ஒரு தொழில் ஆரம்பித்து வெற்றி பெற அத்தொழில் தொடர்பான சரியான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் இருந்தால் வெற்றி தொட்டுவிடும் தூரம்தான். இது சுப்ரீத் அவரது தொழிலில் வெற்றி பெற வேண்டும் எனும் தூண்டுதலை முறைப்படுத்த Boss Wallah சிறப்பான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கம் அளித்தது.
Boss Wallah அளித்த திறன்
சுப்ரீத், ஒரு வாலி பால் விளையாட்டில் கர்நாடக அணியை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினார். பின்னர், சொந்த தொழில் ஆரம்பிக்க எண்ணி பிரபலமான பைனான்ஸ் வணிகம் ஆரம்பித்தார். இந்த வணிகம் கை கொடுக்காததால் தண்ணீர் கேன் வணிகம் தொடங்கினார். இதிலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், வேறு வணிகம் தொடங்க எண்ணி Boss Wallah-ல் அப்பள உற்பத்தி கோர்ஸை பார்த்தார். அதன் வழியாக ஊக்கம் பெற்ற சுப்ரீத் தனது சொந்த அப்பளத் தயாரிப்பு வணிகம் ஆரம்பித்து வெற்றி அடைந்தார்.
அற்புதமான வருமானம் தரும் அப்பள வணிகம் – Boss Wallah-ன் ஊக்கம்
சுப்ரீத், பத்தாம் வகுப்பு மட்டும் படித்த 25 வயதான இளம் தொழிலதிபர். பைனான்ஸ், தண்ணீர் கேன் வணிகத்தில் பெற்ற தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி சாதனை படைத்தவர். அப்பளத் தயாரிப்பு பற்றி எதுவும் தெரியாத சுப்ரீத் அவர்களுக்கு அப்பள உற்பத்தி தொடர்பான அனைத்தையும் Boss Wallah வாயிலாக தெரிந்து கொண்டார். அதாவது, மூலப் பொருள் கொள்முதல் தொடங்கி சந்தைப்படுத்தல், பேக்கிங், ஏற்றுமதி வரையிலான அனைத்து தகவல்களையும் கற்றுத்தேர்ந்தார். பின்னர், தனது சொந்த அப்பள உற்பத்தி வணிகம் ஆரம்பித்து வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தார்.
நனவாகும் கனவு – பத்தாயிரம் முதல் லட்சம் வரை
அப்பளத் தயாரிப்பு கோர்ஸ் வாயிலாக தனது சொந்த அப்பள உற்பத்தி வணிகத்தை வெறும் 10,000 முதலீட்டில் பன்னாட்டு நிறுவனமான கூகுள் போல ஒரு கார் ஷெட்டில் தொடங்கினார். இன்று மாதம் 1 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளார். இன்று லண்டன் வரை தனது அப்பள வியாபாரத்தை மேம்படுத்தி ஏற்றுமதியும் செய்கிறார்.
லாபம் தரும் வாய்வழி பேச்சு
தனது முந்தைய வணிகங்களில் அறிமுகமான வாடிக்கையாளர்களுடனான நல்லுறவால் சுப்ரீத்தின் அப்பள உற்பத்தி தொழில் அவர்களிடம் எளிதில் சென்றடைந்தது. மேலும், வாடிக்கையாளர்களின் நேர்மறையான பேச்சு பெரும் அளவிலான மக்களைச் சென்றடைய உதவியது. மேலும், அவர் நவீன தொழில்நுட்பங்களான வாட்ஸ் அப் வாயிலாக ஆர்டர்கள் பெறுதல், சரியான நேரத்தில் டெலிவரி செய்தல் என தனது தொழில் மேம்பாட்டிற்கு பயன்படுத்தி கொண்டார். அது போல Boss Wallah அளித்த சந்தைப்படுத்தல், பேக்கிங் மற்றும் வாடிக்கையாளர் தக்கவைப்பு போன்ற திறன்களால் தொழிலை பன்மடங்கு பெருக்க முடிந்தது.
பொருளாதார சுதந்திரத்தின் மறுபெயர் Boss Wallah!
உங்களது சொந்த வணிகம் தொடங்க விரும்புகிறீர்களா? அதற்கான வழிமுறை, அனுமதி, உரிமம், கொள்முதல், உற்பத்தி மற்றும் பலவற்றை அறிய வேண்டுமா? சுப்ரீத், அப்பள வணிகத்தில் வெற்றி பெற தேவையான திறன்களையும் உத்திகளையும் Boss Wallah-ல் கற்றுக்கொண்டு அதை வெற்றிகரமாக செயல்படுத்தி சிறப்பான நிலையை அடைந்தார்.
Boss Wallah-ல் இதை போன்று பல தொழில்முனைவு, நிதி சேமிப்பு மற்றும் விவசாயம் தொடர்பான பல கோர்ஸ்கள் உள்ளது. இவை அனைத்தும் இந்திய மக்கள் தங்களது சொந்த தொழில் கனவை நனவாக்க உதவுகிறது. இது வேலை தேடுபவர்களை வேலைகளை உருவாக்கும் தொழில்முனைவோர்கள் நிறைந்த ஒரு வல்லரசு நாடாக இந்தியா விளங்க வேண்டும் என்னும் எங்கள் CEO வான சுதீர் அவரது இலக்கை அடைய உதவுகிறது.