கதிரவன் ஒரு தனியார் நிறுவன ஊழியர். மாதம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. எதிர்பாராத நிகழ்வில் இந்தக் குடும்பத்தை யார் காப்பார்கள்? அங்கு தான் டெர்ம் இன்சூரன்ஸ் கை கொடுக்கிறது. அனைவரும் நீண்ட ஆயுளோடு நலமாக வாழ வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால், விபத்து, நோய் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் யாருக்கு எப்போது ஏற்படும் என்று யாரும் உறுதியாக கூற முடியாது. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் எனக்கு எதுவும் ஆகாது என்பது நம்பிக்கை. ஒருவேளை ஆனால் என்ன செய்வது? என்பது பற்றி சிந்திப்பது நடைமுறை வாழ்க்கை.
டெர்ம் இன்சூரன்ஸ் (கால காப்பீடு) என்றால் என்ன என்று இந்த கோர்ஸில் நன்றாக அறிந்து கொள்ளலாம். டெர்ம் இன்சூரன்ஸ் (கால காப்பீடு) உங்களுக்கு எப்படி உதவுகிறது என்று எங்கள் வழிகாட்டியிடம் இருந்து இந்த கோர்ஸில் நன்றாக அறிந்து கொள்ளலாம். டெர்ம் இன்சூரன்ஸ் என்பது ஒரு பாதுகாப்பான ஆயுள் காப்பீடாக எப்படி இருக்கிறது என்றும் இந்த கோர்ஸில் நன்றாக அறிந்து கொள்ளலாம். டெர்ம் இன்சூரன்ஸ் உங்கள் காலத்திற்கு பின் உங்கள் குடும்பத்திற்கு எப்படி உதவுகிறது என்று இந்த கோர்ஸில் நன்றாக அறிந்து கொள்ளலாம். நீங்கள் டெர்ம் இன்சூரன்ஸ் செய்வதன் வழியாக உங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவுகளையும், திருமண செலவுகளையும் உங்கள் மனைவியின் மருத்துவ செலவுகளையும் எப்படி நிர்வகிப்பது என்றும் இந்த கோர்ஸில் நன்றாக அறிந்து கொள்ளலாம்.
குறைந்த முயற்சியில் அதிக பலன் அளிக்கும் திட்டம்
பொதுவாக காப்பீடு என்பது உங்களுக்கு ஏதேனும் எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டுவிட்டால் உங்கள் குடும்பத்தின் நிதி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டம். சேமிப்பு என்றாலே பெரிய அளவில் சேமிக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு ஏற்ற பல திட்டங்கள் சந்தையில் உள்ளது. குறைவான அல்லது நடுத்தர வருமானம் பெறுவோர்களும் காப்பீட்டைப் பெற வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டம் தான் டெர்ம் இன்சூரன்ஸ் (கால காப்பீடு).
இங்கு நீங்கள் குறைந்தபட்ச முதலீடு மாதம் 288 ரூபாய் முதல் தொடங்கலாம்.
எதிர்பாராத நிகழ்வுகளில் உங்கள் குடும்பத்திற்கு ஒரு பெரிய தொகை இழப்பீடாக வழங்கப்படும்.
ஆயுள் காப்பீட்டின் புதிய பரிமாணம்
கோபால் ஒரு தனியார் நிறுவன ஊழியர். அவர் குறிப்பிட்ட நிறுவனத்தில் ஆயுள் காப்பீடு எடுத்துள்ளார். அந்தத் திட்டப்படி பாலிசிதாரர் குறிப்பிட்ட காலத்திற்கு பிரீமியம் செலுத்தியே ஆக வேண்டும் என்பது கட்டாயமல்ல. அதேபோல டெர்ம் இன்சூரன்ஸை 5, 10, 15 வருடங்கள் என உங்கள் விருப்பம் மற்றும் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளலாம்.
ஆயுள் காப்பீட்டில் நீங்கள் அதிக பலன்கள் பெற அதிக பிரீமியம் செலுத்த வேண்டும். மக்கள் அனைவரும் தவற விடும் இடம் இதுதான். ஏனென்றால் எல்லோருக்கும் எல்லா நேரமும் ஒரே மாதிரியான செலவுகள் வருவதில்லை. ஏற்ற தாழ்வுகள் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது.
ஆனால், ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் என்பது மிகவும் குறைந்தபட்ச தொகையில் அதாவது மாதம் 288 ரூபாய் முதல் அதிகபட்சம் 1000 ரூபாய் வரை செல்கிறது. எனவே, குறைவான வருமானம் பெறுவோரும் காப்பீடு பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக அவர்களது குடும்பத்தின் நிதி நிலைத்தன்மை பாதுகாக்கப்படுகிறது.
எதிர்பாராத நிகழ்வுகளைச் சமாளிக்க உதவும் அற்புத விளக்கு
உங்களுக்கு அற்புத விளக்கின் கதை பற்றி தெரிந்து இருக்கும். நமது சிறு வயதில் தாத்தா, பாட்டி வழியாக கேட்டு இருப்போம். அதன்படி நீங்கள் விரும்பும் ஒன்றை நினைத்து இந்த விளக்கை தேய்த்தால் நீங்கள் வேண்டிய பொருள் அல்லது எது வேண்டுமானாலும் உடனே கிடைத்துவிடும்.
மற்றொரு உதாரணத்தைக் கருதுவோம். யுவராஜ், ஒரு நடுத்தர வருமானம் பெறும் நபர். அவருக்கு திருமணம் ஆகி ஒரு பள்ளி செல்லும் குழந்தை உள்ளது. எதிர்பாராத நிகழ்வில் அவரது மனைவி, பிள்ளை எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வார்கள்?
ஒருவேளை யுவராஜ் தனது நடுத்தர வருமானத்தில் குறைந்தபட்ச தொகையான மாதம் 490 ரூபாயை குறிப்பிட்ட காலம் சேமித்து வைத்து இருந்தார் என்றால் அவரது குடும்பத்திற்கு 1 கோடி வரை பணம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ஆம். அந்த அற்புத விளக்கு டெர்ம் இன்சூரன்ஸ். இப்போது யுவராஜின் மனைவி யாரையும் எதிர்பார்க்காமல் தனது குழந்தையின் படிப்பு, திருமணம் போன்ற தேவைகளை எளிதாக குழந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப செய்ய முடியும்.
முடிவுரை மாதம் 475 ரூபாய் முதலீடு செய்து 1 கோடி ரூபாய் வருமானம் அளிக்கும் டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி அனைத்தையும் தெளிவாக ffreedom ஆப் வழியாக அறிந்துகொள்ளுங்கள்.