ராஜன் ஒரு தனியார் நிறுவன ஊழியர். மாதம் மாதம் ஒரு நல்ல சம்பளத்தைப் பெறுகிறார். ஆனால், அவருக்கு அது போதுமானதாக இல்லை. ஒரு பெரிய உணவக தொழில் தொடங்கும் ஆசையிலும் உள்ளார். திடீர் என்று ஒரு நாள் ராஜனே எதிர்பாராத வண்ணம் 10 லட்ச ரூபாய் வந்தது. எப்படி? பங்கு சந்தை. ராஜன் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்த 1 லட்ச ரூபாய் 10 லட்ச ரூபாயாக திரும்பி வந்தது. இது எப்படி சாத்தியம் என்று யோசிக்கிறீர்களா?
ஒரு எடுத்துக்காட்டு வழியாக அறிந்துகொள்வோம். நாட்டில் செயல்படும் பல்வேறு தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் பங்குகளைப் பொதுமக்களுக்காக வெளியிடுவார்கள். பொதுமக்களும் தங்களுக்கு பிடித்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக்கொள்வர். பின்னர், அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு உயரும்போது இந்தப் பங்குகளின் விலையும் அதிகரிக்கும். அதாவது, 100 ரூபாய்க்கு வாங்கிய பங்கின் மதிப்பு 1000 ரூபாயாக மாறும். இதற்கு நேர்மாறாகவும் நடக்கலாம். இது சந்தை நிலவரம், நிறுவனத்தின் நிகழ்கால செயல்பாடுகள் மற்றும் அதற்கான வரவேற்பு போன்றவற்றை சார்ந்துள்ளது.
பழமையானது, பலன் தரக்கூடிய முதலீடு
பங்கு சந்தை என்பது ஒருவர் தனது எதிர்காலத் தேவைகளுக்காக வங்கி, காப்பீடு போன்ற பல சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது போன்றது.
பங்கு சந்தையில் நீங்கள் எடுத்தவுடனே லாபம் காண முடியாது. சரியான நேரத்திற்காக மிகவும் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.
மேலும், ஒரு நிறுவனத்தில் பங்கை வாங்கியவுடன் அந்த நிறுவனம் எடுக்கக்கூடிய அனைத்து விதமான முடிவுகளிலும் உங்கள் வாக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
உதாரணமாக, ஒரு தனியார் நிறுவனம் உற்பத்தி வாய்ப்புகள் (மூலப் பொருட்கள் மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள இடம் அல்லது மின் தடை அதிகமுள்ள இடம்) குறைவாக உள்ள இடத்தில் விரிவாக்கம் செய்ய விரும்புகிறது என்றால் நீங்கள் அதை உங்கள் வாக்கு வழியாக எதிர்க்கலாம். நிறுவனம் தன் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
குறைந்த காலத்தில் அதிக வருமானம்
குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் ஏதாவது ஒரு வாய்ப்பை உங்களால் கூற முடியுமா? லாட்டரி என்பவர்கள் பழைய பேப்பரைப் பார்க்கலாம். ஏனென்றால் தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. அப்படியென்றால் வேறு என்ன? பங்கு சந்தை. நீங்கள் செய்ய வேண்டியது ஒரு டீமேட் கணக்கைத் தொடங்க வேண்டும். அதன் வழியாக உங்கள் ஆலோசகர் வழியாக நீண்ட காலத்தில் சிறப்பாக செயல்படும் நிறுவனத்தைக் கண்டறிய வேண்டும்.
அந்நிறுவனத்தின் பங்குகளை 100 பங்குகள் அல்லது உங்கள் முதலீட்டைப் பொறுத்து எத்தனை பங்குகள் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். அது உங்களுக்கு பல மடங்கு லாபத்தைத் தரும் வல்லமை படைத்தது. உதாரணமாக, 100 ரூபாய்க்கு நீங்கள் 100 பங்குகளை வாங்கி இருக்கீர்கள் என்றால் அது 1000 ரூபாயாக உங்களுக்கு திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோல இதற்கு நேர்மாறாகவும் நடக்க வாய்ப்புள்ளது. எனினும் நீங்கள் சிறப்பாக செயல்படும் நிறுவனத்தைத் தேர்வு செய்திருப்பதால் லாபம் பெறவே அதிக வாய்ப்புள்ளது.
அதிக பணப்புழக்கம் உள்ள பங்கு சந்தை
நமது இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய பங்கு சந்தை மற்றும் பாம்பே பங்கு சந்தை என இரு பெரும் பங்கு சந்தை உள்ளது. எனவே, அதிக பங்குகள் அதிக வாய்ப்புகள் உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனத்தின் 100 பங்குகளை காலையில் வாங்கும் ஒருவர் மாலையில் நல்ல விலைக்கு விற்றுவிடலாம். அதேபோல விலை குறையலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கும் பங்குகளை நடப்பு விலைக்கே விற்று உங்கள் முதலீட்டைப் பாதுகாக்கலாம்.
மேலும், சந்தை மதிப்பு அதிகரிக்கும் பங்குகளை மேலும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். எனவே, உங்கள் விருப்பம் போல பங்குகளை வாங்கலாம் விற்கலாம்.
பல தேர்வுகளைக் கொண்ட பங்கு சந்தை
பங்கு சந்தை என்பது பங்குகள் மட்டுமில்லாமல் பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் போன்ற பல வகையான தேர்வுகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வேறு வேறு திட்டங்களில் முதலீடு செய்யலாம். எனவே, பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்கள் முதலீட்டாளரின் பணத்தைப் பாதிக்காது. அதாவது, ஒரு வேளை நீங்கள் வாங்கிய பங்குகள் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் பல வழிகளில் நீங்கள் செய்த முதலீடு உங்களுக்குக் கைகொடுக்கும். இது முதலீட்டாளர்களின் முதலீடை 100 சதவீதம் திருப்பி தராவிட்டாலும் 70% சதவீதம் திரும்ப பெறும் வாய்ப்பைத் தருகிறது.
பாதுகாப்பான பங்கு சந்தை முதலீடு
நமது இந்தியாவில் பங்கு சந்தையின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தல், முதலீட்டாளர்களின் உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் பங்கு சந்தையை மேம்படுத்துதல் போன்றவற்றை செபி எனப்படும் பங்கு சந்தை வாரியத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
முடிவுரை
பங்கு சந்தை கோர்ஸ் வழியாக ஒரு திறமையான முதலீட்டாளராக மாற தேவையான நுட்பங்கள் பற்றி அனைத்தையும் ffreedom ஆப் வழியாக அறிந்துகொண்டோம்.