Home » Latest Stories » வணிகம் » யூடியூப் படைப்புகளை உருவாக்குவதற்கான 7 அற்புதமான வழிகள்

யூடியூப் படைப்புகளை உருவாக்குவதற்கான 7 அற்புதமான வழிகள்

by Bharadwaj Rameshwar

முன்னுரை

யூடியூப் 15 வருடங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் ஆனால் தற்போதைய காலகட்டத்தில் யூடியூபில் இயங்குதளம் சிறப்பாகவும் வேகமாகவும் மிக வலுவாகவும் உள்ளது. யூடியூப் படைப்பாளராக மாறுவதன் மூலம் வருமானம் பெரும் வாய்ப்பும் அதிகரிப்பிக்கிறது. இந்தியாவில் யூடியூப் படைப்பாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். அதே போல் படைப்பாளர்களை விட அதில் இருக்கும் படைப்புகளும் அதன் மூலம் கற்றுக் கொள்பவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் யூடியூப் படைப்பாளராக மாற விரும்புபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் காத்திருக்கிறது. எப்படி யூடியூபில் உங்கள் படைப்புக்களை பதிவு செய்து தனித்தன்மை பெறுவது என்று இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

யூடியூபில் மிகவும் கோரப்பட்ட உள்ளடக்கம்

யூடியூபில் அதிகம் தேடப்பட்ட அல்லது கோரப்பட்ட உள்ளடக்கத்தை அறிந்து கொண்டு அதை உங்கள் உள்ளடக்கமாக மாற்றி அதில் இருந்து வருமானம் பெறலாம். குழந்தைகளுக்கான உள்ளடக்கமும் இசை வீடியோக்களும் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளன. 2022ஆம் ஆண்டில் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களைப் பார்க்கும்போது முதல் பத்து இடங்களில் உள்ள ஒவ்வொரு வீடியோவும் பாட்டு வீடியோவாகவோ அல்லது குழந்தைகளுக்கான பாடலாகவோ தான் அதிகம் இருக்கும். ஏன் என்றால் தற்போது குழந்தைகள் யூடியூபில் அவர்களுக்கான ரைம்ஸ் போன்றவற்றை அதிகம் காண்கிறார்கள்.

யூடியூபர்களுக்கான சிறந்த தலைப்புகள் 

யூடியூப் மூலம் உங்கள் படைப்புகளை வெளியிட உங்கள் தலைப்புகள் அனைவராலும் அதிக தேடப்படுவதாக இருக்க வேண்டும். அனைவராலும் விரும்பி பார்க்க கூடியதாக இருந்தால் உங்கள் படைப்புக்கு அதிக காணல் கிடைப்பதால் மூலம் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். மக்கள் தேடும் மிகவும் பிரபலமான சில தலைப்புகள் முக்கிய இடங்களுக்கு சுற்றுலா செல்லும் வ்லாக், அழகு சார்ந்த வீடியோக்கள், பொழுதுபோக்கு வீடியோக்கள், பயிற்சி வீடியோக்கள், தயாரிப்புகளை உருவாக்குதல், எடை இழப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை, உடற்பயிற்சி குறிப்பு பற்றிய வீடியோக்கள், குழந்தைகள் விரும்பி பார்க்கும் வீடியோக்கள், லைஃப் ஹேக் மற்றும் DIY வீடியோக்கள். இது போன்ற வீடியோக்கள் மக்களால் அதிகம் விரும்பி  பார்க்க படுகிறது. இது போன்ற படைப்புகளை நீங்கள்  உருவாக்கினால் நீங்கள் யூடியூப் மூலம் வருமானம் பெரும் வாய்ப்புகளை பெறுவீர்கள்.

வீடியோ உருவாக்குவதற்கான அடிப்படை  தேவைகள் 

வீடியோக்களை பதிவு செய்து அதை முறையாக எடிட் செய்து உங்கள் யூடியூப் சேனலில் பதிவிடுவதற்கான அடிப்படை தேவைகள் பற்றியும் இதில் அறிந்து கொள்ளலாம். முதலில் உங்களுக்கு கேமரா தேவைப்படும் அதன் மூலம் மட்டுமே நீங்கள் உங்கள் படைப்புக்களை பதிவிட முடியும். பின்னர் உங்கள் படைப்பை சரியான வரிசையில் எடிட் செய்ய வேண்டும் அதாவது உங்கள் படைப்பு மக்களை கவரும் வண்ணம் இருக்க வேண்டும். அதன் பின் உங்கள் வீடியோவுக்கு சரியான தலைப்பை கொடுப்பதன் மூலம் மக்களின் தேடலில் அது முதல் பட்டியலில் வரும் வண்ணம் இருக்க  வேண்டும். எடிட் செய்முறை முடிந்தவுடன் உங்கள் படைப்பை யூடியூபில் பதிவிட வேண்டும் அதற்கு உங்களுக்கு யூடியூபில் ஒரு கணக்கு இருக்க வேண்டும் அது உங்கள் ஜிமெயில் கணக்காக இருக்க வேண்டும். அது தன யூடியூபில் உங்களுக்கு என்று தனி சேனல் உருவாக்க முக்கிய தேவையாக இருக்கிறது. உங்களுக்கென தனி கணக்கை திறந்த பின் உங்கள்  படைப்பை யூடியூபில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தான் ஒரு படைப்பை உருவாக்கி பதிவிட அடிப்படை செயல் முறையாகவும் தேவையாகவும் இருக்கிறது. 

யூடியூப் வீடியோவை உருவாக்குவதற்கான சில முறைகள்

யூடியூப் வீடியோ உருவாக்கும் உத்திகள் 

முதலில் உங்கள் தனிப்பட்ட தலைப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இது உங்கள்  தயாரிப்புக்கான முதல்  படியாக இருக்கிறது. பின்னர் உங்களுக்கான சரியான பார்வையாளர் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் பார்வையாளருக்கு என்ன தேவை என்றும் உங்கள் வீடியோ மூலம் அவர்கள் எப்படி கற்றுக் கொள்கிறார்கள் என்பது குறித்து நன்றாக அறிந்து கொள்ளுங்கள். உங்கள் வீடியோவின் மூலம் உங்கள் பார்வையாளருக்கு ஒரு முழுமையான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்பை தேர்ந்தெடுங்கள்.

உங்கள் வீடியோ யூடியூபில் இருப்பதை உறுதிசெய்யவும்

உங்கள் தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தின் மூலம் உங்கள் படைப்பு அதிக பார்வையாளர்களிடம் சென்றடைகிறதா என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமான செயலாக இருக்கிறது. உங்கள் உள்ளடக்கத்தை உதவிகரமாகவும் கண்டறிய கூடியதாகவும் மாற்றி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவை எங்கு கேட்கப்படுகின்றன என்பதைக் கவனியுங்கள். பின்னர் நீங்கள் சரியான உள்ளடக்கத்தை உருவாக்கி அது கிடைக்கும் இடத்தில் பதிவிடலாம்.

யூடியூப் யோசனைகள் மற்றும் தலைப்புகளைக் கண்டறியவும்

யூடியூப் தேடல் என்பது மக்கள் தேடுவதைக் கண்டறிய சிறந்த வழிகளில் ஒன்றாகும். உங்கள் உள்ளடக்க யோசனையுடன் வரும்போது விரைவான யூடியூப் தேடலைச் செய்து மீண்டும் என்ன வருகிறது என்பதைப் பார்க்கவும். தேடல் முடிவுகளை பார்த்து, அது நிறைவுற்ற பகுதியா அல்லது தனித்துவமான பகுதியை என்பதை அறிந்து மதிப்புமிக்க பதிப்பை உருவாக்கும் இடமாக இருக்கிறதா என்பதை தீர்மானிப்பது மிக அவசியமானதாக இருக்கிறது. வீடியோக்கள் மற்றும் ஆர்ட்டிகளின் கமெண்ட் பகுதி யூடியூப் வீடியோ தலைப்புகளுக்கு சிறந்த ஆதாரமாக இருக்கும். பார்வையாளர்கள் பெரும்பாலும் கூடுதல் தலைப்புகளைப் பரிந்துரைக்கும் அல்லது கூடுதல் உள்ளடக்கத்தை உருவாக்க கமெண்ட் பகுதிகளில் கேட்கிறார்கள் அதன் மூலம் உங்கள் தலைப்புகளை தேர்ந்தெடுக்க எளிதாக இருக்கிறது. உங்கள் பார்வையாளர்கள் என்ன தெரிந்து கொள்ள, கற்றுக்கொள்ள மற்றும் பார்க்க விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய இது ஒரு உறுதியான வழியாகும்.

ஆரம்ப நிலைக்கான யூடியூப் உபகரணங்கள் 

உங்கள் வீடியோவை உருவாக்குவதற்கான சரியான கருவிகள் உங்களிடம் இல்லை என உணர்வது அதிகமாகவும் எளிதாக இருக்கலாம். உயர்தர உபகரணங்களை வைத்திருப்பது வேடிக்கையானது மற்றும் சிறந்த சாதனங்கள் சிறந்த தரமான வீடியோவை உருவாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. அதே போன்று மிகவும் பிரத்யேகமான உபகரணங்களை இயக்குவதற்கு சிக்கலானதாகவும், தேர்ச்சி பெறுவதற்கு கணிசமான நேரமும் பயிற்சியும் தேவைப்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஸ்கிரீன் ரெக்கார்டிங் மென்பொருள், எளிய வீடியோ எடிட்டர் அல்லது ஸ்மார்ட்போன் மற்றும் சிறிதளவு படைப்பாற்றல் போன்றவற்றால் கூட நிறைய செய்ய முடியும். உங்களிடம் இருக்கும் இது போன்ற அடிப்படை உபகரணங்களை வைத்து யூடியூப் வீடியோக்கள் உருவாக்கலாம்.

உங்கள் வீடியோ பதிவை அமைக்கவும்

இப்போது உங்கள் பார்வையாளர்களை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் தலைப்புகளைத் திட்டமிட்டுள்ளீர்கள், மேலும் உங்கள் வீடியோவை உருவாக்க தொடங்குவதற்கான நேரம் இது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எடுக்கப்போகும் வீடியோக்கான ஸ்கிரிப்ட் அல்லது கதை மேலோட்டதை உருவாக்க வேண்டும். பின்னர் உங்களை நீங்களே பதிவு செய்யும் போது தவிர்க்க வேண்டிய முக்கிய தவறுகளில் ஒன்று, திரையில் மற்றும் வெளியே அதிக தேவையற்ற விஷயங்கள் இருப்பதை தவிர்க்க வேண்டும். வீடியோ எடுக்கும் போது அதிகம் பின் கேமராவை பயன்படுத்த வேண்டும் அதே போல் கேமராவை சரியான இடத்தில் பொருத்தி அதனை முறையாக சரி பார்க்க வேண்டும். அதே போல் உங்கள் இருப்பிடமும் அதன் பின்புறமும் சரியான முறையில்  தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் வீடியோவை எடிட் செய்யவும் 

உங்கள் வீடியோவை எடிட் செய்வது, உருவாக்கும் செயல்முறையின் மிகவும் வேடிக்கையாகவும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் பகுதியாகவும் இருக்கும். ஒரு தொடக்க காரருக்கு, இது நிச்சயமாக மிகவும் அதிகமாக இருக்கும். முதல் படியாக உங்கள் வீடியோவில் சேர்ப்பதற்கான பகுதிகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும் பின்னர் அந்த வீடியோவில் தேவைப்படும் பகுதியை மற்றும் எடிட்டர் மூலம் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும் கடைசியாக கட் செய்த அனைத்து வீடியோக்களையும் சரியான வரிசையில் ஒன்று சேர்த்து ஒரே ஒரே வீடியோவாக உருவாக்கவும். அதே போன்று உங்கள் வீடியோவின் ஒலி மற்றும் அதில் சேர்க்க வேண்டிய இசைகளை சரி பார்த்து இணைத்துக் கொள்ளவும். இது ஒரு வீடியோ எடிட் செய்வதற்கான அடிப்படை முறையாக இருக்கிறது.

உங்கள் வீடியோவை யூடியூபில் பதிவேற்றவும்

யூடியூபில் பதிவேற்றுவது எளிது. உங்கள் யூடியூப் வீடியோவை உருவாக்க கேம்டசியவைப் பயன்படுத்தினால், தயாரிப்பில் இருந்து நேரடியாக யூடியூபில் பகிர உங்களுக்கு எளிதாக இருக்கும் இருக்கும். யூடியூபில் உங்கள்  வீடியோவை பதிவேற்றம் செய்த பின் உங்கள் வீடியோவை அனைவரும் பார்க்கும் வண்ணம் அமைக்க சில தந்திரங்களை பயன்படுத்தி உங்கள் வீடியோவை தரவரிசை பட்டியலில் முதலில் நிறுத்துதல் மிக முக்கியமான படியாக இருக்கிறது.

முடிவுரை 

யூடியூபில் உங்கள் படைப்புகளை பதிவிடுவதன் மூலம் எப்படி அதிக லாபத்தையும் நிரந்தர வருமானத்தையும் பெற முடிகிறது என்று அறிந்து கொள்ள ffreedom app கொடுக்கும் யூடியூப் கோர்ஸ் – யூடியூப் படைப்பாளியாகி மாதம் 2 லட்சம் சம்பாதிக்கலாம் என்ற பாடத்திட்டத்தை வணிக பாடத்திட்டத்தின் மூலம் முழுவதுமாக கற்றுக் கொள்ளுங்கள்.

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.