Home » Latest Stories » வணிகம் » குர்தியை அற்புதமான முறையில் தைக்க 6 குறிப்புகள்

குர்தியை அற்புதமான முறையில் தைக்க 6 குறிப்புகள்

by Bharadwaj Rameshwar

முன்னுரை 

ஒரு குர்தியை பேண்ட், ஸ்கர்ட்ஸ் போன்றவற்றுடன் அணியலாம். குர்தி பல்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில் வருகின்றன. ஆனால் ஒரு குர்திக்கான தையல் அடிப்படை முறை ஒன்றாக தான் இருக்கிறது. ஸ்லீவ்ஸ், கழுத்து, நீளம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் வித்தியாசமாக தோற்றமளிக்கின்றன. குர்தி என்பது சற்று நீளமான டாப்பாகும். இது கமீஸ்க்கு  அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்  மற்றும் பொதுவாக ஜீன்ஸ் பேண்ட், பாட்டியாலாக்கள் போன்றவற்றுடன் அணியப்படுகிறது. குர்தி வடிவமைப்பதை பற்றி அறிந்து கொள்ள இது மிக உதவியாக இருக்கும்.

குர்தி வகைகள்

தற்போதைய வாழ்க்கை முறையில் பல வித குர்தி வகைகள் இருக்கிறது. அவற்றில் பிரபலமாக இருக்கும் சில குர்தி வகைகள் பற்றியும் அதன் அதிக பயன்பாடுகள் பற்றியும் இதில் கற்றுக் கொள்ளலாம்.

ஏ-லைன் குர்தி

இந்த ஏ-லைன் குர்தி ஒரு பொதுவான வகை குர்தியாக இருக்கிறது. இது சிறிய, நீளமான மற்றும் மூட்டு அளவில் அதிகம் கிடைக்கும். இது இடுப்பில் இருந்து ஃபிலேர்ஸை கொண்டுள்ளதால் இது ஏ வடிவத்தை கொடுக்கிறது. உங்கள் விருப்பத்திற்கு தகுந்தவாறு இந்த குர்தியின் அளவை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

அனார்கலி குர்திகள்

இந்த குர்தியின் நீளம் மிக நீளமானது. இந்த  குர்தியை நீங்கள் எந்த  சிறப்பு நிகழ்வுக்கு வேண்டுமானாலும் அணிந்து செல்லலாம். ப்லாஜோ மற்றும் லெக்கின்ஸுடன் அணிந்தால்  இது உங்களுக்கு சிறந்த தோற்றத்தை தரும்.

ஃபிலேர்ட் குர்தி 

இந்த ஃபிலேர்ட் குர்திகள் இந்த நாட்களில் மிகவும் அழகான மற்றும் மிகவும் பிரபலமான குர்தாக்களாக இருக்கிறது. நிகழ்வுக்கு செல்லும் போது சேலை அல்லது லெஹங்காவை விரும்பாதவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். மற்றும் உயரமாக இருப்பவர்களுக்கும் இந்த ஃபிலேர்ட் குர்தி சிறந்த தோற்றத்தை  தரும்.  

லாங் ஸ்ட்ரெயிட் குர்தாஸ்

இந்த லாங் ஸ்ட்ரெயிட் குர்தாக்கள் நீளமாக இருப்பதால்  உங்கள் தோற்றத்தை சற்று உயர்வாக காட்டும் அதே  போல் உங்களுக்கு சரியான தொழில்முறை தோற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. பணியிடங்களுக்கு செல்லும் போது அணிந்து கொண்டால் இது மிக பொருத்தமாக இருக்கும்.

கலர் ப்ளாக் குர்தாஸ் 

புதிதாக ஒன்றை முயற்சிக்க விரும்புவோருக்கு மாறுபட்ட வண்ணங்களின் கலவையாக இந்த கலர் ப்ளாக் குர்தாக்கள் இருக்கிறது. அதே போல் இந்த கலர் ப்ளாக் குர்தாக்களை நீங்கள் அணிவதால் தனித்துவத்துடன் காணப்படுவீர்கள். இது உங்களுக்கு சிறந்த  தோற்றத்தை தரக்கூடியதாக இருக்கிறது. இந்த கலர் ப்ளாக் குர்தாக்கள் மூலம் நீங்கள் வித்தியாசமான வண்ணங்களுடன் காணப்படுவீர்கள்.

 ஷர்ட் ஸ்டைல் குர்தாஸ்

இந்த ஷர்ட் ஸ்டைல் குர்தா உங்களுக்கு ஸ்மார்ட்டான தோற்றத்தை தருகிறது. இதை நீங்கள் நேர்காணல் அல்லது மீட்டிங்களுக்கு அணிந்து செல்ல பொருத்தமானதாக இருக்கும். 

ஹை-லோ குர்தாஸ் 

இந்த ஹை-லோ குர்தா வகை பின் பக்கத்தை விட  முன் பக்கம் சிறியதாக இருக்கும். இதற்கு லெக்கின்ஸ் மற்றும் ஜீன்ஸ் அணிந்தால் மிக பொருத்தமாக இருக்கும். 

கஃப்தான் ஸ்டைல் குர்தாஸ் 

இந்த கஃப்தான் ஸ்டைல் குர்தா அதன் ஃபுல் டிராப் ஸ்லீவ்கள் மூலம் உங்கள் தோற்றத்திற்கு ராயல்டியின் டச்சை கொடுக்கிறது. இந்த  கஃப்தான் ஸ்டைல் குர்தாக்கள் அணைத்து உடல் அமைப்பினருக்கும் பொருத்தமாக இருக்கும் குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு மிக பொருத்தமாகவும் அணிவதற்கு எளிமையாகவும் இருக்கும்.

இன்னும் பல வகை குர்திகள் இருக்கின்றன ஆனால் அடிப்படையான முறையை வைத்து இந்த குர்தாக்களை எப்படி வடிவமைப்பது என்று முழுமையாக கற்றுக் கொள்ளலாம். 

குர்தி தைப்பதற்கான முறை

குர்தியை தைக்க முதலில் உடல் அளவீடுகளை அளந்து குறித்து வைத்து கொள்ளவும். பிறகு துணியை எடுத்து தலைகீழாகத் திறந்து துணியின் இரண்டு பகுதிகளும் ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும் வண்ணம் மடித்து கொள்ளுங்கள். மீண்டும் இரண்டு முனைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும் வண்ணம் மடித்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு நான்கு லேயராக காணப்படும். நீங்கள்  அளந்த உடல் அளவை பயன்படுத்தி நேரடியாக அளவீடுகளை நீங்கள் மடித்த துணியில் குறிக்கவும் அல்லது முதலில் காகிதத்தில் வரைந்து கொள்ளுங்கள். பின்னர் அனைத்து கோடுகள் மற்றும் வளைவுகளை உங்கள் அளவுக்கு சரியாக இணைத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் வரைந்த கோடுகள் மற்றும் விளைவுகளுக்கு ஏற்ப சரியாக கத்தரித்து கொள்ளுங்கள். கத்தரித்து முடித்த பின் அளந்து வைத்திருந்த அளவின் படி சரியாக தைக்க வேண்டும்.

குர்தி தைப்பதற்கான 6 முக்கிய குறிப்புகள்  

குர்திகளை எளிமையான மற்றும் சிறந்த முறையில் தைப்பதற்கான சிறந்த 6 முக்கிய குறிப்புகளை இதில் கற்றுக் கொள்ளலாம். 

அளவீட்டு படத்தை தயார் செய்யவும்

நீங்கள் அளவு எடுக்கும் போது உங்கள் அளவீடுகளை நிரப்பி கொள்வதால் நீங்கள் எளிதாகக் கண்டறிய உதவும். உங்கள் விளக்கப்படத்தில் பின்வரும் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள் கட்டாயமாக இருக்க வேண்டும். தோள்பட்டை அளவீடுகள், செங்குத்து அளவீடுகள், அதாவது மார்பளவு, இடுப்பு, முழு நீளம், இடுப்பு நீளம். சுற்று அளவுகள், அதாவது மார்பு, மார்பளவு, இடுப்பு, இடுப்பு.கழுத்து அளவீடுகள் முக்கியமாக முன் ஆழம், பின் ஆழம். கடைசியாக ஸ்லீவ் அளவீடுகள் முழுவதுமாக இருக்க வேண்டும், அவை கை சுற்றளவு, கை துளை, ஸ்லீவ் நீளம் மற்றும் ஸ்லீவ் திறப்பு போன்ற அனைத்து அளவீடுகளும் உங்கள் அளவீடு குறிப்பில் இருக்க வேண்டும்.

உடல் வடிவத்தை உருவாக்குதல்

நீங்கள் எடுத்திருக்கும் துணியில் உங்கள் எடுத்த அளவீடுகளின் படி எப்படி வடிவமைப்பது என்று இதில் அறிந்து கொள்ளலாம். ஒரு பேட்டர்ன் பேப்பரில் குர்தியின் நீளத்தைக் குறித்துக் கொள்ளுங்கள், இதை கீழே இருந்து தொடங்குங்கள். பின் மார்பளவு, இடுப்பு மற்றும் இடுப்பு செங்குத்து அளவீடுகளை குறித்துக் கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் தோள்பட்டை, மார்பளவு, இடுப்பு மற்றும் இடுப்பு புள்ளிகளில் கிடைமட்ட கோடுகளை சரியான அளவின்படி வரைந்து கொள்ளுங்கள். தோள்பட்டை சாய்வுகளை முறையாக வரைந்து கொள்ளுங்கள். உங்கள் கை துளையை 2 ஆக வகுத்து பின்னர் செங்குத்துக் கோட்டில் ஒரு அடையாளத்தை உருவாக்கவும். பின்னர் மார்பளவிலும் இடுப்பளவிலும் முறையாக புள்ளிகள் மூலம் அளந்து கொள்ளுங்கள். நீங்கள் வரைந்த புள்ளிகளை இணைத்து கொள்ளுங்கள். காகிதத்தின் இடுப்பு மற்றும் அடிப்பகுதிகளையும் எளிதான புள்ளிகள் மூலம் இணைத்துக் கொள்ளுங்கள்.

கை மற்றும் கழுத்து துளைகளை சேர்த்தல்

கை துளை கோட்டின் மையத்தைக் கண்டறிந்து பின்னர் 3⁄4 அங்குலம் உள்நோக்கிக் குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் புள்ளியை பிரித்து தோள்பட்டை சாய்வை மார்பு கோட்டுடன் இணைக்க வேண்டும். அதே போல் பின் பக்கத்தையும் இணைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தோள்பட்டை சாய்வில் கழுத்து துளையை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள். அதே முறையை செய்து பின் கழுத்தையும் குறிப்பிட்ட அளவில் வரைந்து கொள்ளுங்கள்.

ஸ்லீவ் பேட்டன் வரைதல்

ஒரு காகிதத்தை பாதியாக மடித்து கொள்ளுங்கள். நீங்கள் பாதி ஆடை வடிவத்தை பயன்படுத்தி குர்தி வடிவத்தை வரைந்து வெட்ட முடியும். குர்தி ஸ்லீவை வரைவதற்கும் வெட்டுவதற்கும் உங்களுக்கு முழு ஸ்லீவ் வடிவம் தேவைப்படுகிறது. மடித்த விளிம்பில் இருந்து ஸ்லீவ் நீளத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். கழுத்து, ஸ்லீவ் மற்றும் உடல் அகலத்தை சரியான அளவில் வரைந்து கொள்ளுங்கள்.

வரைந்த வடிவத்தை வெட்டுதல்

பின்புற கழுத்து மற்றும் பின்புற கை துளைகள் உட்பட ஆடை வடிவத்தை முழுமையாக வெட்டும் முறையை தொடங்க வேண்டும். உங்கள் துணியை நீளமான வடிவில் பாதியாக மடித்து பின்னர் அகலத்தை மீண்டும் பாதியாக மடித்து கொள்ளுங்கள். துணி 

மடித்ததை விளிம்பில் இருந்து இந்த துணியின் மேல் நீங்கள் காகிதத்தில் வரைந்த வடிவத்தைப் பொருத்திக் கொள்ளுங்கள். தையல்காரரின் சாக்கை பயன்படுத்தி தையல் அளவுகளை உங்கள்  துணியில் காகித அளவில் இருந்து சிறிது அதிகமாக வரையவும். பின்னர் கூர்மையான கத்தரிக்கோலை பயன்படுத்தி உங்கள் தையல் அளவின்படி உங்கள் துணியை சரியாக வெட்டிக் கொள்ளுங்கள்.

வெட்டப்பட்ட துணியை தைக்கவும்

நீங்கள் அளந்து வெட்டிய துணியின் கழுத்தை தைக்கவும். பிறகு முன் மற்றும் பின் பகுதியை இணைத்து தைக்கவும் அதன் பின் தைத்த துணியுடன் ஸ்லீவை இணைத்து தைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக குர்தியின் அடிப்பகுதி ஓரங்களை தைத்துக் கொள்ளுங்கள். இப்போது குர்தி அணிந்து கொள்வதற்கு தயாராகிவிட்டது.

முடிவுரை 

குர்தி என்பது எளிதாக தைக்கும் ஒரு முறையாக இருக்கிறது. நீங்கள்  இந்த குர்தி வடிவமைப்பது குறித்த ஆர்வம் அதிகமாக இருந்தால் நன்றாக கற்றுக் கொள்ள உங்களுக்கு எளிதாக இருக்கும். மேலும் இதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள நினைத்தால் உங்களுக்கு ffreedom app மூலம் இந்த குர்தியை எப்படி தைப்பது? என்ற பாடத்தை வணிக பாடத்திட்டத்தின் மூலம் எங்களுக்கு சிறந்த வழிகாட்டிகளிடம் இருந்து கற்றுக் கொடுக்கிறது. இந்த பாடத்தின் மூலம் உங்கள் வீட்டிலிருந்து சொந்த வணிகம் தொடங்குவதற்கான சிறந்த யோசனை கிடைக்கும்.

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.