தொழில்முனைவோர் என்றதும் நம் நினைவிற்கு வருவது யார்? டாடா, பிர்லா, அம்பானி மற்றும் அதானி போன்ற நபர்கள் தான். நீங்கள் என்றாவது ஒரு நாள் ஏன் பெண் தொழில்முனைவோர் நம் நினைவிற்கு வரவில்லை என்று யோசித்ததுண்டா? ஏனென்றால் நமது நாட்டில் பயோகான் நிறுவனர் கிரண் மசும்தார் ஷா போன்ற பெண் தொழில்முனைவோர்களும் இருக்கிறார்கள். சமூகமும் சரி மக்களும் சரி அவர்களை அந்த அளவிற்குப் பெரிதாக எண்ணுவதில்லை.
இது சமூகத்தின் தவறோ மக்களின் தவறோ அல்ல. நமது இந்திய பாரம்பரியம் அப்படி உள்ளது. ஆண் தான் சம்பாதிக்க வேண்டும். பெண் வீட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்னும் பழங்கால எண்ணமே காரணமாக உள்ளது.
எனினும் நமது இந்திய பெண்கள் தடைகளைத் தகர்த்து தங்களை வெற்றிகரமான தொழில்முனைவோராக நிலைநிறுத்திக்கொண்டுள்ளனர். எ.கா. பயோகான் நிறுவனர் கிரண் மசும்தார் ஷா, VLCC யின் நிறுவனர் வந்தனா லூத்ரா, பார்க் ஹோட்டல்களின் தலைவர் பிரியா பால் போன்றவர்கள் அவர்களில் ஒரு சிலர்.
துணிந்து நில், எதையும் வெல்
ஆண்கள் மட்டுமே தொழில் தொடங்கி வந்த காலத்தில் இன்றைய முன்னணி உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பயோகானைத் தொடங்கினார் ஒரு பெண். அவர்தான் கிரண் மசும்தார் ஷா. உங்களால் நம்ப முடியாது இன்று 1.1 பில்லியன் வருமானம் ஈட்டும் பயோகான் நிறுவனம் ஒரு கார் ஷெட்டில் தொடங்கப்பட்டது.
அன்றைய நாளில் தடையில்லா மின்சாரம், தரமான நீர், தொற்றுநீக்கப்பட்ட ஆய்வகங்கள், இறக்குமதி செய்யப்பட்ட ஆராய்ச்சி உபகரணங்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்கள் அறிந்த தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருந்தபோதிலும் தன் முயற்சி, ஆர்வம் காரணமாக ஒரே ஆண்டில் 20 ஏக்கர் அளவிற்கு பயோகான் நிறுவனத்தை விரிவுபடுத்தினார்.
அன்றைய காலகட்டத்தில் பல்வேறு தொழிற்சாலை செயல்முறைகளுக்கு அதாவது நொதித்தல், உணவு பேக்கிங் மற்றும் ஜவுளி தொழிற்சாலைகளில் உயிரி பொருட்களான என்சைம்களுக்கு அதிக தேவை இருந்தது. அயர்லாந்தைச் சேர்ந்த பயோகான் பயோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பயிற்சி மேலாளராக பணிபுரிந்தார். பயோகான் பயோகெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவரான லெஸ்லி ஆச்சின்க்ளோஸுக்கு பப்பாளி தாவரத்தின் பப்பாயின் (Papain) (இறைச்சியை மென்மையாக்க பயன்படும் நொதி) தயாரிக்க ஒரு இந்திய நிறுவனம் தேவைப்பட்டது.
முதலில் இந்த வாய்ப்பை மறுத்தாலும் பின்னர் உயிரி பொருட்களுக்கான எதிர்காலத் தேவையைச் சரியாக கணித்த கிரண் அவர்கள் நொதியைத் தயாரித்து தர ஒப்புக்கொண்டார். இன்று நான்கு பெரும் உயிரியல் பிரிவுகளில் பல வகையான உயிரி பொருட்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு நிறுவனத்தை வளர்த்தெடுத்துள்ளார்.
உங்கள் அழகு உலகை ஆளட்டும்
அழகு என்னும் வார்த்தையைக் கேட்கும்போது உங்கள் நினைவிற்கு வருவது என்ன? மலை, ஆறு, கடல், குழந்தைகள் மற்றும் பெண்கள். இதில் பெண்கள் இயற்கையான அழகைக் கொண்டவர்கள் என்றாலும் அவர்களை மேலும் அழகுபடுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் நையகா (Nykaa) பெண்களுக்கான அனைத்து பொருட்களையும் இணையத்தில் விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் பால்குனி நாயர் என்னும் பெண். இவர் கோடக் மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ஆக பணிபுரிந்தவர்.
தனது சொந்த பணத்தை முதலீடு செய்து தொடங்கினார். இன்று 2,000 பிராண்டுகளில் 200,000 தயாரிப்புகளை இணையத்தில் விற்கிறார். நிறுவனம் பொதுமைப்படுத்தப்பட்ட பிறகு இன்று இந்தியாவின் முதல் பெண் பில்லியனராக அறியப்படுகிறார்.
தடைக்கல்லைப் படிக்கல்லாக மாற்றுங்கள்
ஒரு ஆண் தொழில் தொடங்க போகிறேன் என்று சொன்னாலே உனக்கு அது சரியாக வராது. ஏதாவது ஒரு நல்ல வேலையில் சேர்ந்து மாத மாதம் ஒரு நிலையான வருமானத்தை உருவாக்கி கொள் என்று கூறும் நமது இந்திய சமூகத்தில் ஒரு பெண் தொழில் தொடங்க போகிறேன் என்று சொன்னால் என்னென்ன எதிர்விளைவுகள் ஏற்படும்? என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? பெண், எதிர்கொள்ளக்கூடிய முதல் கேள்வி குடும்பத்தை யார் கவனிப்பார்கள்? உன்னால் தனியாக அனைத்தையும் செய்து கொள்ள முடியுமா? தாமதமானால் யார் உனக்கு துணையாக வருவது? என்பது போன்ற பல கேள்விகள் எழும்.
ஒரு தொழில் தொடங்கும்முன் நீங்கள் செய்ய வேண்டியது அதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். அதாவது ஒன்றுவிடாமல் அனைத்தையும் நன்றாக தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக கொள்முதல், தொழிலாளர் மேலாண்மை, சம்பளம், சந்தைப்படுத்தல் மற்றும் வணிகத்தை அதிகரித்தல் என அனைத்தையும் பற்றி நன்றாக தெளிவாக ஐயம் இல்லாமல் தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் தன்னம்பிக்கை, பொறுமை, தன் ஊக்கம் போன்றவற்றை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.
திட்டமிடு, செயல்படுத்து மற்றும் வெற்றிபெறு
ஒரு தொழில் தொடங்குவது என்பது எளிதானது அல்ல. அதில் பல்வேறு சவால்கள் உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு வழியாக பார்ப்போம். காயத்ரி, ஒரு ஆடை தொழிலைத் தொடங்க விரும்புகிறார். முதலில் அவர் செய்ய வேண்டியது ஒரு சிறந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பது. நல்ல இடம் அமைந்து விட்டாலே பாதி வெற்றி பெற்றது போல. இரண்டாவது தரமான நூல் கொள்முதல். உங்கள் ஆடைகளின் தரம் நூலைச் சார்ந்து உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூன்றாவது, நீங்கள் யாருக்கு ஆடை தயாரிக்க போகிறீர்கள் என்பது. அதாவது, குழந்தைகளா (ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை), பெண்களா அல்லது ஆண்களா? என்பதை முடிவு செய்ய வேண்டும். நான்காவது, திறமையான தொழிலாளர்கள். உங்கள் ஆடைகளின் நேர்த்தி இவர்களைச் சார்ந்தே உள்ளது. மேலும், விற்பனை, வழங்கல் என அனைத்தும் தொழிலாளர்களைச் சார்ந்துள்ளது. ஐந்தாவது, தயாரித்த பொருட்களின் சந்தைப்படுத்தல். பிற நிறுவனத் தயாரிப்புகளில் இருந்து உங்கள் தயாரிப்பு எப்படி வேறுபடுகிறது? உங்கள் தயாரிப்பின் சிறப்பு அம்சங்கள் மற்றும் நல்ல விலை போன்றவற்றை நீங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.
உங்கள் நிதியை சிறப்பாக மேலாண்மை செய்வது கடைசி நேர குழப்பங்களைத் தவிர்த்து உங்கள் லாபத்தை அதிகரிக்கும். செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும். கொள்முதல், ஊதியம், இயக்க செலவுகள் என அனைத்திற்கும் தனித்தனியாக பதிவேடு வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். மேற்கண்டவாறு அனைத்தையும் திட்டமிட்டு செய்வது தொழில் வெற்றி பெற உதவும்.
முடிவுரை
ஒரு பெண் தொழில்முனைவோராக மாற தேவையான அனைத்து தகவல்கள், உத்திகள் மற்றும் நுட்பங்கள் பற்றி ffreedom ஆப் வழியாக அறிந்துகொண்டோ