயல்முறைகளையும் நிறுவ வேண்டும்.

உங்கள் எதிர்காலத்தை நீங்களே செதுக்குங்கள் – நன்மைகளை அள்ளித்தரும் வணிகம் 

ஒரு வணிகம் தொடங்குவதால் நீங்கள் பல நன்மைகளைப் பெறலாம். நீங்களே உங்களுக்கு முதலாளியாக இருப்பது மற்றும் அடையவேண்டிய இலக்குகளைத்  தீர்மானித்தல். உங்கள் ஆர்வத்தையே வணிகமாக மாற்றுவதால் எந்தச் சூழலிலும் சலிப்பு ஏற்படாது. உங்கள் வரவு செலவுகளை நீங்களே கட்டுப்படுத்தலாம்.  நீங்கள் சார்ந்த சமூகம் அல்லது தொழில்துறையில் நேர்மறையான தாக்கம் அல்லது சேவைகளில் புதுமையைச் செயல்படுத்தி அப்பொருளின் திறன் அல்லது சேவையை மேம்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகள். உங்களைச் சுற்றியுள்ள திறமையான ஆட்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை வழங்குவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளது. வேலை செய்யும் நேரத்தை நீங்களே நிர்வகிப்பதால் வேலை மற்றும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலையைப் பராமரிப்பதற்கான வாய்ப்புகள். இறுதியாக, ஒரு வணிகத்தைத் தொடங்கி நடத்துவது என்பது பல அபாயங்கள் மற்றும் சவால்களைக் கொண்டது. இந்தப்  பாதையைச் தேர்வு செய்யும் முன் உங்கள் இலக்குகள், திறன்கள் மற்றும் வளங்களை நன்றாக ஆராய்வது மிகவும் அவசியம்.

பன்மடங்கு லாபம் மற்றும் வாய்ப்புகள் கொண்ட பல வகையான வணிக  வாய்ப்புகள்  

ஆடை வணிகம்: ஆடை வணிகம் என்பது எப்போதும் அதிக தேவையுள்ள ஒரு வணிகம். ஒரு மனிதனின் மூன்று முக்கிய தேவைகளில் ஆடைக்கு முக்கிய  இடம் உள்ளது. இணைய வழி அல்லது நேரடி கடை வழியாக உங்கள் விற்பனையை மேற்கொள்ளலாம். பிரத்யேக ஆடை வணிகம் (ஆண்கள் ஆடைகள் (வேட்டி, சட்டை, பேண்ட், ஜீன்ஸ்), பெண்கள் ஆடைகள் (சேலை, சுடிதார், லெஹங்கா, காக்ரா சோலி, நைட்டி,), ஆண் குழந்தை ஆடைகள் (பேண்ட், சட்டை, பண்ட்டி, கோட்), பெண் குழந்தை ஆடைகள் (பட்டு பாவாடை, ஸ்கிர்ட், கவுன்)) அல்லது சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் ஏற்ற ஆடை வணிகம் என உங்கள் நிதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்கலாம். 

பல்பொருள் அங்காடிகள்: அனைவரும் பயன்படுத்தும் பற்பசை முதல் வாசனை திரவியம் வரை, டீ தூள் முதல் பூஸ்ட் வரை, அரிசி முதல் கோதுமை, முட்டை முதல் இறைச்சி வரை, பால் முதல் வெண்ணெய் வரை, மிட்டாய் முதல் சாக்லேட் வரை, ரொட்டி முதல் பிஸ்கட் வரை, கடலை உருண்டை முதல் பால்கோவா வரை என அனைத்து வகையான அன்றாட பயன்பாட்டு பொருட்களை விற்கும் வணிகமே பல் பொருள் அங்காடி எனப்படும். மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் விரைவாக நுகரப்படுவதால் இவை அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்கள் (Fast Moving Consumer Goods (FMCG)) எனப்படுகிறது. உங்கள் நிதியை பொறுத்து மேற்கண்ட பொருட்களுடன் மேலும் பல பொருட்களைச் சேர்க்கலாம் அல்லது குறைக்கலாம். 

வன்பொருள் வணிகங்கள்: இந்த வணிகங்கள் வீடு, சாலை, அணை மற்றும் பெரிய வணிக வளாகங்கள், பிற கட்டுமானங்கள் தயாரிக்க தேவையான இரும்பு கம்பிகள், பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பைப்புகள், செங்கல், மணல், ஜல்லிக்கற்கள், சிமெண்ட், நட்டுகள், போல்ட்டுகள் போன்றவற்றை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கும் வணிகம். 

மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் நீண்ட காலப் பயன்பாட்டு பொருட்கள் என்பதால் கெட்டு போய்விடும் என்று கவலை கொள்ள தேவையில்லை. மேலும், இந்தப் பொருட்கள் அனைத்தும் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுவதால் உங்களுக்கு அதிக லாபம் பெறும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, உங்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் ஒரு சதவீதத்தை வாடிக்கையாளருக்கு அளிப்பது வணிகம் மற்றும்  விற்பனையை பிரபலப்படுத்தி அதிகரிக்க உதவும். 

பேக்கரி வணிகங்கள்: பேக்கரி என்பது மைதாவால் செய்யப்பட்ட பல்வேறு வகை தயாரிப்புகளை விற்பனை செய்வது. இந்த வணிகத்தில் மக்களுக்கு விருப்பமான நொறுக்கு தீனிகள் கேக் (பழ, சாக்லேட், பட்டர், பிளைன், பிளம் போன்ற கேக் வகைகள்), பப்ஸ் (கோக்கனட், வெஜிடபிள், சிக்கன், பன்னீர், காளான் போன்ற பப்ஸ் வகைகள்), பன் (கிரீம் பன், கார பன், வெஜிடபிள், ஜாம்), தில் பசந்த், கோக்கனட் பால், பிஸ்கட் வகைகள் (சால்ட், தேங்காய், சாக்லேட், பழ, வெண்ணை போன்ற பிஸ்கட்) சுட சுட தயாரித்து தரப்படுகிறது.  

ஒருங்கிணைந்த பண்ணை வணிகம்: வளர்ந்து வரும் இயற்கை வழி பொருட்களுக்கான தேவை காரணமாக ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது அதிக லாபம் தரும் ஒரு வணிகமாக உள்ளது. ஒருங்கிணைந்த பண்ணை என்பது ஒரே வகையான பயிர்களை நடாமல் பல விதமான பயிர்களை நடவு செய்து பராமரிப்பது. இம்முறையில் தானியங்கள் (நெல், உளுந்து, காராமணி, அவரை), பழங்கள் (மாம்பழம், வாழை மற்றும் பலா), காய்கறிகள் (கத்திரிக்காய், உருளை கிழங்கு, கருணை கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி, கேரட், முருங்கைக்காய்), கீரைகள் (சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணி கீரை) என்று பல விதமான பயிர்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. 

மேலும், பயிர்களுடன் பால், இறைச்சி, முட்டை தேவைக்காக கோழி, ஆடு மற்றும் மாடு போன்ற விலங்குகள் மற்றும் நீர் வாழ் உயிரினமான மீன் போன்றவற்றை வளர்த்தல். இம்முறையில் இரண்டு வகையான நன்மைகள் உள்ளது. ஒன்று விலங்கு தயாரிப்புகளை விற்று பணம் பெறுதல் மற்றொன்று வளர்ப்பு விலங்குகளின் கழிவுகளில் இருந்து இயற்கை விவசாயம் செய்வதற்கான உரங்களை நீங்களே தயாரிப்பது. இந்த எருவை உங்கள் தோட்டத்திற்கு பயன்படுத்தலாம் அல்லது தேவைப்படுவோருக்கு விற்கலாம். 

வெவ்வேறு வணிகங்கள், வெவ்வேறு முதலீடுகள் 

நீங்கள் அமைக்க விரும்பும் வணிகம் பொறுத்து அதன் முதலீடு மாறுபடும். எந்த ஒரு வணிகத்தை எடுத்துக்கொண்டாலும் மூலப் பொருட்கள் கொள்முதல், உற்பத்தி மற்றும் இயக்க செலவுகள், பணியாளர் ஊதியம், மின் கட்டணம், உட்கட்டமைப்பு செலவுகள், இதர செலவுகள் என்று பல விதமான செலவுகள் உள்ளது. அதற்கேற்ப உங்கள் தொடக்க முதலீடுகள் வேறுபடும்.

ஆடை வணிகம்: ஒரு சிறப்பான அமைப்பும் வெவ்வேறு வகையான  

ஆடைகள் கொண்ட ஒரு வணிகத்திற்கு குறைந்தது 8 லட்சங்கள் வரை தேவைப்படலாம். இது நீங்கள் வணிகம் அமைக்கும் இடம், கொள்முதல் மற்றும் பணியாளர் பொறுத்தது. 

பல்பொருள் அங்காடி வணிகம்: ஒரு சிறப்பான அமைப்பும் வெவ்வேறு வகையான பொருட்கள் கொண்ட ஒரு பல்பொருள் அங்காடி  வணிகத்திற்கு குறைந்தது 10 லட்சங்கள் முதல் 50 லட்சங்கள் வரை தேவைப்படலாம். இது நீங்கள் வணிகம் அமைக்கும் இடம், கொள்முதல் மற்றும் பணியாளர் பொறுத்தது. 

வன்பொருள் வணிகம்: அனைத்து வகையான பொருட்கள் கொண்ட ஒரு சிறந்த வன்பொருள் வணிகம் அமைக்க 10 லட்சங்கள் முதல் 1 கோடி வரை தேவைப்படலாம். இது நீங்கள் வணிகம் அமைக்கும் இடம், கொள்முதல் மற்றும் பணியாளர் பொறுத்தது.

பேக்கரி வணிகம்: அனைத்து வகையான பேக்கரி தின்பண்டங்கள் கொண்ட ஒரு சிறந்த பேக்கரி வணிகம் அமைக்க 5 லட்சங்கள் முதல் 8 லட்சங்கள் வரை தேவைப்படலாம். இது நீங்கள் வணிகம் அமைக்கும் இடம், கொள்முதல் மற்றும் பணியாளர் பொறுத்தது.

ஒருங்கிணைந்த பண்ணை வணிகம்: ஒரு அதிக லாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் அமைக்க 10 லட்சங்கள் வரை தேவைப்படும். இது நிலம், பாசனம், பயிர்கள், உரங்கள், பராமரிப்பு மற்றும் தொழிலாளர் ஊதியம் போன்றவற்றை சார்ந்தது. 

பல்வேறு வகையான வணிகங்கள், அதன் உரிமங்கள் மற்றும் அனுமதிகள் 

எந்த ஒரு வணிகமும் தொடங்கப்படுவதற்கு முன் அரசு நிர்ணயித்துள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.  அப்போதுதான் உங்கள் வணிகத்திற்கு தேவையான மூலப் பொருட்கள், தொழிலாளர்கள் மற்றும் பிற தேவைகள் தடைகள் இன்றி கிடைக்கும். 

ஆடை வணிகம்: ஆடை வணிகம் செய்ய வணிக உரிமம், விற்பனை வரி அனுமதி மற்றும் பிற பரிவர்த்தனைகளுக்கான முறையான அனுமதிகள் பெற வேண்டும். 

பேக்கரி வணிகம்: பேக்கரி வணிகம் என்பது ஒரு உணவு சார்ந்த வணிகம் என்பதால் சுகாதாரத் துறையால் வழங்கப்படும் தரக் கட்டுப்பாடு மற்றும் உணவு துறையால் வழங்கப்படும் fssai உரிமம் பெறுவது மிகவும் அவசியம். 

பல்பொருள் அங்காடி வணிகம்: ஒரு பல்பொருள் அங்காடி வணிகத்திற்கு வணிக உரிமம், விற்பனை வரி உரிமம் மற்றும் fssai யின் உரிமம் போன்றவற்றுடன் சுகாதார துறையின் அனுமதியும் அவசியம். 

வன்பொருள் வணிகம்: ஒரு வன்பொருள் வணிகம் அமைக்க வணிக உரிமம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பொருட்களின் கொள்முதலுக்கு தேவையான அனுமதிகள் போன்றவை அவசியம். 

ஒருங்கிணைந்த பண்ணை வணிகம்: ஒரு ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தில் விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்புக்கு அருகிலுள்ள பஞ்சாயத்து, நகராட்சி அல்லது மாநகராட்சியின் அனுமதி அவசியம். அதேபோல சுகாதாரத் துறையின் அனுமதியும் அவசியம். பல வகையான உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால் அவற்றை நீங்கள் நேரடியாக விற்பனை செய்வதாக இருந்தால் fssai உரிமம் பெறுவது மிகவும் அவசியம். 

பல்வேறு வணிகங்களுக்கான இடத் தேவைகள், பணியாளர் தேவை மற்றும் செலவுகள் 

ஆடை வணிகம்: ஒரு சிறிய அளவு அல்லது நடுத்தர அளவு ஆடை வணிகம் அமைக்க 800 முதல் 1000 சதுர அடி கொண்ட இடம் போதுமானது. உங்கள் வணிகத்தின் தினசரி விற்பனை, வாடிக்கையாளர் வருகை பொறுத்து 2 – முதல் 3 பணியாளர்களை பணியமர்த்தலாம். பணியாளர்கள் ஊதியம், மின் கட்டணம், பராமரிப்பு செலவுகள் போன்றவை உள்ளடங்கும். 

பல்பொருள் அங்காடி வணிகம்: ஒரு நடுத்தர அளவு அல்லது பெரிய அளவு பல்பொருள் அங்காடி வணிகம் அமைக்க 1000 முதல் 1800 சதுர அடி கொண்ட இடம் போதுமானது. உங்கள் வணிகத்தின் தினசரி விற்பனை, வாடிக்கையாளர் வருகை பொறுத்து 5 முதல் 10 பணியாளர்களை பணியமர்த்தலாம். பணியாளர்கள் ஊதியம், மின் கட்டணம், பராமரிப்பு செலவுகள், போக்குவரத்து செலவுகள் போன்றவை உள்ளடங்கும். 

பேக்கரி வணிகம்: ஒரு சிறிய அளவு அல்லது நடுத்தர அளவு பேக்கரி  வணிகம் அமைக்க 600 முதல் 800 சதுர அடி கொண்ட இடம் போதுமானது. உங்கள் வணிகத்தின் தினசரி விற்பனை, வாடிக்கையாளர் வருகை பொறுத்து 2 முதல் 3 பணியாளர்களை பணியமர்த்தலாம். பணியாளர்கள் ஊதியம், மின் கட்டணம், பராமரிப்பு செலவுகள் போன்றவை உள்ளடங்கும்.

வன்பொருள் வணிகம்: ஒரு நடுத்தர அளவு அல்லது பெரிய அளவு வன்பொருள் வணிகம் அமைக்க 1000 முதல் 1800 சதுர அடி கொண்ட இடம் போதுமானது. உங்கள் வணிகத்தின் தினசரி விற்பனை, வாடிக்கையாளர் வருகை பொறுத்து 5 முதல் 10 பணியாளர்களை பணியமர்த்தலாம். பணியாளர்கள் ஊதியம், மின் கட்டணம், பராமரிப்பு செலவுகள், போக்குவரத்து செலவுகள் போன்றவை உள்ளடங்கும்.

ஒருங்கிணைந்த பண்ணை வணிகம்: ஒரு நடுத்தர அளவு அல்லது பெரிய அளவு ஒருங்கிணைந்த பண்ணை வணிகம் அமைக்க குறைந்தது 1 ஏக்கர் அளவுள்ள  இடம் போதுமானது. உங்கள் வணிகத்தின் தினசரி செயல்பாடுகள் பொறுத்து 3 முதல் 5 பணியாளர்களை பணியமர்த்தலாம். பணியாளர்கள் ஊதியம், மின் கட்டணம், பராமரிப்பு செலவுகள், போக்குவரத்து செலவுகள் போன்றவை உள்ளடங்கும்.

வெவ்வேறு வணிகங்களில் உள்ள லாபங்கள் 

ஆடை வணிகம்: ஒரு ஆடை வணிகத்தில் தோராயமாக 20% முதல் 30% சதவீதம் வரை லாபம் உள்ளது.

பல்பொருள் அங்காடி வணிகம்: ஒரு பல்பொருள் அங்காடி வணிகத்தில் தோராயமாக 8% முதல் 15% சதவீதம் வரை லாபம் உள்ளது.

பேக்கரி வணிகம்: ஒரு பேக்கரி வணிகத்தில் தோராயமாக 5% முதல் 15% சதவீதம் வரை லாபம் உள்ளது.

வன்பொருள் வணிகம்: ஒரு வன்பொருள் வணிகத்தில் 20% முதல் 30% சதவீதம் வரை லாபம் உள்ளது.   

ஒருங்கிணைந்த பண்ணை வணிகம்: ஒரு ஒருங்கிணைந்த பண்ணை வணிகத்தில் தோராயமாக 10% முதல் 20% சதவீதம் வரை லாபம் உள்ளது.  

முடிவுரை 

ஒரு வணிகம் தொடங்க தேவையான முதலீடு, பணியாளர் தேவை, இடத் தேவைகள், பெற வேண்டிய அனுமதிகள் மற்றும் உரிமங்கள் மற்றும் நாம் பெறக்கூடிய லாபங்கள் அளவு பற்றி ffreedom ஆப் வழியாக நன்றாக அறிந்துகொண்டோம்.  

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.