குறைந்த முதலீட்டில் தொழிலதிபரான இல்லத்தரசி
வாசவி இம்மாந்தி ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு ஊக்கமளிக்கும் பெண்மணி, அவர் சாக்லேட் தயாரிப்பதில் மாறாத ஆர்வம் கொண்டவர். 8 ஆம் வகுப்பு படித்த இல்லத்தரசியாக இருந்த போதும், ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக வேண்டும் என்ற தனது கனவைத் தொடர்ந்து, தனது குடும்பத்தை நிதி ரீதியாக ஆதரிக்க வேண்டும் எனும் தனது இலக்கை அவர் விட்டுவிடவில்லை.
Boss Wallah வாயிலாக மூல தனம், கடன்கள், பதிவு, அரசாங்க ஆதரவு, சந்தைப்படுத்தல், தேவை மற்றும் வழங்கல், விற்பனை வழிகள், வாடிக்கையாளர் தக்கவைப்பு மற்றும் விலை நிர்ணயம் உள்ளிட்ட வீட்டு அடிப்படையிலான சாக்லேட் தயாரிப்பின் அத்தியாவசியங்களைப் பற்றி வாசவி கற்றுக்கொண்டார். அவர் 4,000 ரூ முதலீடு செய்து அச்சுகள், சாக்லேட் கலவை, ரேப்பர்கள் மற்றும் ஸ்பிரிங்க்லர்கள் மற்றும் 1 கிலோ சாக்லேட்டைத் தயாரித்து, அதை அவர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சுமார் ரூ. 800 வரை விற்பனை செய்தார்.
அவரது பாலில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் நல்ல வரவேற்பைப் பெற்றதால், வாசவி பிற உணவுப் பொருட்களையும் தனது வணிகத்தில் சேர்த்து விரிவுபடுத்த முடிவு செய்தார். இந்த ஆப் வாயிலாக ரேப்பிங் செய்வதையும் கற்றுக்கொண்டார் மற்றும் உள்ளூரில் சாக்லேட்டுகளைக் கிலோ கணக்கில் விற்க ஆரம்பித்தார்.
இமயம் தொடும் இல்லத்தரசி
வாசவி இம்மாந்தி, எட்டாம் வகுப்பு படித்த இல்லத்தரசி, Boss Wallah-ல் இருந்து சாக்லேட் தயாரிப்பைக் கற்றுக்கொண்டார் மற்றும் வெற்றிகரமான வீட்டிலிருந்தபடியே சாக்லேட் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினார். அவர் தனது தயாரிப்புகளை விரிவுபடுத்துகிறார் மற்றும் ஆப் வாயிலாக ஸ்னாக்ஸ் தயாரித்தல் மற்றும் பேக்கேஜிங் பற்றி கற்றுக்கொண்டார். அவரது உறுதியும் ஆதாரங்களும் கல்வி மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீட்டு அடிப்படையிலான வணிகங்களுக்கு ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டுகளாக உள்ளது.
அவர் ஒரு செய்தி சேனல் விளம்பரம் வாயிலாக Boss Wallah பற்றி அறிந்தார். இந்த ஆப் வழங்கும் பல வகையை தனிநபர் நிதி மேலாண்மை, வணிகம் மற்றும் விவசாயக் கோர்ஸ் இந்தத் துறைகளில் சாதிக்க விரும்பும் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு தேவையான வழிகாட்டுதலை அளிக்கிறது. மேலும், இன்றைய காலகட்டத்தில் ஹோம் மேட் தயாரிப்புகளுக்கு தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். எனவே, ஹோம் மேட் சாக்லேட் தொழிலைத் தொடங்குவதற்கான வாய்ப்பை உணர்ந்த வாசவி சாக்லேட் தயாரித்தல், வணிகத் தேவைகள், முதலீடுகள், மார்க்கெட்டிங், விற்பனைச் சேனல்கள், வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பு மற்றும் விலை நிர்ணயம் போன்ற தகவல்களை ffreedom app வாயிலாக கற்றுக்கொண்டார்.
சாதிக்க படிப்பு ஒரு தடையல்ல – தேவை ஆர்வம் மற்றும் விடாமுயற்சி
வாசவி, சொந்தத் தொழிலைத் தொடங்க விரும்பும் இல்லத்தரசிகளுக்கு உண்மையான உத்வேகமாக திகழ்கிறார். வீட்டு வேலைகள், மாலை நேரங்களில் பகுதி நேரமாக வேலை என இருந்தபோதும் உங்கள் கனவுகளை நனவாக்கி வெற்றியை அடைவது சாத்தியம் தான் என்பதை வாசவி தனது விடா முயற்சி மற்றும் பேரார்வத்தின் வாயிலாக நிரூபித்துள்ளார். வாசவியின் கதை மன உறுதிக்கும் கடின உழைப்புக்கும் சான்றாக உள்ளது.
எனவே, உங்களிடம் ஒரு தொழில்முனைவோர் கனவு இருந்தால் அதை விடாமல் முயற்சி செய்வதற்கான திறனும் நம்பிக்கையும் இருந்தால் படிப்பு என்பது ஒரு ஏட்டளவு மட்டுமே. உங்கள் ஆர்வமே வாய்ப்புகளை அறிந்து பின்பற்றுவதற்கான ஊக்கத்தையும் வழியையும் உங்களுக்கு அளிக்கும் என்பதே வாசவியின் கதை உணர்த்துகிறது.
Boss Wallah, வாசவி போன்ற எளிய இல்லத்தரசி முதல் நிபுணர் வரை அனைவருக்கும் தேவையான உத்திகள் மற்றும் நுட்பங்களை எளிய உள்ளடக்கங்கள், செயல்முறை வழி வீடியோக்கள் வாயிலாக அவர்கள் தெரிந்துகொள்ள உதவுகிறது.