உறுதியான மனிதரைக் குறிக்க வைரம் பாய்ந்த கட்டை என்றும் தேக்கு போன்ற உடம்பு என்றும் கூறுவார்கள். இந்தப் பழமொழிகளில் தேக்கு மரத்தின் முக்கியத்துவத்தை அறியலாம்.
மரக்கட்டை என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது தேக்கு மரம் தான். ஏனென்றால் தேக்கு மரத்தின் உறுதித்தன்மை, நீடித்து உழைக்கும் தன்மை, பூச்சி எதிர்க்கும் தன்மை போன்றவற்றால் அதிக மக்களால் விரும்பப்படுகிறது. எனவே, அதன் சந்தை விலையும் பிற மரங்களைப் போலில்லாமல் அதிக சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது.
பொதுவாக, தேக்கு மரங்கள் பர்னிச்சர் பொருட்கள் உருவாக்க அதிகமாக பயன்படுகிறது. தேக்கு மரத்தில் செய்யப்பட்ட நாற்காலிகள், மேசைகள், பீரோக்கள், கட்டில்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. ஏனென்றால் தேக்கு மரங்களால் செய்யப்பட்ட பொருட்களின் சந்தை தேவை மற்றும் சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது. மேலும், பெரிய அளவிலான தேக்கு மரத் தோட்டம் அமைத்து முறையான பராமரிப்பு மற்றும் உரமிடல் வழியாக நல்ல விளைச்சல் மற்றும் நல்ல லாபம் பெறலாம்.
தச்சர்களின் நண்பன் – தேக்கு மரம்
நமது பேச்சு வழக்கில் ஆரோக்கியமான ஒருவரைக் குறிப்பிட தேக்கு போன்ற உடலைக் கொண்டவர் என்று கூறுவதுண்டு. அப்படிப்பட்ட தச்சு தொழில் செய்யும் நண்பர்களுக்கு பிடித்த மரம் எது? தேக்கு. ஏன்? அவர்கள் விரும்பும் வடிவம், அமைப்பு என அனைத்திற்கும் ஈடுகொடுக்கும் மரம் தேக்கு. தச்சர்கள் விரும்பும் வடிவத்தில், தோற்றத்தில் தேக்கை மாற்றலாம்.
ஏனென்றால் தேக்கு மரம் இயல்பாகவே பூச்சி எதிர்ப்பு திறன், நீடித்து உழைக்கும் திறன் கொண்டது மற்றும் விரிசல் விடாத தன்மை உள்ளது.
முதலீடு, அரசு ஆதரவு மற்றும் நிலம்
அனைத்து வகையான நிலங்களிலும் (கரிசல் மண், வண்டல் மண்) தேக்கு நன்றாக வளரும் என்றாலும் செம்மண் மிகவும் நல்லது. ஒரு ஏக்கரில் தேக்கு பயிரிட 1 லட்சம் வரை செலவாகும். பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா மற்றும் வங்கி கடன் திட்டங்களும் மானியங்களும் உள்ளது.
மண், உரம் மற்றும் நடவு முறை
தேக்கு மரம் வளர்க்க அனைத்து வகையான மண் ஏற்றது என்றாலும் செம்மண் மிகவும் சிறந்தது. நிலத்தை நன்றாக உழுது பண்படுத்த வேண்டும். போதுமான இடைவெளியில் தேக்கு கன்றுகளை நட வேண்டும். 6 அடி, 8 அடி, 10 அடி இடைவெளியில் நாற்றுகளை நடலாம்.
இது அறுவடையை எளிதாக்கும். எடுத்துக்காட்டாக 1 ஏக்கர் நிலத்தில் நூறு மரங்கள் நட்டு வைத்தால், அறுவடை சமயத்தில் நன்கு வளர்ந்த ஒரு மரம் வெட்டி அடுத்த மரத்தை வெட்டாமல் பிறகு வெட்டுவது உங்கள் லாபத்தை அதிகரிக்கும். அதாவது, மீதமுள்ள 50 மரங்கள் வளர தேவையான காலத்தை வழங்குவது உங்கள் மொத்த லாபத்தை அதிகரிக்கும்.
தெளிப்பு நீர் பாசனம் அமைக்கலாம். தேக்கு மரத்தின் இலைகளையே தழைகூளமாக போடலாம் அல்லது இயற்கை உரங்களை வருடம் ஒருமுறை இடுவது போதுமானது.
மரம் கத்தரிக்கும் செயல்முறை மற்றும் காலம்
மரங்களை வெட்டுவதற்கு முன் அரசின் அனுமதி அவசியம். தேக்கு மரத்தைப் பொறுத்தவரை விளைச்சல் பெற நடவு செய்து குறைந்தது 10 வருடங்கள் ஆகும். தேக்கு விவசாயத்தில் ஒரு ஏக்கரில் உள்ள அனைத்து மரங்களையும் ஒரே சமயத்தில் வெட்ட இயலாது. முதிர்ந்த மற்றும் பருத்த மரங்கள் 10, 20 அல்லது 30 மரங்கள் வீதம் வெட்டலாம்.
சந்தைப்படுத்தல், விலை, வருமானம் மற்றும் செலவுகள்
குழி தோண்டுதல், மரக் கன்றுகளை நடுதல், உரம், நீர்ப்பாசனம் மற்றும் பராமரிப்பு என அனைத்தையும் சேர்த்தால் 1 லட்ச ரூபாய் வரை தேவைப்படும்.
இது தேவையைப் பொறுத்து மாறும். எடுத்துக்காட்டாக விழா காலங்கள், கல்யாண சீசன்களின் தேக்கு மரத்தின் தேவை அதிகமாக இருக்கும். அதாவது, தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பொருட்களான நாற்காலி, கட்டில் மற்றும் சோபா போன்றவை.
பெரிய கடைகள், மரம் அறுக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து விற்கலாம் அல்லது நீங்கள் நேரடியாக விற்கலாம். விற்பதற்கு முன் கட்டைகளை அதன் தரத்திற்கு ஏற்ப வகைப்படுத்துவது மிகவும் அவசியம். இது சந்தை தேவைக்கு ஏற்ப விலை நிர்ணயிக்க உதவலாம். தேக்கு மரக் கட்டைகளை ரூ 1000 – 5000 வரை விற்கலாம்.
முடிவுரை
நல்ல லாபம் தரும் தேக்கு மரம் வளர்ப்பு தொடர்பான அனைத்தையும் (நடவு முதல் சந்தைப்படுத்தல் வரை) ffreedom ஆப் வழியாக அறிந்துகொண்டோம்.