லாபம் தரும் ஒருங்கிணைந்த விவசாயம்
வினய் குமார் சவ்வா, தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், சோலிபேட்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பி.காம் பட்டதாரி. ஆரம்பத்தில் ஹார்டுவேர் நிறுவனத்தை நடத்தியுள்ளார். தனியார் நிறுவனத்தில் பத்து வருடங்கள் பணியாற்றி உள்ளார். எனினும், விவசாயத்தின் மீது மாறாத ஆர்வம் கொண்ட இவர், விவசாயத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் தனது பண்ணையில் பணியாளர், காலநிலை, நோய் தாக்குதல், போதிய அறிவுத்திறன் இல்லாதது போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். அவர் ffreedom app-யைப் பதிவிறக்கி குழுசேர்ந்து, அதில் ஒருங்கிணைந்த பண்ணை, தேனீ வளர்ப்பு, வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு, ஜீரோ-பட்ஜெட் ஃபார்மிங் மற்றும் பால் பண்ணை பற்றி கற்றுக்கொண்டார்.
பின்னர், தனது 26 ஏக்கர் நிலத்தில் 70 வகையான இலை காய்கறிகள், கால்நடை (25 மாடுகள்), தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு (20 முதல் 120 கோழிகள்). இத்துடன் நின்றுவிடாமல் எக்சாட்டிக் (Exotic) காய்கறிகள் (செர்ரி தக்காளிகள், புரோக்கோலி, பேபி கார்ன்), பழங்கள் (கம்ராக் எனப்படும் நட்சத்திரப் பழம், லாங்சா, மங்குஸ்தான்) போன்றவற்றையும் வளர்க்கிறார். கூடுதலாக, பசுக்கள், கோழிகள், மீன் வளர்ப்பையும் மேற்கொண்டு வருகிறார்.
கலக்கலான வருமானம் தரும் கலப்பு விவசாயம்
வினய் குமார் சவ்வா, பாரம்பரிய விவசாயிகள் போலில்லாமல் பல வகை பயிர்கள், தேனீ, கால்நடை, கோழிகள் மற்றும் மீன் வளர்ப்பு என அனைத்தையும் ஒருங்கிணைத்து தனது 26 ஏக்கர் நிலத்தில் வெற்றிகரமாக செய்து வருகிறார். இவற்றின் வாயிலாக ஒரு ஆண்டில் 10 லட்சங்கள் வரை சம்பாதிக்கிறார். ஒருங்கிணைந்த விவசாயத்தில் பெற்ற நம்பிக்கையால் தனது ஒருங்கிணைந்த விவசாயத்தை வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, புறா வளர்ப்பு மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு என விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.
வினய் குமார் சவ்வா, ஒருங்கிணைந்த விவசாயத்தின் திறன் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். பிற விவசாயிகளும் கோழி, பசு, தேனீ, பட்டுப்புழு, முத்து வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் மஷ்ரூம் வளர்ப்பு என ஒருங்கிணைந்த விவசாயம் தொடங்க ஊக்குவிக்கிறார். இவை அனைத்தும் நாள் ஒன்றுக்கு பல மடங்கு வருமானம் அளிக்கும் சிறப்பான விவசாய முறைகள் ஆகும். மேற்சொன்ன அனைத்து முறைகளும் உங்களுக்கு ஒரு அன்றாட வருமானம் அளிக்கும் திறன் கொண்டவை. ஒன்றில் நட்டம் அடைந்தாலும் மற்றொன்றில் லாபம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதால் லாபம் பெறுவது உறுதி.
நிலையான வாழ்க்கைக்கு ஒருங்கிணைந்த விவசாயம்
வினய் குமார் சவ்வா, ஒருங்கிணைந்த விவசாயத்தில் தான் பெற்ற வெற்றிக்கு ffreedom app தான் என்று உறுதியாக நம்புகிறார். பிற விவசாயிகளுக்கும் ffreedom app தனது ஒருங்கிணைந்த விவசாயத்தில் எப்போது நடவு செய்ய வேண்டும், விதைப்பது, பயிர்கள் மற்றும் துணைப்பொருட்களின் சந்தைப்படுத்தல், அறுவடை, சேமித்து வைத்தல் போன்றவற்றில் தான் பெற்ற அறிவுத்திறனை விளக்கி கூறுகிறார்.
மேலும், எதிர்காலத்தில் நமக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நாம் பின்பற்ற வேண்டிய புதுமையான விவசாய நடைமுறையான ஒருங்கிணைந்த விவசாயத்தின் முக்கியத்துவத்தை வினய் குமார் சவ்வா பிற விவசாயிகளுக்கு எடுத்து கூறுகிறார். மேலும், பசுக்களை வளர்க்க சிரமப்படும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த விவசாயத்தின் பெறக்கூடிய உபரி பொருட்களான பயிர் கழிவுகள், காய்கறி கழிவுகள் வாயிலாக பசுக்களுக்கு எளிதாக உணவளிக்கலாம் என்றும் உணர்த்துகிறார்.
“வாடிக்கையாளர் வெற்றியே எங்களது குறிக்கோள், நாங்கள் மேம்படுவதை தொடர்ந்து உறுதிப்படுத்த வழிகாட்டி எதிர்பார்ப்புகளைத் தாண்டி செல்ல உதவுகிறது.” – ffreedom app