உங்களது மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவாவது காய்கறி மற்றும் பழங்கள் கொண்ட உணவாக மாற்றுவது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என மருத்துவர்கள், உணவியல் வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால் நமது உடல் பாகங்கள் சீராக செயல்பட தேவையான அனைத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. நமது உடல் சீராக செய்யப்பட தேவையான வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. எனவே, காய்கறி மற்றும் பழங்கள் உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது, புற்றுநோய் வராமல் தடுக்கிறது மற்றும் ஜீரண செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
பொதுவாக, சைவ உணவு உண்பவர்களுக்கு பக்கவாதம், இதய நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால், காய்கறி, பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நமது உடலால் எளிதாக உறிஞ்சிக்கொள்ளப் படுகின்றன. மேலும், அவை சீக்கிரம் ரத்தத்தில் கலந்து நமது உடலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
இயற்கை ஆர்வலர்கள் பெரும்பாலும் சமைக்கப்படாத உணவுகள் உண்பது நமது உடலின் செயல்பாடுகள் சீராக இருக்கவும் நோய் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கவும் பெரிதும் உதவும் என்று கூறுகின்றனர்.
ஆப்பிள் இருந்தால் அங்கு மருத்துவர் செல்வதில்லை
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. “An Apple a Day Keeps Doctor Away” இதன் பொருள் தினம் ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை இருக்காது என்பதே ஆகும். அந்த அளவிற்கு ஆப்பிளில் ஊட்டச்சத்துக்கள் (புரதம், நார்ச்சத்து மற்றும் கார்போஹைரேட்டுகள்) உள்ளன.
உங்கள் மேனியைப் பளபளப்பாக்கும் பச்சைப் பொருள்
உங்கள் உடலின் ரத்தத்தை தூய்மைப்படுத்தி இரும்பு தாதுச்சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் C நிறைந்த சாத்துக்குடி. மேலும், இது உடல் தணிக்கிறது. ஜலதோஷத்தை நீக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.
இந்த கேரட் மலிவானது தங்கத்தை விட அதிக பலன்களைக் கொண்டது
உங்களுக்கு கண்கள் நன்றாக உள்ளதா? தொலைதூர பொருட்களை நன்றாக பார்க்க முடிகிறதா? கேரட். வைட்டமின் A நிறைந்து இருப்பதால் உங்கள் பார்வையை மேம்படுத்துகிறது. நோய்எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது. மேலும், இனப்பெருக்கம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
புற்றுநோய் தடுக்கும் லைகோபீன் நிறைந்த லைப் சேவர் – தக்காளி
லைகோபீன் நிறைந்த இந்தச் சிவப்பு காய்கறி உங்களுக்கு இதயநோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. இரும்புச்சத்து உள்ளீர்க்க உதவும் வைட்டமின் C, இரத்த உறைதலில் உதவும் வைட்டமின் K மற்றும் நரம்பு சமிக்கை கடத்தல் மற்றும் எலும்பு தேய்மானத்தை குறைக்க உதவும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.
டைப் 2 டயாபடீஸை எதிர்க்கும் ஊதா காய்கறி
டைப் 2 டயாபடீஸ், குணப்படுத்த முடியாத இந்த நோயைத் தடுக்கும் ஆற்றல் ஊதா நிற காய்கறியான பீட்ரூட்டுக்கு உள்ளது. ஏனென்றால் இதில் நிறைந்துள்ள வைட்டமின் K சர்க்கரை நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும், நைட்ரேட்கள் நிறைந்த இந்தக் காய்கறி நமது உடலின் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது.
என்றும் இளமையாக இருக்க உதவும் நிறம்
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் C உங்கள் செல் சிதைவைத் தடுக்க உதவுகிறது. உங்கள் உடல் கொலாஜென் உற்பத்தி செய்ய உதவுகிறது. கொலாஜென் உடலின் காயங்களை ஆற்றும் திறன் கொண்டது.
வைட்டமின் C நிறைந்து இருப்பதால் உணவில் உள்ள இரும்புச்சத்தை எளிதாக உறிஞ்சி இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக உங்களைப் பாதுகாக்கிறது.
அதிக உடல் எடையைக் கத்தரிக்கும் காய்
கத்தரிக்காய், இந்த அடர்நீல காய்கறி உங்கள் ரத்த சர்க்கரை அளவு மற்றும் உடல் எடையைக் குறைக்கவும், நார்ச்சத்து நிறைந்திருப்பதால் குடலின் இயக்கத்தை அதிகரிக்கிறது. போலேட் நிறைந்திருப்பதால் உங்கள் ரத்த அணுக்களை அதிகரிக்கிறது. குறைந்த சோடியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது, ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்து இருப்பதால் புற்றுநோயைத் தடுக்கிறது.
மாற்றங்கள் நிகழ்த்தும் மாதுளை
உடலின் வீக்கத்தைக் குறைக்கும் புனிகலஜின்கள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகக் கல்லைத் தடுக்கும் ஆன்டிஆக்சிடெண்டுகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாலிபினால்கள், தொற்று எதிர்ப்பு திறன் மற்றும் உடற்பயிற்சி நேரத்தை அதிகரிக்கும் பாலிபினால்கள் நிறைந்துள்ளது.
முடிவுரை காய்கறி மற்றும் பழ வணிகத்தைத் தொடங்க தேவையான அனைத்து தகவல்களையும் ffreedom ஆப் வழியாக தெளிவாகவும் விரிவாகவும் அறிந்துகொண்டோம்.